இனிமேல் 3டி-யில் பிரிண்ட் எடுத்து உணவை அப்படியே சாப்பிடலாம்!!!

Posted By:
Subscribe to Boldsky

அறிவியல் எங்கே போகிறது என்று இனி யாராவது கேட்டால், மனிதர்களின் இயல்பு வாழ்க்கையையும், இயற்கை வாழ்க்கையையும் அழிக்க போகிறது என்று மிக பெருமையாகவும், கவுரவமாகவும் சொல்லிக்கொள்ளலாம். காகிதங்களை பிரதியெடுத்து எழுத கடினம் என்பதால் தான் XEROX மெஷின், பிரிண்டர் போன்றவைகளை பயன்படுத்தி வந்தோம்.

தயிர் உட்கொள்வதில் நீங்கள் செய்யும் இந்த தவறுகளால் உடல் எடை நிச்சயம் அதிகரிக்கும்!!!

ஆனால், இன்று அதற்கு அடுத்த படிக்கு சென்று விவசயம் செய்ய சோம்பேறித்தனமாக இருப்பதால், அதையும் 3டி-யில் பிரிண்ட் எடுத்து அப்படியே சாப்பிட்டுக் கொள்ளலாம் என முடிவெடுத்துவிட்டனர் மக்கள். ஏற்கனவே விவசாயம் செய்ய நிலமும் இல்லை, விவசாயியும் இல்லை. இதில், முன்னேற்றுவர்கள் என்று பார்த்தால், குழி தோண்டி புதைக்க, அறிவியல் ஏற்பாடுகள் செய்துக் கொண்டிருக்குகிறது.

முடி உதிர்வை அதிகரிக்கும் உணவுகள் - உஷார் ஆண்களே!!

நாம் ஆங்கில படங்களில் பார்த்தவை எல்லாம், கண்முன்னே நடந்துக் கொண்டிருப்பது, அழிவை முன்னிறுத்துகிறதோ என்ற அச்சத்தையும் ஏற்படுத்துகிறது. இனி, 3டி உணவு உற்பத்தி பற்றி காணலாம்....

இரத்த வகைகளும்... அதற்கான சரியான டயட்டும்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உணவுப் பொருள் உற்பத்தியில் புரட்சி

உணவுப் பொருள் உற்பத்தியில் புரட்சி

3டி பிரிண்டரை பயன்படுத்தி உணவுப்பொருள்கள் உற்பத்தி செய்வது, வேளாண்மையில் பாதிப்பும், உணவுப் பொருள் உற்பத்தியில் ஓர் பெரும் புரட்சியையும் ஏற்படுத்தும் என்பதில் எள்ளளவும் மாற்று கருத்து இல்லாதது ஆகும்.

10 வருடங்களுக்குள்

10 வருடங்களுக்குள்

இனி வரப்போகும் 10-20 ஆண்டுகளுக்குள் 3டி பிரிண்டர் முறையில் உணவுப் பொருள் தயாரிப்புகள் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இராணுவத்திற்கு பயனளிக்கும்

இராணுவத்திற்கு பயனளிக்கும்

இந்த புரட்சி முறை, இராணுவத்திற்கு சிறந்த பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போர் நடக்கும் இடங்களில், வீரர்களுக்கு உணவு தயாரித்து வழங்குவது மிகவும் கடினம். இது வீரர்களையும் பாதிக்கும். எனவே, 3 பிரிண்டர் உணவு உற்பத்தி தொடங்கினால், இதற்கு ஓர் சிறந்த தேர்வு காண முடியும் என உலக நாடுகள் நம்புகின்றன.

ஐ.எப்.டி 15 சிம்போசியம்

ஐ.எப்.டி 15 சிம்போசியம்

உணவு தொழிநுட்ப நிறுவனம் (Institute of Food Technology) சிகாகோவில் நடத்திய சர்வதேச ஐ.எப்.டி. 15 சிம்போசியத்தில் 3டி பிரிண்டர் மூலம் வரும் காலத்தில் உணவுப் பொருள் உற்பத்தி செய்வதை பற்றி முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.

3டி பிரிண்டர் விலை

3டி பிரிண்டர் விலை

1980-களில் ஐந்து லட்சம் டாலர்களில் இருந்த இதன் விலை இப்போது வெறும் ஆயிரம் டாலர்கள் தான் என்ற நிலைக்கு வந்துவிட்டது. இது கைக்கடக்கமான வகையிலும், வீட்டிலே பயன்படுத்தும் அளவிற்கும் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் தயாரிக்கப்படவில்லை

இன்னும் தயாரிக்கப்படவில்லை

இது வரையிலும் 3டி பிரிண்டிங் தயாரிப்பில் இருப்பவர்கள் யாரும் உணவுப் பொருள் உற்பத்தியில் இறங்கவில்லை. ஆனால், வரும் காலத்தில் உற்பத்தி செய்ய முடிவெடுத்துள்ளனர். இது, மிக விரைவாக உணவு தயாரிக்க உதவும் என்று கூறுகிறார்கள். இதனால் நிறைய பேர் பயனடைவார்கள் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

நிபுணர் கருத்து

நிபுணர் கருத்து

"நீங்கள் எந்த துறையை சார்ந்தவராக இருப்பினும், உங்கள் துறையினுள் 3டி பிரிண்டரின் புகுதல் எதிர்காலத்தில் இருக்கும்" என்று கொலம்பியா பல்கலைகழகத்தின் பேராசிரியர் லிப்சன் கூறியிருக்கிறார்.

2025 - 2030

2025 - 2030

2025 - 2030 ஆண்டுகளுக்குள் அமெரிக்க இராணுவத்தில் 3டி பிரிண்டிங் உணவு உற்பத்தி தொடங்கப்படும் என்றும், இது ருசியாகவும், ஊட்டச்சத்து மிக்கதாகவும் இருக்கும் என கூறுகிறார்கள்

பணம் செழிக்கும் கருவி

பணம் செழிக்கும் கருவி

எதிர்காலத்தில் 3டி பிரிண்டர் பணம் செழிக்கும் கருவியாக இருக்கும் எனவும், இதை வைத்து நிறைய லாபம் அடையலாம் என்றும் கூறுகிறார்கள்.

3டி பிரிண்டரின் அபாயம்

3டி பிரிண்டரின் அபாயம்

சில மாதங்களுக்கு முன்பு, ஓர் இளைஞன் 3டி பிரிண்டர் மூலம் அவனே துப்பாக்கி தயாரித்து கொலை செய்து போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் உலகையே உலுக்கியது. இதுப் போல இந்த கருவியின் மூலம் பல அபாயங்களும் ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன.

கட்டுப்பாடு, தடை தேவை

கட்டுப்பாடு, தடை தேவை

இந்த 3டி பிரிண்டர்களை பயன்படுத்த கடுமையான கட்டுபாடுகளும், தடைகளும் இருக்க வேண்டும் இல்லையேல்,இது பெரும் விபரீதத்தில் கொண்டுவிட்டுவிடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

3D Printers Poised To Have Major Implications For Food Manufacturing

3D printers poised to have major implications for food manufacturing,
Subscribe Newsletter