Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
சர்க்கரை நோயாளிகள் ஏன் HbA1C சோதனை செய்ய வேண்டும் - டாக்டர் ஃபருக்கின் 'நச்' விளக்கம்!
HbA1c Test In Tamil: உலகளவில் முக்கியமாக இந்தியாவில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. சர்க்கரை நோய் வந்துவிட்டால், அதை குணப்படுத்துவது என்பது முடியாது. வாழ்நாள் முழுவதும் அதற்கான மருந்துகளை உட்கொண்டு வர வேண்டியது அவசியம்.
அதே சமயம் பலருக்கு சர்க்கரை நோய் உள்ளதா இல்லையா என்பதை சரியாக அறிய எந்த பரிசோதனை செய்ய வேண்டும் என்பது தெரிவதில்லை. நிறைய பேர் சாதாரண இரத்த பரிசோதனையில் தெரிந்துவிடும் என்று நினைக்கிறார்கள், ஆனால் அது தவறு.

இந்நிலையில் சிவகங்கை அரசு மருத்துவமனை பொது நல மருத்துவர் டாக்டர் ஃபரூக் அப்துல்லா, தனது சமூக வலைதள பக்கத்தில் சர்க்கரை நோயாளிகளுக்கான HbA1C சோதனை குறித்து விரிவாக கூறியுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது, பொதுவாக நீரிழிவு இருப்பவர்களுக்கு காலை வெறும் வயிற்றில் (Fasting ) ஒரு முறையும், பிறகு உணவு முடித்ததும் இரண்டு மணிநேரம் கழித்து ஒருமுறையும் (PostPrandial) ரத்த பரிசோதனை செய்வது வழக்கம். ஆனால் இந்த இரு ரத்த பரிசோதனைகளை மட்டும் நம்பி இருந்தோமென்றால் நாம் ஏமாற்றப்படுவோம் எப்படி???
இந்த டெஸ்ட் எடுக்கும் நாளைக்கு முதல் நாள் இரவு மிகவும் குறைவாக உணவு உண்பது, பிறகு காலை உணவை குறைத்து உண்பது. அன்று மட்டும் தேனீருக்கு சர்க்கரை எடுக்காமல் இருப்பது போன்றவற்றை பல நீரிழிவு உள்ளவர்கள் தாங்கள் அறிந்தோ அறியாமலோ டெஸ்ட்டில் சர்க்கரை குறைவாக வர வேண்டும் என்று செய்கிறார்கள்.
மருத்துவரை சந்திக்கையில் மட்டும் ரத்த சர்க்கரை அளவுகள் குறைவாக வர வேண்டும் என்பது போன்ற ஒரு மாணவ-ஆசிரியர் மனப்பான்மையுடன் மருத்துவரை சந்திக்கின்றனர். அவர்கள் ஏமாற்றுவது மருத்துவரை என்று எண்ணிக்கொள்கின்றனர் ஆனால் அவர்கள் அவர்களையே தான் ஏமாற்றிக் கொள்கின்றனர். இந்த பிரச்சனையை சரிகட்ட கண்டறியப்பட்டதே HbA1C எனும் பரிசோதனை.
HbA1C பரிசோதனை என்றால் என்ன?
நமது ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்கள் 90-120 நாட்கள் ஆயுட்காலம் கொண்டவை. அதாவது ஒருமுறை தோன்றியதில் இருந்து 3 மாதங்கள் ரத்தத்தில் இருக்கும். இதில் ஹீமோகுளோபின் எனும் புரதம் கலந்திருப்பது அனைவரும் அறிந்ததே. இந்த ஹீமோகுளோபினின் இருப்பை வைத்துத் தான் ஒருவருக்கு ரத்த சோகை இருக்கிறதா? இல்லையா? என்பதைக் கூறுகிறோம்.
