For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உடலுக்கு குளிர்ச்சியூட்டும் எள் எண்ணெய்

By Mayura Akilan
|

Sesame Oil
தென்னிந்தியாவில் அதிகமாக சமையலுக்குப் பயன்படுத்தப்படும் நல்லெண்ணெய், உணவுப்பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் பயன்படுகிறது. நல்லெண்ணெயில் உள்ள லெசித்தின் எ‌ன்ற பொரு‌ள் ரத்தத்தில் இரு‌க்கு‌ம் அ‌திக‌ப்படியான கொழு‌ப்பை‌க் குறைக்கிறது.இதில் உள்ள லினோலிக் அமிலம்; ரத்தத்தில் இரு‌க்க வே‌ண்டிய நல்ல கொழு‌ப்பை அதிகரிக்கிறது. ந‌‌ல்லெ‌ண்ணெ‌ய் கு‌ளி‌ர்‌ச்‌சியை‌த் தருவதோடு ‌கிரு‌மி நா‌சி‌னியாகவு‌ம் உடலு‌க்கு‌ப் பய‌ன்படு‌கிறது. வெறு‌ம் வ‌யி‌ற்‌‌றி‌ல் ‌சி‌றிது ந‌ல்லெ‌ண்ணெ‌ய் குடி‌ப்பது குடலு‌க்கு‌ ந‌ல்லது. நல்லெண்ணெயை இயற்கை நமக்கு அளித்த கொடை என்று கூறலாம். இதற்கு அளவில்லாமல் தொடரும் இதன் நன்மைகளே காரணம்.

வைட்டமின் மற்றும் தாது உப்புகள்

நல்லெண்ணெயில் வைட்டமின் ஈ சத்து அதிகம் உள்ளதால் மிகச்சிறந்த ஆன்டி ஆக்சிடென்ட் ஆக செயல்படுகிறது. இது உடலில் கொழுப்பு சத்தை குறைத்து உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதை குறைக்கிறது.
நல்லெண்ணெயில் உள்ள துத்தநாகம், எலும்புகளை பலப்படுத்துகிறது. தாமிரம், கால்சியம், மெக்னீசியம் போன்ற தாது உப்புகள் உடல் நலத்திற்கு பயன்படுகிறது. மன அழுத்தத்தையும் போக்குகிறது.

இனிப்பு, கசப்பு, காரம்

நல்லெண்ணெய் சற்று கசப்பும், சிறிது இனிப்பும், காரத் தன்மையும் கொண்டது. எளிதாக சருமத்துக்குள் ஊடுருவக்கூடியது. ஆயுர்வேத மருத்துவத்தில் பல்வேறு நோய்களைப் போக்க நல்லெண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. நல்லெண்ணெய் சருமத்தின் ஈரப்பதத்தைச் சமப்படுத்துகிறது. அதனால் சருமம் மிருதுவாகவும், போஷாக்குடனும் திகழ உதவுகிறது.

வாரத்திற்கு ஒருமுறையாவது தலைக்கு நல்லெண்ணெய் தேய்த்து குளித்தால் உடல் சூடு குறையும். தலைமுடி வறட்சி நீங்கும். பொடுகு முற்றிலும் நீங்கும். நல்லெண்ணெய் புத்திக்கு தெளிவு, கண்ணுக்கு குளிர்ச்சி, உடல் பூரிப்பு, வலிமை ஆகியவற்றை தருகிறது. கண் நோய், தலைக் கொதிப்பு, சொரி, சிரங்கு, புண் முதலியவற்றை தணிக்கிறது.

கண்நோய்கள் நீங்கும்

நல்லெண்ணெயை தினமும் 2 இல்லது 3 தேக்கரண்டி சாப்பிட்டு வந்தால் உடல் பூரிக்கும். கோழி முட்டையின் வெள்ளைக் கருவுடன் நல்லெண்ணெய் கலந்து பருக்களின் மேல் பூசி வந்தால் கட்டிகளின் வலி நீங்கும். நல்லெண்ணெய் தேய்த்து குளித்து வந்தால், கண் சிவப்பு, கண் வலி, கண்ணில் நீர் வடிதல் மண்டைக் குத்தல் போன்றவை நீங்கும என்று பாரம்பரிய மருத்துவர்கள் கூறுகிறார்கள்

ஆயுள் புல்லிங்

உடலை மசாஜ் செய்வதில் நல்லெண்ணெயின் பங்கு முக்கியமானது. உடலுக்கு குளிர்ச்சியும் உள்ளத்திற்கு புத்துணர்வும் தருவதில் நல்லெண்ணெய்க்கு ஈடு இணையில்லை. சூரிய ஒளிக்கதிரினால் ஏற்படும் கொப்புளங்களைப் போக்குவதில் நல்லெண்ணெய் மருந்தாக செயல்படுகிறது. பாக்டீரியாகொல்லி, நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. பாதங்களில் ஏற்படும் பூஞ்சை நோய்களை போக்க வெண்ணீரில் சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி பாதத்தை கழுவினால் நோய் தீரும்.

ஆயுர்வேதத்தில் ஆயுல்புல்லிங் எனப்படும் மருத்துவமுறை உடலை உற்சாகமாக்குவதற்கு பயன்படுத்தப்படுகிறது. ஒரு கரண்டி எண்ணெயை சிறிதளவு வாயில் ஊற்றி நன்றாக நுரை வர கொப்பளித்து துப்பினால் பற்களும் ஈறும் பலப்படும். உடலுக்கும் புத்துணர்ச்சி தரும்.

English summary

Health benefits of sesame oil | உடலுக்கு குளிர்ச்சியூட்டும் எள் எண்ணெய்

Sesame oil has many benefits and is a great alternative medicine. It is considered to be very effective for lowering blood pressure levels and is used for skin and hair care.
Story first published: Wednesday, July 27, 2011, 18:25 [IST]
Desktop Bottom Promotion