மனச்சோர்வை விரட்டியடிக்கக்கூடிய 10 சிறந்த உணவு வகைகள்!!!

By Maha

ஒருவரின் நல்வாழ்வுக்கு சவால் விடுக்கும் அல்லது பயத்தைக் கொடுக்கும் எந்த ஒரு விஷயமும் அவருக்கு மனச்சோர்வைக் கொடுக்கக்கூடியதே. ஆனால் இவற்றுள் சில வகை மனச்சோர்வுகள் அவர் தம் வாழ்வை சுவாரஸ்யமாக்கி, கடின உழைப்புக்கு வித்திடக் கூடியதாக இருக்கும். இத்தகைய மனச்சோர்வுகள் கட்டாயமாக தேவையான ஒன்றே. ஆனால் இவையே நம் உடலையும் மனதையும் பாதிக்கும் அளவுக்குச் செல்ல நேரிட்டால் அது நிச்சயம் அபாயகரமானதே.

அதிலும் மனச்சோர்வு உங்கள் இன்ப வாழ்வை குலைக்கின்றதா? பல மணிநேரம் பிடிக்கக்கூடிய உடற்பயிற்சிகள் மூலம் மன அழுத்தத்தைக் குறைக்க முற்பட்டு நீங்கள் சோர்வடைந்து விட்டீர்களா? கவலையை விடுங்கள். மனச்சோர்வைக் குறைப்பதற்கு பல எளிய வழிகள் உள்ளன.

அதில் தியானம் மற்றும் யோகா ஆகியவை மட்டுமே மனச்சோர்விலிருந்து விடுபடச் செய்யும் அருமருந்துகள் என்று எண்ணிவிடாதீர்கள். உணவுமுறைகளின் மூலமும் மன அழுத்தத்தைப் போக்கலாம். அத்தகைய உணவு முறையில் கீழே பட்டியலிடப்பட்டுள்ள 10 சிறந்த உணவு வகைகளை சேர்த்துக் கொள்வதன் மூலம் மனச்சோர்வை விரட்டியடித்து மகிழ்ச்சிகரமான வாழ்வைப் பெறலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பச்சைக் காய்கறிகள்

பச்சைக் காய்கறிகள்

ப்ராக்கோலி, பரட்டைக் கீரை மற்றும் பசலைக் கீரை போன்றவை மனச்சோர்விலிருந்து உடலை மீட்டெடுக்கக் கூடியவையாகும். ப்ராக்கோலியில், படபடப்பு மற்றும் பதற்றம் போன்ற உணர்வுகளை நீர்த்துப் போகச் செய்து, உடல் மற்றும் மனதை சாந்தமடையச் செய்யக்கூடிய வைட்டமின் பி சத்து நிறைந்துள்ளது. வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் இ, வைட்டமின் கே, பொட்டாசியம் மற்றும் இரும்புச்சத்து போன்ற சத்துக்கள் நிறைந்த பசலைக்கீரை, ஒற்றைத் தலைவலி மற்றும் அயர்ச்சியைப் போக்க உதவுகிறது.

நட்ஸ்

நட்ஸ்

பாதாம் மூளைக்கு நன்மை பயக்கக்கூடியவை. அதோடு மனச்சோர்வுக்கு எதிராகப் போராடுவதற்கும் உதவக்கூடியவை. பாதாமில், மனநிலையை இலகுவாக்கி, மனச்சோர்வுக்கு எதிராகப் போராடக்கூடிய வைட்டமின் பி2, வைட்டமின் இ, மக்னீசியம் மற்றும் ஜிங்க் சத்துக்கள் நிறைந்துள்ளன. வால்நட் மற்றும் பிஸ்தா இரத்த அழுத்தத்தைக் குறைத்து, மனச்சோர்வை அண்டவிடாமல் காக்கக் கூடியவையாகும்.

வான்கோழி

வான்கோழி

உடலில் செரோட்டோனின் அளவை உயர்த்தக்கூடியதான ட்ரிப்டோஃபன் என்ற அமினோ ஆசிட்டை அபரிமிதமாகக் கொண்டிருக்கும் வான்கோழி, மனச்சோர்விலிருந்து சிறந்த நிவாரணம் அளிக்கக்கூடியதாகும்.

