சாதம் சாப்பிட்டும் சுகர் அதிகரிக்கக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த ட்ரிக்கை ஃபாலோ பண்ணுங்க..

Hack To Eat Rice Without Sugar Spike In Tamil: இந்தியர்களின் மிகவும் முக்கியமான உணவு சாதம். ஆனால் இந்த சாதத்தில் கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் உள்ள. எனவே இந்த சாதத்தை அதிகமாக சாப்பிடும் போது, அதில் உள்ள கார்போஹைட்ரேட் செரிமானமாகி இரத்தத்தில் சர்க்கரை அளவு வேகமாக அதிகரிக்கலாம். இதனால் சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாதத்தை சாப்பிடும் போது கவனமாக இருக்க வேண்டும்.

அதற்காக சாதத்தை முழுமையாக தவிர்க்க வேண்டிய அவசியம் ஏதும் இல்லை. மாறாக அந்த சாதத்தை எப்படி சாப்பிடுகிறோம், அதனுடன் எந்த வகையான உணவுகளை சேர்த்துக் கொள்கிறோம் என்பதில் கவனம் செலுத்தினால் இரத்த சர்க்கரை அதிகரிப்பதைக் கட்டுப்படுத்தலாம். அதுமட்டுமின்றி ஒருசில ட்ரிக்ஸ்களை பின்பற்றுவதன் மூலமும் சாதத்தால் இரத்த சர்க்கரை வேகமாக அதிகரிப்பதைக் குறைக்கலாம்.

Doctor Shares Some Simple Hack To Eat Rice With Less Sugar Spike

இதுக்குறித்து டாக்டர். பிரகாஷ்மூர்த்தி அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரத்தச் சர்க்கரை அளவு சட்டென அதிகரிக்காமல் சாதம் உண்பதற்கான சில எளிய வழிகளை பகிர்ந்துள்ளார். அது என்னவென்பதை தெரிந்து கொண்டு, அதன் படி சாதத்தை உட்கொண்டு இரத்த சர்க்கரை வேகமாக அதிகரிக்காமல் தடுத்திடுங்கள்.

அதில் அவர் கூறியதாவது, "வெள்ளை சாதத்தை எப்போதும் போல் குக்கரிலோ அல்லது வடித்தோ சமைத்த பின், அதை கண்ணாடி பௌலில் போட்டு நன்கு மூடி, ஃப்ரிட்ஜ்ஜில் சுமார் 12 முதல் 24 மணிநேரம் கழித்து எடுத்து விடுங்கள். பின் இப்படி ஜில்லென்று இருக்கும் சாதத்தை ஒரு பாத்திரத்தில் எடுத்து கொண்டு, அத்துடன் 3 ஸ்பூன் நீரை ஊற்றி கலந்து, மைக்ரோஓவனில் வைத்து 3-5 நிமிடங்கள் சூடேற்றி எடுத்தால், சுடு சாதம் தயார்.

ஓவன் இல்லாவிட்டால் குழம்பு வைக்கும் வாணலியில் அந்த சாதத்தை எடுத்துக் கொண்டு, அதில் 3 ஸ்பூன் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, லேசாக சூடேற்றி எடுத்துக் கொண்டாலும், சுடு சாதம் ரெடி. ஆனால் எக்காரணம் கொண்டும் மீண்டும் சாதத்தை குக்கரில் வைத்து சூடேற்ற வேண்டாம். இல்லையெனில் சாதம் குலைந்துவிடும்." என்று கூறினார்.

சாதத்தை குளிர வைத்து சூடேற்றினால் என்ன நன்மை கிடைக்கும்?

"சாதாரணமா அரிசியை வேக வைத்து சாப்பிடும் போது, அதில் உள்ள இனிப்புச் சுவை உடலில் எளிதில் செரிமானமாகி, இரத்த சர்க்கரை வேகமாக அதிகரிக்கிறது. ஆனால் அப்படி சமைத்த சாதத்தை ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து குளிர வைக்கும் போது, சாதத்தில் உள்ள சர்க்கரையின் அமைப்பு RS3 என்னும் ரெசிஸ்டன்ட் ஸ்டார்ச்சாக மாறிவிடும். அந்த ரெசிஸ்டன்ட் ஸ்டார்ச்சான உடனே இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்காமல், கொஞ்சம் கொஞ்சமாக மெதுவாக சர்க்கரையை வெளியிடும். அதனால் சர்க்கரையும் அதிகரிக்காது.

சாதாரணமாக ஒரு சுடு சாதத்தை சாப்பிட்டால், 60-70 பாயிண்ட் சர்க்கரை ஏறுகிறது என்றால், இப்படி சாதத்தை குளிர வைத்து மறுநாள் சூடேற்றி சாப்பிட்டால், 20-30 பாயிண்ட் தான் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும்.

மேலும் உணவு உண்ட பின் 15 நிமிடம் வாக்கிங் போனாலும், சர்க்கரை அளவு அதிகரிக்காமல் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம். அதோடு சாதத்துடன் நார்ச்சத்து மற்றும் புரோட்டீன் நிறைந்த உணவுகளையும் சேர்த்து எடுக்கும் போது, இரத்த சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முடியும். இது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை." என்றும் டாக்டர் கூறினார்.

எனவே நண்பர்களே! உங்களுக்கு சாதம் பிடித்தும், சுகர் காரணமாக சாதத்தை சாப்பிடாமல் இருந்தால், இனிமேல் சாதத்தை மேலே டாக்டர் கூறியவாறு ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து எடுத்து சூடேற்றி சாப்பிடுங்கள்.

Story first published: Monday, September 28, 2026, 14:16 [IST]
Desktop Bottom Promotion