Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
தலைக்கு குளிச்சா சளி பிடிக்கும் என்பது உண்மை தானா? டாக்டர் என்ன சொல்றாரு-ன்னு பாருங்க..
Head Bath And Cold: மழைக்காலம் தொடங்கிவிட்ட நிலையில், இதுவரை தலைக்கு வாரத்திற்கு 2-3 முறை குளித்து வந்தவர்கள், இனிமேல் வாரம் ஒருமுறை தலைக்கு குளிக்கும் பழக்கத்திற்கு மாறியிருப்பார்கள். இதற்கு காரணம் எங்கு தலைக்கு குளித்தால் சளி பிடித்துவிடுமோ என்ற ஒரு பயம் தான்.
மழை நேரத்தில் அல்லது பனி காலத்தில் தலைக்கு குளிச்சா சளி பிடிக்கும் என்று சின்ன வயதில் இருந்து நம் பாட்டிமார்கள் மற்றும் தாய்மார்கள் சொல்வதைக் கேட்டிருப்போம். அதற்கேற்ப சிலருக்கு தலைக்கு குளித்தால் இப்படி சளி பிடித்து அவதிப்பட வைக்கும்.

இதனால் இன்று வரை நிறைய பேர் இதை மனதில் கொண்டு குளிர்காலத்தில் அல்லது மழை காலத்தில் தலைக்கு குளிக்க யோசித்து வருவதுண்டு. உண்மையிலேயே தலைக்கு குளித்தால் சளி பிடிக்குமா? தலைக்கு குளிப்பதற்கும், சளி பிடிப்பதற்கும் தொடர்பு உள்ளதா? அல்லது இது கட்டுக்கதை தானா என்பது குறித்து டாக்டர் அருண்குமார் தனது இன்ஸ்டா பக்கத்தில் தெளிவாக விளக்கியுள்ளார். அது என்னவென்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
அதில் அவர் கூறியதாவது, "தலைக்கு குளித்தால் சளி பிடிக்குமா என்ற ஒரு கேள்வி உலகளவில் பெரும்பாலானோரின் மனதில் இருக்கும் ஒன்றாகும். இப்படி தலைக்கு குளிப்பதற்கும், சளி பிடிப்பதற்கும் என்ன தொடர்பை அறிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் குளித்து விட்டு, கை கால்கள் மிகவும் ஜில்லென்று இருக்கும் போது வெளியே சென்றால் சளி பிடிப்பதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக தெரிய வந்தது. அதில் எந்த வகையான சளி பிடித்தது என்பதை கவனிக்க வேண்டும்.
முதலில் சளியில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று கிருமி சளி, அழற்சி சளி. இதில் கிருமி சளி அதிகமாகுமா என்று இங்கிலாந்தில் உள்ள கார்டிப் பல்கலைகழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், இரண்டு குழுக்களாக மக்களை பிரித்து, ஒரு ப்ளூ சீசனில் ஒரு குழுவினரை தலைக்கு கூட குளிக்க சொல்லவில்லை, கை மற்றும் கால்களை ஜில் நீரில் ஒரு 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் அவர்களை கவனித்துள்ளனர்.
அதேப் போல் மற்றொரு குழுவினரை சாதாரணமாக வெளியே செல்ல அனுமதித்துள்ளனர். இந்த இரண்டு குழுக்களை ஒப்பிட்டு பார்க்கையில், கை கால்களை தொடர்ந்து நீரில் நனைத்த குழுவினருக்கு சளி பிடிப்பதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பது தெரிய வந்துள்ளது. இது எதனால் என்று பார்த்தால், பொதுவாக ஜில் நீரில் கை, கால்களை நனைக்கும் போது, உடலானது அந்த வெப்பநிலையை எடுத்துக் கொள்ளும்.
ஆனால் உடல் அதிகமாக குளிர்ச்சியாகாமல் இருக்க உடலில் ஆங்காங்கு இரத்தக்குழாய்கள் சுருங்கி, உடலின் வெப்பநிலை வெளியே செல்லாமல் பார்த்துக் கொள்ளும். இப்படி ப்ளூ சீசனில் வெளியே செல்லும் போது, இரத்தக்குழாய்கள் சுருங்கினால், உடலை ஏதேனும் கிருமிகள் தாக்கினாலும், இரத்த குழாய் சுருங்குவதால் வெள்ளையணுக்களால் கிருமிகளை எதிர்க்க முடியாமல் போய், தொற்று ஏற்படலாம். இருப்பினும், இதன் ஆபத்து குறைவு தான். எனவே தலைக்கு குளிப்பதால் கிருமி சளி பிடிக்கும் என்பதற்கான உறுதியான ஆராய்ச்சிகள் ஏதும் இல்லை." என்று கூறினார்.
அதே சமயம் அலர்ஜிக் ரைனைடிஸ் என்னும் அடிக்கடி தும்மல், அலர்ஜிக் சைனஸைடிஸ் என்னும் அழற்சியால் மூக்கடைப்பு அல்லது தலைவலி போன்றவற்றால் அவதிப்படுபவர்களை கொண்டு ஆய்வு செய்து பார்த்ததில், இவர்களின் தலைப்பகுதி குளிர்ச்சியாக்கும் போது மூளை அதிகமாக குளிர்ச்சியாகாமல் இருக்க உடம்பு சில பாதுகாப்பு செயல்முறையை மேற்கொள்கிறது. அது என்னவெனில், உள்ளே இருக்கக்கூடிய எத்மாய்டு மற்றும் ஸ்பீனாய்டு சைனஸ் சுரப்பியின் வழிப்பாதை மூடிக் கொண்டு, அதன் விளைவாக உள்ளேயே சுரப்புகள் சேர்ந்து கொள்ளும். இதன் காரணமாக தான் நிறைய பேர் தலைக்கு குளித்த பின் தலை பாரத்தை சந்திக்கின்றனர். எனவே ஏற்கனவே அழற்சி உள்ளவர்கள் ஜில் நீரில் தலைக்கு குளிக்கும் போது, தும்மல், மூக்கடைப்பு போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தலாம்." என்று கூறினார்.
"மொத்தத்தில் தலைக்கு குளித்தால் சளி பிடிக்குமா என்றால், கிரும சளி பெரிதளவில் பிடிக்க வாய்ப்பில்லை. ஆனால் அழற்சி இருப்பவர்கள் குளிக்கும் போது, சளியின் அறிகுறிகளை தற்காலிகமாக 1-2 மணிநேரம் சந்திக்க நேரிடும்." என்றும் டாக்டர் அருண்குணமார் கூறினார்.
எனவே நண்பர்களே, உங்களுக்கு அழற்சி பிரச்சனைகள் இருந்தால், குளிர் அல்லது மழை காலத்தில் தலைக்கு குளிக்கும் போது, சளியின் அறிகுறிகளை ஓரளவு சந்திக்க நேரிடும். ஆகவே சற்று கவனமாக இருங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications












