Sugarcane Benefits: கரும்பு சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

Sugarcane Benefits In Tamil: பொங்கல் பண்டிகை என்றதுமே முதலில் நினைவிற்கு வருவது தித்திக்கும் கரும்பு தான். இந்த கரும்பு ஏராளமான சத்துக்களை கொண்டது. குறிப்பாக இதில் நார்ச்சத்து, கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, மக்னீசியம், ஜிங்க், தயமின், ரிபோப்ளேவின், புரோட்டீன் போன்றவை அதிகமாக உள்ளன. எனவே இவ்வளவு சத்துக்களைக் கொண்ட கரும்பை பொங்கல் பண்டிகை காலத்தில் தவறாமல் சாப்பிட்டு, ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.

முன்பெல்லாம் கட்டு கட்டாக கரும்பை வாங்கி நம் முன்னோர்கள் சாப்பிட்டார்கள். ஆனால் தற்போது கரும்பை சாப்பிடவே யோசிக்கிறார்கள். சொல்லப்போனால் சாஸ்திரத்திற்கு பொங்கல் பண்டிகையின் போது கரும்பை வாங்குகிறார்கள். இதற்கு ஒருசில ஆரோக்கிய பிரச்சனைகள் காரணமாக இருந்தாலும், அளவாக சாப்பிட்டால் எந்த ஒரு ஆபத்தும் இல்லை.

Doctor Lists The Benefits Of Eating Sugarcane

நீங்களும் கரும்பை சாப்பிட மறுப்பவரா? அப்படியானால் டாக்டர் பிரகாஷ் மூர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கரும்பு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பகிர்ந்துள்ளார். அதை தெரிந்து கொள்ளுங்கள். அப்புறம் பாருங்கள் கரும்பு சாப்பிட மறுக்கமாட்டீர்கள்.

1. வாய் ஆரோக்கியம்

"கரும்பை நன்கு கடித்து மென்று சாப்பிடும் போது வாயின் ஆரோக்கியம் மேம்படும். மேலும் இதில் இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், மக்னீசியம் போன்ற சத்துக்கள் அதிகமாக உள்ளன" என்றும் டாக்டர் கூறினார். எனவே உங்கள் வாயின் ஆரோக்கியம் எளிய வழியில் மேம்பட நினைத்தால், கரும்பை அதிகம் சாப்பிடுங்கள்.

2. மலச்சிக்கல் நீங்கும்

"கரும்பில் மலமிளக்கும் பண்புகள் உள்ளன. ஆகவே மலச்சிக்கல் போன்ற செரிமான பிரச்சனைகளைக் கொண்டவர்கள் கரும்பை உட்கொள்ளும்போது, மலச்சிக்கலில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்" என்று டாக்டர் கூறினார். தற்போது மலச்சிக்கல் பிரச்சனையை நிறைய பேர் சந்திக்கின்றனர். நீங்கள் இப்பிரச்சனையில் இருந்து எளிதில் விடுபட விரும்பினால், கரும்பை சாப்பிடுங்கள் போதும்.

3. சிறுநீர் பிரச்சனை

கரும்பில் டையூரிக் பண்புகள் உள்ளன. எனவே சிறுநீர் கழிக்கும் போது மிகுந்த எரிச்சலை சந்திப்பவர்கள், கரும்பை உட்கொண்டால், சிறுநீர் கழிப்பதில் சந்திக்கும் பிரச்சனை தடுக்கப்படும் என்று டாக்டர் கூறினார்.

4. காய்ச்சல் வருமா? சளி பிடிக்குமா?

"நிறைய பேர் கரும்பு சாப்பிட்டால் காய்ச்சல் வரும் என்று நினைத்து, கரும்பு சாப்பிட மறுக்கின்றனர். அப்படியெல்லாம் பயப்பட வேண்டியதில்லை. தற்போதைக காலநிலையில் வைரஸ்கள், ஸ்ட்ரெப்டோகாகஸ், போர்டடெல்லா பெர்டுசிஸ் போன்ற நிறைய கிருமிகள் பரவிக் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் கரும்பு சாப்பிட்டாலும், சாப்பிடாமல் இருந்தாலும், வரவேண்டிய தொண்டை கரகரப்பு, சளி போன்றவை வந்து தான் ஆகும். எனவே இதை சாப்பிட்டால் காய்ச்சல் வரும் என்று நினைத்து, இதை தவிர்க்க வேண்டாம். கரும்பு சாப்பிட்டால் காய்ச்சல் வர வாய்ப்பே இல்லை. வேண்டுமானால் அழற்சி உள்ளவர்களுக்கு லேசாக தொண்டை கரகரப்பு ஏற்படலாம். ஆனால் அதுவும் சிறிது நேரத்தில் சரியாகிவிடும்" என்று டாக்டர் கூறினார்.

5. கல்லீரலை சுத்தப்படுத்தும்

கரும்பில் உள்ள பாலிஃபீனால்களும், ஃப்ளேவோனாய்டுகளும் கல்லீரலை சுத்தம் செய்யும் நொதிகளின் செயல்பாட்டை ஊக்குவிக்கிறது. ஆயுர்வேத மருத்துவ குறிப்புகளில் மஞ்சள் காமாலை, ஹெபடைடிஸ் போன்ற பிரச்சனைகளுக்கு கரும்பு ஜூஸ் ஒரு சிகிச்சையாக அளிக்கப்பட்டு வருகிறது.

ஆனால் ஆங்கில மருத்துவத்தில் போதுமான ஆதாரம் எதுவும் இல்லை. சமீபத்தில் பெய்ஜிங் பல்கலைகழகத்தில் 2025 மேற்கொள்ளப்பட்ட நீண்ட கால ஆய்வில், கரும்பானது மதுவால் தூண்டப்படும் கல்லீரல் அழற்சி, நச்சுக்களால் தூண்டப்படும் கல்லீரல் அழற்சி போன்றவற்றை தடுக்கிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே முடிந்த வரை மது அருந்துவதை நிறுத்துங்கள். ஒருவேளை முழுமையாக முடியாவிட்டாலும், அளவாக குடியுங்கள். முக்கியமாக கரும்பை அதிகம் சாப்பிடுங்கள் என்று டாக்டர் கூறினார்.

எனவே நண்பர்களே! இதுவரை நீங்கள் கரும்பை சாப்பிடாமல் இருந்தால், இனிமேலாவது அதை வாங்கி நன்கு மென்று கடித்து சாப்பிடுங்கள். கரும்பை ஜூஸாக குடிப்பதை விட, அதை கடித்து மென்று சாப்பிட்டால் தான், அதன் முழு பலனைப் பெற முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Story first published: Friday, January 16, 2026, 13:56 [IST]
Desktop Bottom Promotion