Latest Updates
-
கொங்கு ஸ்பெஷல் பீர்க்கங்காய் கடலை சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - இட்லி, தோசைக்கு அருமையா இருக்கும் -
உலகின் மிகவும் விலையுயர்ந்த அரிசி எது? அதன் விலை என்ன தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
4 முட்டை இருந்தா இந்த சைனீஸ் ஸ்டைல் தவா வறுவலை செஞ்சு பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
கப்பல்கள் என்ன எரிபொருளை பயன்படுத்துகின்றன தெரியுமா? பெட்ரோலும் இல்லையாம், டீசலும் இல்லையாம்... -
முகலாய ஸ்டைல் வெஜ் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - அசைவ பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
1/4 கிலோ மட்டன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு தண்ணி குழம்பு வையுங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செப்டம்பர் 27, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (27 September 2026- 26 October 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்! -
4 முட்டை இருந்தா.. இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு செமயா இருக்கும்.. -
நீங்க இந்த தேதிகளில் பிறந்தவங்களா? அப்ப 40 வயசுக்கு அப்புறம் உங்களுக்கு குபேர யோகம் தான்!
உங்ககிட்ட இந்த 7 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உங்க உடல் ஆரோக்கியமா இல்லன்னு அர்த்தம்.. உஷார்..
Unhealthy Body Signs In Tamil: ஃபிட்னஸ் என்பது ஒவ்வொருவருக்கும் மிகவும் இன்றியமையாதது. நமது உடல் நன்கு ஃபிட்டாகவும், ஆரோக்கியமாகவும் இருந்தால் தான், தினசரி செயல்பாடுகளை சிறப்பாக செய்ய முடியும் மற்றும் நீண்ட காலம் நோயின்றி ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்க்கையை வாழ முடியும். ஆனால் தற்போது நிறைய பேர் தினசரி உடல் வலி, உடல் சோர்வு போன்ற பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்கின்றனர்.

மேலும் அப்படி சந்திக்கும் ஆரோக்கிய பிரச்சனைகளை கவனிக்காமல் சாதாரணமாக நினைத்து விட்டுவிடுகின்றனர். ஆனால் ஃபிட்னஸ் கோச் டான் கோவின் கூற்றுப்படி, ஒருவரது உடலில் குறிப்பிட்ட சில பிரச்சனைகள் தொடர்ந்து தெரிகிறது என்றால், அது உடலில் ஏதோ சரியில்லை என்பதை உணர்த்தும் அறிகுறிகளாக இருக்கலாம்.
இப்படியான பிரச்சனைகளை பலரும் தீவிரமடையும் வரை பெரும்பாலும் கவனிக்கப்படாமல் போகலாம். அப்படிப்பட்ட ஒருவர் ஒருபோதும் புறக்கணிக்கக்கூடாத சில அறிகுறிகள் குறித்து டான் கோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த அறிகுறிகள் பின்வருமாறு:
1. இடுப்பளவை உங்கள் உயரத்தில் பாதிக்கு குறைவாக வைத்திருங்கள்.
கோச் டானின் கூற்றுப்படி, பிஎம்ஐ-ஐ விட உங்கள் இடுப்பு-உயர விகிதமே வளர்சிதை மாற்ற ஆரோக்கியத்தின் சிறந்த குறிகாட்டியாகும். "உங்கள் இடுப்பின் அளவு உங்கள் உயரத்தில் பாதியை விட அதிகமாக இருந்தால், அது உங்கள் உறுப்புகளைச் சுற்றி உள்ளுறுப்புக் கொழுப்பு சேர்ந்திருப்பதற்கான ஒரு வலுவான அறிகுறியாகும்," என்று கூறியிருந்தார்.