ஆப்ரிக்காட்

ஆப்ரிக்காட்

ஆப்ரிக்காட்டில், தசை நரம்புகளை இயற்கையிலேயே தளர்த்தக்கூடியதும், மனச்சோர்விலிருந்து நிவாரணம் அளிக்கக்கூடியதுமான மக்னீசியம் சத்து நிறைந்துள்ளது. மேலும் இதில் மனநிலையை இலகுவாக்கி, மனதை சாந்தப்படுத்தக்கூடிய வைட்டமின் சி சத்தும் நிறைந்துள்ளது.

டார்க் சாக்லெட்

டார்க் சாக்லெட்

டார்க் சாக்லெட்கள் மனச்சோர்வைக் குறைக்க உதவுகின்றன என்பது விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ள உண்மையாகும். மன நிலையை லேசாக்கி, மனச்சோர்வுக்கு எதிராகப் போராடக்கூடிய ஆற்றல் வாய்ந்ததான செரோடோனின் என்ற சுரப்பின் அளவை அதிகரிக்கும் சர்க்கரைச் சத்தும் இதில் காணப்படுகிறது.

ஆரஞ்சு

ஆரஞ்சு

ஆரஞ்சு, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி மனச்சோர்வை குறைக்கவல்லதான வைட்டமின் சி சத்தின் மூலாதாரமாகத் திகழ்வதோடல்லாமல், மனச்சோர்வு மிகுந்த ஒரு சூழலில், மனச்சோர்வை உண்டாக்கும் ஹார்மோனாகிய கார்டிஸோலின் சுரப்பைக் குறைக்க உதவி செய்து, இரத்த அழுத்தத்தை இயல்பு நிலைக்குக் கொண்டு வருவதற்கும் உதவி புரிகின்றன.

மீன்

மீன்

சூரை, வஞ்சிரம் மற்றும் நெத்திலி போன்ற மீன் வகைகள் அபார சுவை கொண்டவை மட்டுமல்ல. இவை உடலில் சுரக்கக்கூடிய அட்ரினலினை சரியான அளவில் வைத்திருக்க உதவுவதன் மூலம் அமைதியாகவும், பதற்றமின்றியும் வைத்திருக்கவும் உதவக் கூடியவையாகும். மேலும் இது அபரிமிதமான புரதச்சத்தை உடலுக்கு வழங்குவதோடல்லாமல், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களின் பிரதான மூலாதாரமாகவும் திகழும் மீன் வகைகள், செரோட்டோனின் அளவை உயர்த்தி, மன உளைச்சலைக் களைய பேருதவி புரிகின்றன.

அஸ்பாரகஸ்

அஸ்பாரகஸ்

அஸ்பாரகஸ், மனச்சோர்விலிருந்து பாதுகாப்பளித்து, மன நிலையை லேசாக்கக் கூடியவையான ஃபோலேட் மற்றும் வைட்டமின் பி ஆகியவற்றின் தலைசிறந்த மூலாதாரமாக விளங்குகின்றது. ஃபோலேட், மனச்சோர்வின் அளவை குறைக்கக் கூடியவையான நியூரோ டிரான்ஸ்மிட்டர்ஸ் டோபமைன், செரோடோனின் மற்றும் நோரெபிநெஃப்ரின் போன்றவற்றின் இணைப்பிற்கு மிகவும் முக்கியமானதாக உணவியல் வல்லுநர்களால் நம்பப்படுகிறது.

அவகேடோ மற்றும் வாழைப்பழம்

அவகேடோ மற்றும் வாழைப்பழம்

அவகேடோ மற்றும் வாழைப்பழம் ஆகியவற்றில் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்கக் கூடியதான பொட்டாசியம் சத்து நிரம்பியுள்ளது. இவை ஆற்றலை அதிகரித்து, சுறுசுறுப்பாகவும், உற்சாகமாகவும் வைத்திருக்க உதவும்.

பாஸ்தா மற்றும் முழு தானிய அரிசி

பாஸ்தா மற்றும் முழு தானிய அரிசி

சற்றே சிக்கலான மாவுப்பொருளான முழு தானியங்கள் மெதுவாக செரிமானமாவதால், இவை உடலுக்கு நீண்ட நேரத்திற்கு சக்தியளிக்கும். இவை செரோடோனின் சுரப்பை அதிகரித்து, இரத்த அழுத்தத்தை நிலைப்படுத்துவதன் மூலம் உங்களை சாந்தமாகவும், ஆசுவாசமான மனநிலையுடனும் வைத்திருக்க உதவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Sunday, September 22, 2013, 13:07 [IST]
Desktop Bottom Promotion