Latest Updates
-
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும்
உடல் ஆரோக்கியத்திற்கு கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுச் சேர்க்கைகள் - பட்டியலிடும் ஃபிட்னஸ் கோச்!
Best Food Combinations: நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள தேவையான சத்துக்களை நாம் உண்ணும் உணவுகளான பழங்கள், காய்கறிகள் போன்றவை கொண்டுள்ளன. ஆனால் நாம் சாப்பிடும் உணவுகளில் உள்ள சத்துக்கள் முழுமையாக நமது உடலுக்கு கிடைக்கிறதா என்றால், இல்லை.
அதுவும் உணவுகளில் உள்ள சில முக்கியமான சத்துக்கள் நமது உடலுக்கு கிடைக்க வேண்டுமானால், அவற்றை சரியான உணவுகளுடன் சேர்த்து உட்கொள்ள வேண்டும். உதாரணமாக, எலும்புகளின் வலிமைக்கு தேவையான கால்சியம் உடலால் முழுமையாக உறிஞ்சப்பட வேண்டுமானால், வைட்டமின் டி உடன் சேர்த்து உட்கொள்ள வேண்டும்.

அப்படி உட்கொண்டால் தான் கால்சியம் முழுமையாக உடலால் உறிஞ்சப்படும். இது தவிர சில வகையான உணவுகளை குறிப்பிட்ட சில உணவுகளுடன் சேர்த்து உட்கொள்ளும் போது உடலுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கின்றன.
அப்படி உடல் ஆரோக்கியமாக இருக்கவும், உடலுக்கு வேண்டிய சத்துக்கள் முழுமையாக உடலால் உறிஞ்சப்படவும் எந்தெந்த உணவுகளை ஒன்றாக உட்கொள்ள வேண்டும் என்பதை ஃபிட்னஸ் கோச்சான ரால்ஸ்டன் டி'சோசா தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அது என்னவென்பதைக் காண்போம். அதில் அவர் கூறியதாவது,
1. தர்பூசணி மற்றும் உப்பு
"தர்பூசணி பழங்களுடன் உப்பு சேர்த்து சாப்பிடும் போது தர்பூசணியில் உள்ள பொட்டாசியம், உப்பில் உள்ள சோடியத்துடன் ஒன்றிணைந்து, உடலில் எலக்ட்ரோலைட்டுக்களை சமநிலையில் பராமரிக்க உதவுகிறது." என்று கூறினார்.
2. பாதாம் மற்றும் டார்க் சாக்லேட்
"பாதாமை டார்க் சாக்லேட்டுடன் சேர்த்து சாப்பிடும் போது, பாதாமில் உள்ள ஆரோக்கியமான கொழுப்புக்கள் மற்றும் வைட்டமின் ஈ, டார்க் சாக்லேட்டில் உள்ள ப்ளேவோனால்களுடன் ஒன்றிணைந்து, ஆன்டி-ஆக்ஸிடன்ட் செயல்பாட்டை அதிகரித்து, இதய ஆரோக்கியத்திற்கு ஆதரவளிக்கிறது." என்று கூறினார்.
3. ஓட்ஸ் மற்றும் தயிர்
"ஓட்ஸை தயிருடன் சேர்த்து ஊற வைத்து உட்கொள்ளும் போது, ஓட்ஸில் உள்ள ப்ரீ-பயோடிக் க்ளுக்கன், தயிரில் உள்ள புரோபயோடிக்குடன் சேர்ந்து, நல்ல குடல் பாக்டீரியாக்களை அதிகரித்து, குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன." என்று கூறினார்.
4. ப்ராக்கோலி மற்றும் கடுகு
"ப்ராக்கோலியை கடுகு சேர்த்து தாளித்து வதக்கி சாப்பிடும் போது, கடுகில் உள்ள நொதிகள் சல்போரபேன் என்னும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளின் செயல்பாட்டை அதிகரிப்பதோடு, உறிஞ்ச உதவுகிறது." என்று கூறியுள்ளார்.
5. க்ரீன் டீ மற்றும் எலுமிச்சை
"க்ரீன் டீயுடன் எலுமிச்சை சாற்றினை பிழிந்து குடிக்கும் போது, எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி, க்ரீன் டீயில் உள்ள சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளான கேட்டசின்களை உறிஞ்ச உதவுகிறது." என்று கூறினார்.
எனவே நண்பர்களே, இதுவரை நீங்கள் இந்த காம்பினேஷனில் உணவுகளை உட்கொண்டதில்லை என்றால், இனிமேல் உடல் ஆரோக்கியமாக இருக்க இந்த காம்பினேஷன் உணவுகளை அதிகம் உட்கொண்டு வாருங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications

