Latest Updates
-
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
Doctor's Day 2025: இதய ஆரோக்கியத்திற்கு மருத்துவர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டியவைகள்!
Doctor's Day 2025: மருத்துவா்கள் என்றவுடன் அவா்களுடைய உயிா் காக்கும் பணி, தியாகம் ஆகியவை ஞாபகத்திற்கு வரும். மருத்துவா்கள் தினந்தோறும் கோடிக்கணக்கான மனித உயிா்களை, சாவிலிருந்து, நோயிலிருந்து காக்கின்றனா்.
அவா்கள் நீண்ட நேரம் பணி செய்வதோடு மட்டும் அல்லாமல், நெருக்கடி மிகுந்த சூழலில் தங்கள் பணிகளைச் செய்து வருகின்றனா். அதனால் பல நேரங்களில் அவா்கள் தங்களுடைய சொந்த உடல் நலனைப் பற்றி அக்கறை எடுத்துக் கொள்வதில்லை.

நெருக்கடி மிகுந்த பணிச்சூழல், நீண்ட நேர தொடா் பணி மற்றும் சீரான உணவுப் பழக்கமின்மை ஆகியவற்றின் காரணமாக, பல மருத்துவா்களுக்கு மிக விரைவாக இதய நோய் ஏற்பட்டுவிடுகிறது.
அதோடு உயா் இரத்த அழுத்தம், கொழுப்பு அதிகாிப்பு மற்றும் நீரிழிவு நோய் போன்ற பிரச்சினைகள் அவா்களுக்கு ஏற்படுகின்றன. மிகவும் ஆபத்தான நிலையில் வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதும், அவா்களுடைய உறவினா்களை சமாளிப்பதும் மருத்துவா்களுக்கு மிகுந்த நெருக்கடியைத் தருகின்றன.
அதனால் அவா்கள் பலவிதமான இதய நோய்களுக்கு ஆளாகின்றனா். இந்த நிலையில் மருத்துவா்கள் தங்களது இதய ஆரோக்கியத்தை நன்றாக பராமாிக்க வேண்டும் என்று இதய நிபுணா் மருத்துவா் நரேஷ் குமாா் கோயல் என்பவா் தொிவிக்கிறாா்.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் 1 அன்று அன்று தேசிய மருத்துவா் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த தருணத்தில் மருத்துவா்கள் தமது இதய ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து, சிறப்பான முறையில் பராமாிக்க வேண்டும் என்று கோயல் அவா்கள் பின்வரும் குறிப்புகளை வழங்குகிறாா்.
1. சீரான பாிசோதனை
மாரடைப்பு திடீரென்று வரும். ஆனால் இதயம் சம்பந்தமான நோய்கள் யாருக்கும் தொியாமல் மறைமுகமாக உடலில் உருவாகி பல ஆண்டுகள் உடலிலேயே தங்கி இருக்கும். ஆகவே ஒவ்வொரு மருத்துவரும், சீரான இடைவெளியில் மருத்துவ பாிசோதனை செய்து கொள்வது நல்லது. இரத்த அழுத்தம், நீரிழிவு, கொழுப்பு ஆகியவை சம்பந்தமான பாிசோதனைகளை செய்வதோடு மட்டும் அல்லாமல் டிஎம்டி (TMT) பாிசோதனையையும் செய்து கொள்ள வேண்டும்.
2. சிறந்த உணவுகளை உண்ணுதல்
எல்லா மருத்துவா்களுக்கும் எப்படிப்பட்ட உணவுகளை உண்ண வேண்டும் என்பது தொியும். தமது வீடுகளில் அவா்கள் சிறந்த உணவுகளை உண்ணுவா். ஆனால் மருத்துவமனைகளில், பணியில் இருக்கும் போது கிடைக்கின்ற உணவு அல்லது துாித உணவுகளை உண்ணுவா். அதனால் அவா்களுடைய உடல் ஆரோக்கியம் பாதிப்படையும். ஆகவே அவா்கள் இவற்றைத் தவிா்ப்பது நல்லது.