இந்த ஹீமோகுளோபின் நமது இதயம் மற்றும் நுரையீரலில் இருந்து ஆக்சிஜனை, மூளை மற்றும் பல உறுப்புகளுக்கும் உதிரம் எனும் நதியில் கொண்டு செல்லும் படகு போல் பயன்படுகிறது. இந்த ஹீமோகுளோபினில் ஒரு பகுதி - நமது ரத்தத்தில் உள்ள குளூக்கோசைக் கொண்டு உற்பத்தி செய்யப்படுகிறது. இதை glycosylated HEMOGLOBIN (க்ளூகோசால் உற்பத்தி செய்யப்பட்ட ஹீமோகுளோபின்) என்று அழைக்கிறோம்.
HbA1C ஐ கணக்கிடுவது மூலம் கடந்த மூன்று மாதங்கள் ஒருவரின் ரத்தத்தில் சர்க்கரை அளவுகள் எப்படி இருந்தன? என்பதை அறிய முடிகிறது. இந்த மூன்று மாத காலத்தில் அவர் எவ்வளவு சிறப்பாக உணவு முறை கட்டுப்பாட்டைக் கடைபிடித்தார் என்பதையும் அறிய முடியும். ஆகவே நீரிழிவு குறைபாடு இருப்பவர்கள் வருடம் மூன்று-நான்கு முறை HbA1C ஐ சோதனை செய்து பார்ப்பது நல்லது.
HbA1c பரிசோதனை செய்ய வெறும் வயிற்றில் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஒரு நாளின் எந்தப்பகுதியிலும் பரிசோதனைக்கு ரத்தம் கொடுக்கலாம். ஒருவருக்கு நீரிழிவு இருக்கிறதா? இல்லையா? என்பதை அறியும் லிட்மஸ் சோதனையில் முக்கியமானதாகவும் இது பயன்படுகிறது.
Hba1c சோதனை அளவுகள்
* 5.4-க்குள் இருந்தால் - நீரிழிவு இல்லை
* 5.5 முதல் 6.4% இருந்தால் - நீரிழிவுக்கு முந்தைய நிலை (Pre diabetes)
* 6.5% க்கு மேல் - நீரிழிவு
* 7 %க்குள் இருந்தால் - சிறந்த கட்டுப்பாடு (பல ஆய்வு முடிவுகள் கூறுவது யாதெனில் A1c 7க்குள் வைத்திருக்கும் மக்களுக்கு நீரிழிவால் ஏற்படும் சிறுநாள மற்றும் * பெருநாள பாதிப்புகள் வருவதில்லை என்பதே. எனவே நமது லட்சியம் A1cஐ ஏழுக்குள் வைத்திருப்பது என்பதாக இருத்தல் சிறந்தது.)
* 7% முதல் 8% - உடனே நடவடிக்கை எடுத்து அதை குறைப்பது நல்லது
* 8%க்கு மேல் Hba1c இருப்பது - நீரிழிவு நமது உடலுக்குள் வேண்டாத பல மாற்றங்களை உருவாக்கி நாளடைவில் பல பிரச்சனைகள் தோன்றிட வழிவகுக்கும்.
எனது சிறு அனுபவத்தில் நான் காணும் ரிப்போர்ட்களில் 20 முதல் 35 வயதுக்குட்பட்ட பலரும் Pre diabetes/diabetes உடன் கண்டறியப்படுகின்றனர். இன்னும் பலர் Hba1c 10க்கு மேல் கண்டறியப்படுகின்றனர்.
தெற்காசியர்களின் மரபணு மற்றும் தானியங்கள் சார்ந்த உணவு முறை பழக்கம் (EPIGENETICS) ஆகியவை நீரிழிவை சிகப்புக்கம்பளமிட்டு வரவேற்கின்றது. இதை கருத்தில் கொண்டு நீரிழிவு குறித்த நமது அறிவை இன்னும் வளர்த்துக் கொள்ள வேண்டும். Hba1cஐ கட்டுக்குள் வைக்க வேண்டும், என்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications











