Latest Updates
-
Gandhi Jayanti 2026: மகாத்மா காந்தியை பற்றி நமக்கு தெரியுமா? ஆனால் அவர் படிப்பில் எப்படிப்பட்டவர் தெரியுமா? -
மீல் மேக்கர் பிரியாணியை இப்படி செய்யுங்க.. மட்டன் பிரியாணியே தோத்துடும்.. -
4 கத்திரிக்காய் இருந்தா செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாதிரி மிளகு குழம்பு செய்யுங்க - டேஸ்ட் அருமையா இருக்கும் -
International Day of Older Persons: பெற்றோர், முதியோருக்கான சுகாதார பராமரிப்பில் புதிய அணுகுமுறை - ஏன் அவசியம் -
குரு-செவ்வாய் கூட்டணி.. அக்டோபர் 31 வரை இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
Personality Test: அக்டோபர் மாதத்தில் பிறந்தவர்களிடம் இருக்கும் நல்ல மற்றும் தீய குணங்கள் என்னென்ன தெரியுமா? -
நீரிழிவு நரம்பியல் பாதிப்பு என்றால் என்ன? அதன் ஆரம்ப கால அறிகுறிகள் என்ன? -
1 கைப்பிடி கொத்தமல்லியும், வேர்க்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, சப்பாத்திக்கு அள்ளும்.. -
அக்டோபர் 01 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களின் ஆரோக்கியத்தில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பிருக்காம் -
October Month Rasi Palan 2026: அக்டோபர் மாதம் துலாம் முதல் மீனம் வரை எப்படி இருக்கும்? ஜோதிடர் கணிப்பு!
எடை அதிகரிப்பதை தடுத்து பசியைப் போக்கும் சில ஆரோக்கியமான ஸ்நாக்ஸ்கள்!!!
யாராலும் பொறுத்துக் கொள்ள முடியாத பலவீனமாக இருப்பது பசி தான். மனிதனின் அடிப்படிடைத் தேவைகளில் முதன்மையானது உணவு என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். உணவு உட்கொள்ளாமல் நீண்ட காலம் இருப்பதன் காரணமாக ஊட்டச்சத்துக் குறைபாடுகள், களைப்பு, சோர்வு போன்றவை ஏற்படும். இது தீவிரமடையும் போது உடலின் முக்கியமான பகுதிகளெல்லாம் கூட செயலற்றதாகி விடும்.
இன்றைய நாட்களில், நாம் நம்முடைய தினசரி வாழ்க்கையில் மும்முரமாக இயங்கி வருகிறோம். எனவே தான் முறையான சாப்பாடு சாப்பிட கூட நமக்கு நேரம் இருப்பதில்லை. இதன் காரணமாகவே நமக்கு நாமே பல சுகாதார சீர்கேடுகளை வரவழைத்துக் கொள்கிறோம். பசியுடன் இருப்போம், திடீரென கிடைத்ததை சாப்பிடுவோம், அதுவும் கூட ஆரோக்கியமானதாக இருக்காது. பசியின் காரணமாகவே பாஸ்ட் ஃபுட், ஆயத்த உணவுகள் மற்றும் அடைக்கப்பட்ட உணவுகளை நாம் அதிகம் சாப்பிடத் தொடங்குகிறோம். இது போன்ற சுகாதாரமற்ற உணவுகளை சாப்பிடுவதற்கு பதிலாக, ஆரோக்கியத்தைத் தரும் நொறுக்குத்தீனிகளை சாப்பிட்டு உடலையும் நலமாக, பலமாக பாதுகாக்கும் வழிகளை இங்கே கொடுத்துள்ளோம். இவற்றைப் பற்றி தெரிந்து கொள்ள மேற்கொண்டு படியுங்கள்...

பழங்கள், பழச்சாறுகள்
'நாளுக்கு ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், மருத்துவரிடமிருந்து விலகி இருக்கலாம்' என்ற பழமொழியை மிகவும் தீவிரமாக பின்பற்ற வேண்டும். ஆப்பிள் மட்டுமல்லாமல், வாழைப்பழம், சிட்ரஸ் பழங்கள் (ஆரஞ்சு, சாத்துக்குடி, அன்னாசி, எலுமிச்சை) போன்றவற்றையும் சாப்பிட்டு பசியை விரட்டி விடலாம். பல்வேறு வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் ஆதாரமாக பழங்கள் உள்ளதால் அவை பசியை எளிதில் விரட்டுகின்றன. மேலும், எளிதில் கிடைக்கும் பழச்சாறுகளையும் குடித்து பசியை தீர்க்கலாம்.