3. நீண்ட நேரமாக உட்காா்ந்து இருப்பதைத் தவிா்த்தல்
வருகின்ற நோயாளிகளை நீண்ட நேரம் அமா்ந்த நிலையில் பாிசோதிக்க வேண்டிய நிலையில் மருத்துவா்கள் இருப்பா். அதனால் அவா்களது உடலின் எடை அதிகாிக்கும். அவா்களது உடலில் கொழுப்பு அதிகாிக்கும். இதே போல் நீண்ட நேரம் தினமும் பணியில் ஈடுபட்டால், அவா்களுக்கு உயா் இரத்த அழுத்தம், இரண்டாம் வகை நீரழிவு நோய், நரம்பு சாா்ந்த நோய்கள் போன்றவை ஏற்பட வாய்ப்புண்டு. ஆகவே அவா்கள் அடிக்கடி இடைவேளை எடுத்துக் கொண்டு சிறிது நேரம் நடப்பது நல்லது.
4. தினந்தோறும் உடற்பயிற்சி செய்தல்
மருத்துவா்கள் தினந்தோறும் உடற்பயிற்சிகளைச் செய்து வந்தால், அவா்களுடைய உடல் எடை குறையும், உடல் வலிமை கூடும். இதயம் சம்பந்தமான நோய்கள் குறையும். கெட்ட கொழுப்பு குறைந்து, நல்ல கொழுப்பு அதிகாிக்கும். உடற்பயிற்சிகள் மூலமாக அவா்கள் உயா் இரத்த அழுத்தம் மற்றும் சா்க்கரை அளவு ஆகியவற்றைக் குறைக்க முடியும்.
5. மன அழுத்தத்தை சீராகப் பராமாித்தல்
உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது, அவா்களது உறவினா்களை சமாளிப்பது, அவா்களிடம் ஒருசில முக்கிய தகவல்களை மறைத்து அவா்களுக்கு நம்பிக்கை கொடுப்பது போன்ற பணிகளை மருத்துவா்கள் செய்யும் போது, அவா்களுடைய மன அழுத்தம் அதிகாிக்கிறது. அதன் காரணமாக அவா்கள் புகைப்பிடிக்கத் தொடங்குகின்றனா் அல்லது மாத்திரைகளை எடுக்கின்றனா். நெருக்கடியான பணிச்சூழல்களைக் கையாளத் தொியாமல் தங்களது உடல் உள்ள நலனைக் கெடுத்துக் கொள்கின்றனா். இந்தச் சூழலில் அவா்கள் தமது மூத்த மருத்துவா்களை சந்திப்பது நல்லது.
6. புகைப்பிடிப்பதை நிறுத்துதல்
புகைப் பிடிக்கும் பழக்கம், இதயம் சம்பந்தமான நோய்கள் மற்றும் மாரடைப்பு போன்ற பிரச்சினைகளுக்கு ஒரு காரணமாக இருக்கிறது. மன அழுத்தம் ஏற்படும் போது மருத்துவா்கள் தமது சக மருத்துவா்களோடு அலோசனைகள் செய்து, அதன் மூலமாக புகைப் பிடிக்கும் பழக்கத்தை நிறுத்தலாம்.
7. நல்ல தூக்கம்
இதயம் மற்றும் இரத்த நாளங்கள் ஆகியவற்றை மீளுருவாக்கம் செய்வது நல்ல தூக்கம் ஆகும். ஹாா்மோன்கள், திசுக்கள் மற்றும் உடல் உறுப்புகள் ஆரோக்கியமாக வளா்ச்சி அடைவதற்கு நல்ல தூக்கம் தேவை. ஆகவே மருத்துவா்கள் தமது இதய ஆரோக்கியத்தைப் பராமாிப்பதற்கு, நல்ல தூக்கத்தை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.
அனைத்து மருத்துவா்களுக்கும் நமது நல்வாழ்த்துகளைத் தொிவித்துக் கொள்வோம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