2. ஈறுகளில் இரத்தக்கசிவு
பற்களை துலக்கும் போது இரத்தக்கசிவு ஏற்படுவது சாதாரணமானது அல்ல என்று கூறினார். மேலும் "ஆரோக்கியமான ஈறுகளில், சாதாரணமாகப் பல் துலக்கும் போது இரத்தம் வரக்கூடாது. உங்களுக்கு அப்படி வந்தால், உங்கள் பல் துலக்கும் டூத்பிரஷ்ஷை மட்டும் மாற்ற பார்க்காமல், உங்கள் ஒட்டுமொத்த ஈறுகளில் உள்ள அழற்சியின் அளவையும் கவனிக்க வேண்டும்," என்று கூறினார்.
3. சரும மருக்கள்
கழுத்து, அக்குள் போன்ற பகுதிகளில் சிறிய மருக்கள் வருவது அழகை கெடுப்பது போன்று இருக்கலாம். ஆனால் அவை இன்சுலின் எதிர்ப்புத்தன்மையுடன் தொடர்புடையவை. ஒருவேளை சருமத்தில் இந்த மருக்கள் அதிகமாக தோன்றுவதை கவனித்தால், இரத்த சர்க்கரை அளவை பரிசோதனை செய்து பார்ப்பது நல்லது என்று டான் கூறியிருந்தார்.
4. துர்நாற்றமிக்க வாயு வெளியேற்றம்
உடலில் இருந்து வாயு வெளியேறுவது என்பது சாதாரணமான ஒன்று. ஆனால் தொடர்ந்து துர்நாற்றமிக்க வாயு வெளியேறினால், குடல் ஆரோக்கியம் சரியில்லை என்பதன் அறிகுறியாக இருக்கலாம். இதற்கு நார்ச்சத்து நிறைந்த உணவை குறைவாக உட்கொள்வது இதன் முக்கிய காரணங்களுள் ஒன்றாக இருக்கலாம். இந்நிலையில் நார்ச்சத்து நிறைந்த உணவை உட்கொள்ள வேண்டும் என்று கூறினார்.
5. குறட்டை மற்றும் வாய் வழியாக சுவாசிப்பது
தூங்கும் போது பலர் குறட்டை விடுவார்கள். இப்படி தூங்கும் போது குறட்டை விடுவது அல்லது வாய் வழியாக சுவாசிப்பது, சுவாசப் பாதையின் செயல்பாட்டுக் குறைபாடு அல்லது தூக்கத்தில் மூச்சுத்திணறல் (ஸ்லீப் அப்னியா) இருப்பதைக் குறிக்கலாம் . அதுவும் லேசான குறட்டை கூட உங்களுக்குத் தெரியாமலேயே, உங்கள் உடல் மீட்சி, ஹார்மோன்கள் மற்றும் ஆற்றல் அளவுகளை அமைதியாகச் சீர்குலைக்கக்கூடும் என்று கோச் கூறியிருந்தார்.
6. மந்தமான மூளை
இரவு 7-9 மணிநேரம் நன்கு தூங்கி எழுந்த பின்னரும், மனதளவில் சோர்வாக உணர்ந்தால், அதை புறக்கணிக்காதீர்கள். இது இரத்தச் சர்க்கரை ஏற்ற இறக்கங்கள், தூக்கத்தின் தரம் குறைதல் அல்லது உங்கள் மூளையைப் பாதிக்கும் லேசான அழற்சி ஆகியவற்றைக் குறிக்கலாம் என்று கூறியுள்ளார்.
7. சிறு வேலைகளிலும் மூச்சுத்திணறல் ஏற்படுவது
மாடிப்படிகளை ஏறும் போது, சிறு தூரம் நடக்கும் போது அல்லது லேசான எடையுள்ள பொருட்களை தூக்கும் போது மூச்சு வாங்கினால், அது இதய ஆரோக்கியம் மோசமாக இருப்பதைக் குறிக்கலாம். அதுவும் மூச்சுத்திணறல் இன்னும் அதிகமாக ஏற்பட்டால், உங்கள் இதய ஆரோக்கியம் நீங்கள் நினைப்பதை விட மோசமாக இருக்க வாய்ப்புள்ளது என்று குறிப்பிட்டிருந்தார்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