ஒரு கோப்பை சூப்
ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஆரோக்கியமான உணவாக சூப்புகள் உள்ளன. எந்தவொரு காய்கறியிலிருந்தும் எளிதில் தயாரிக்கும் வகையில் சூப்கள் உள்ளன. சிறிதளவு காய்கறிகளை வெட்டி எடுத்து, உப்பு மற்றும் மிளகுத்தூளுடன் சேர்த்து தண்ணீரில் கொதிக்க வைத்தால், எளிமையான, சுவையான, ஆரோக்கியமான சூப் ரெடி. பாதாம் சூப், கார்ன் சூப், தக்காளி சூப் மற்றும் பல ஆரோக்கியமான சூப் வகைகளையும் இதே முறையில் தயாரிக்கலாம். இந்த எளிய சூப்களை தயாரித்து சாப்பிட்டு நீங்கள் பசியை ஆரோக்கியமாக தணிக்கலாம்.

அவசர சாண்ட்விச்
சாண்ட்விச்சுகளை மிகவும் எளிமையாகவும், வேகமாகவும் தயாரிக்க முடியும். உங்களுக்குத் தேவையானதெல்லாம் ஒரு பாக்கெட் பிரட், சில காய்கறிகள், சாண்ட்விச் ஸ்பிரெட் ஆகியவையே. இதனை நீங்கள் காரமாகவும், இனிப்பாகவும் மற்றும் உங்களுக்கு விருப்பமான காய்கறிகளைக் கொண்டும் எளிதில் செய்ய முடியும். டோஃபு, காளான் மற்றும் பன்னீர் போன்றவற்றைக் கொண்டும் நீங்கள் சாண்ட்விச் தயாரிக்க முடியும். பசியை உடனடியாகத் தணிக்கும் ஆரோக்கியமான உணவாக சாண்ட்விச் உள்ளது. கோதுமை இல்லாத பிரட், அதிகமான வெண்ணெய் போன்றவற்றைக் கொண்டு செய்யப்படும் சாண்ட்விச் ஆரோக்கியமானது கிடையாது.

பால் மற்றும் பால் பொருட்கள்
வெண்ணெய் எடுக்கப்பட்ட அல்லது நிறமிப்படுத்தப்பட்ட ஒரு கோப்பை பால் என்பது உடலிலுள்ள அதிகபட்ச கொழுப்புகளை குறைக்கும் வல்லமை பெற்ற உணவாகும். மேலும் லஸ்ஸி, மில்க் ஷேக், தயிர், மோர் மற்றும் சீம்பால் ஆகியவை பசியைத் தீர்க்கும் ஆரோக்கியமான உணவுகளாகவும், உடலுக்கு நன்மை பயப்பனவாகவும் உள்ளன. பால் மற்றும் முட்டை ஆகிய இரண்டும் பசியை உடனடியாக எதிர்கொள்ளும் உணவுகளாகும். முட்டையை வேக வைத்தோ, வறுத்தோ அல்லது அப்படியோ குடிக்கவோ செய்யலாம்.

சாலட்
நிறைய காய்கறிகளைக் கொண்டு சாலட் தயாரிப்பது மிகவும் எளிமையான பணியாகும். சிறிதளவு மிளகு, மிளகாய் தூள் மற்றும் ஒரிகனோவை போட்டு நீங்கள் செய்யும் சாலட்-ஐ நாக்கில் எச்சில் ஊறச் செய்யும், சத்தான பசி உணவாக சாப்பிடலாம். நிறைய ஊட்டச்சத்துக்களும், கார்போஹைட்ரேட்களும் உள்ள உணவாக சாலட்கள் உள்ளன. எனவே பசியுடன் சுகாதரமற்ற உணவுகளை சாப்பிடுவதை விட்டு மேற்சொன்ன ஆரோக்கியமான உணவுகளை தேர்ந்தெடுத்து உண்டு மகிழுங்கள்.
மேலே சொன்ன சில உணவுகளை எப்பொழுது வேண்டுமானாலும், எங்கே வேண்டுமானாலும் சாப்பிட முடியும். மேலும் இவை தயாரிப்பதற்கு ஏற்ற வகையில் எல்லா இடங்களிலும் கிடைக்கின்றன. இந்த ஆரோக்கியமான உணவுகளை காரம் மற்றும் கீரைகளுடன் சேர்த்து சாப்பிட முயற்சி செய்து பாருங்கள். இந்த உணவுகள் உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதுடன், சுவையாகவும் இருக்கும்.



Click it and Unblock the Notifications
