For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடுமையான ஒற்றைத் தலைவலியா? இந்த உணவுகளை சாப்பிடுங்க...

By Maha
|

அனைவருக்கும் பொதுவாக இருக்கும் உடல் பிரச்சனைகளில் தலைவலியும் ஒன்று. அதிலும் ஒற்றைத் தலைவலி தான் மிகவும் கொடியது. நிறைய மக்கள் இந்த ஒற்றை தலைவலியால் வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை உள்ளாவார்கள். இவ்வாறு தலை வலி வந்தால், உடனே அதனை போக்க பெரும்பாலானோர் மாத்திரைகளை சாப்பிடுவார்கள். சில நேரங்களில் இந்த தலைவலியால் மயக்கம், வாந்தி மற்றும் சோர்வு போன்றவை ஏற்படும். பின் எந்த ஒரு வேலையையும் சரியாக செய்ய முடியாதவாறு உடலானது பலவீனமடைந்துவிடும்.

பொதுவாக இந்த தலைவலி ஏற்படுவதற்கு நரம்பு மண்டலத்திற்கும், வாஸ்குலார் மண்டலத்திற்கும் இடையே உள்ள செயல்பாட்டில் ஏற்படும் ஒருவித மாற்றம் காரணம். அதுமட்டுமின்றி மூளை செல்களில் ஏற்படும் ஒருவித வித்தியாசமும் தலைவலியை உண்டாக்கும். இந்த மாதிரியான தலைவலியை குறைக்க பல வழிகள். ஒன்று மாத்திரை எடுப்பது, மற்றொன்று உணவுகளின் மூலம் சரிசெய்வது.

சொல்லப்போனால், மாத்திரைகளை விட உணவுகள் தான் எப்போதும் சிறந்தது. எனவே இந்த தலைவலியை குறைக்கும் உணவுகளை சாப்பிட்டு, பின் சிறிது நேரம் ஓய்வான நிம்மதியான தூக்கத்தை மேற்கொண்டால், தலைவலியை சரிசெய்துவிடலாம். இப்போது அந்த ஒற்றைத் தலைவலியை போக்க எந்த உணவுகள் உதவுகிறது என்று பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கீரைகள்

கீரைகள்

கீரைகளில் மக்னீசியம் சத்து அதிகம் உள்ளது. இந்த சத்து கடுமையான ஒற்றைத் தலைவலியை குணப்படுத்தும் தன்மையுடையது. அதுமட்டுமின்றி இந்த சத்துக்கள் நவதானியங்கள், கடல் உணவுகள் போன்றவற்றிலும் அதிகம் நிறைந்துள்ளது.

மீன்

மீன்

கடல் உணவுகளில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மற்றும் வைட்டமின்கள் அதிகம் நிறைந்துள்ளது. இவற்றை சாப்பிட்டால், இதில் உள்ள ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட், ஒற்றைத் தலைவலியால் உடலினுள் ஏற்படும் உள்காயங்களை குணப்படுத்தும்.

பால்

பால்

பாலிலும் தலைவலியை குறைக்கும் தன்மை உள்ளது. அதிலும் பாலில் உள்ள வைட்டமின் பி என்னும் ரிபோஃப்ளேவின், உயிரணுவின் ஆற்றலை அதிகரிக்கும். உயிரணுவின் ஆற்றலானது குறைவதால் தான் ஒற்றை தலைவலியே உண்டாகிறது.

ஆளி விதை

ஆளி விதை

இந்த சிறிய விதையில் ஒற்றைத் தலைவலியை கட்டுப்படுத்தும் சத்துக்களான ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மற்றும் நார்ச்சத்து அதிக அளவில் உள்ளது.

காபி

காபி

உண்மையில் தலை வலிக்கும் போது ஒரு கப் காபி குடித்தால், தலைவலியானது குணமாகிவிடும். அதிலும் குறைவான அளவில் மட்டும் காபியை குடித்தால், அதில் உள்ள காப்ஃபைன் என்னும் பொருள் தலைவலியைக் கட்டுப்படுத்தும்.

ரெட் ஒயின்

ரெட் ஒயின்

தைரமின் என்னும் ஆன்டி-ஆசிட் ஒயின் மற்றும் பீரில் அதிகம் உள்ளது. எனவே ஒரு டம்ளர் ரெட் ஒயின் அல்லது பீர் குடித்தால், கடுமையான ஒற்றை தலைவலியை சரிசெய்ய முடியும்.

தினை (millet)

தினை (millet)

முழு தானியங்களில் நார்ச்சத்து, ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் உள்ளது. எனவே முழு தானியங்கள் மற்றும் தினையை சாப்பிடுவது நல்லது.

ப்ராக்கோலி

ப்ராக்கோலி

பச்சை இலைக் காய்கறிகளில் ஒன்றான ப்ராக்கோலியில் மக்னீசியம் சத்து அதிகமாக நிறைந்துள்ளது. ஆகவே ப்ராக்கோலியை வேக வைத்து, அத்துடன் சிறிது மிளகுத்தூள் மற்றும் உப்பை சேர்த்து சாப்பிட வேண்டும்.

இஞ்சி

இஞ்சி

ஆயுர்வேதத்தில் அதிகம் பயன்படும் இஞ்சியானது தலை வலியைக் குணப்படுத்தும் தன்மையுடையது. எனவே தலை வலிக்கும் போது, உண்ணும் உணவில் சிறிது இஞ்சியை சேர்த்து சாப்பிட்டால், தலைவலியை குறைக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

9 Foods To Cure Migraine Headache | கடுமையான ஒற்றைத் தலைவலியா? இந்த உணவுகளை சாப்பிடுங்க...

There are many foods that can trigger migraine headache but there are few foods that can help you cure this disorder. Check out the list of foods that can cure migraine headache.
Story first published: Tuesday, January 8, 2013, 10:29 [IST]
Desktop Bottom Promotion