Latest Updates
-
ட்ராபிக் சிக்னலில் ஏன் உலகம் முழுக்க சிவப்பு, மஞ்சள், பச்சை நிறம் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது தெரியுமா? -
முட்டைக்கோஸ் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பிரியாணி செஞ்சு பாருங்க - கமகமனு சூப்பரா இருக்கும் -
July 2026 Horoscope: இந்த 4 ராசிக்காரங்க ஜூலை மாதத்தில் கொடிகட்டி பறக்கப்போறாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சேமியா இருந்தா.. காலையில் ஒருடைம் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 24 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
ஜூலை 02-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
மழைக்காலத்தில் சரும நிறத்தை அதிகரிக்கணுமா? இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
1 கப் ரவையும், 1/2 கப் கோதுமை மாவும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
உங்க கையில் M, Y, X எழுத்து தெரியுதா? அப்ப இதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது..
மது அருந்த அனுமதிக்கும் டயட்டுகளைத் தெரிந்து கொள்ள வேண்டுமா?
அமெரிக்காவில் பயன்பாட்டில் இருந்து வரும் 40 வகையான டயட் திட்டங்களில் 33 திட்டங்கள் மதுபானத்தை ஏதாவது ஒரு விதத்தில் அனுமதிக்கும் திட்டங்களாக உள்ளன.
ஒரு சிலர் தங்கள் உடல் எடை அதிகமாக இருப்பதை உணர்ந்து எடை இழக்க வேண்டும் என்று விரும்புவார்கள். ஆனால் எடை இழப்பிற்காக முயற்சிக்கும் போது மதுபானம் பருகுவதை தவிர்ப்பது என்பது ஒரு கடினமான செயலாக ஒரு சிலருக்கு இருக்கலாம். நீங்கள் அப்படி நினைப்பவர்களில் ஒருவரா? உங்களுக்கு ஒரு நற்செய்தி!
நீங்கள் எடை இழப்பு திட்டத்தை மேற்கொள்ளும் போது மது அருந்துவதை அனுமதிக்கும் சில உணவு திட்டங்கள் உள்ளன. அமெரிக்காவில் பயன்பாட்டில் இருந்து வரும் 40 வகையான டயட் திட்டங்களில் 33 திட்டங்கள் மதுபானத்தை ஏதாவது ஒரு விதத்தில் அனுமதிக்கும் திட்டங்களாக உள்ளன.

ஆராய்ச்சி
டயட் குறித்து ஆராய்ச்சியாளர்களிடம் ஒரு கருத்து நிலவுகிறது. சிறப்பான டயட் என்பது ஒட்டுமொத்தமாக ஆரோக்கியமானதாக இருப்பது, செயல்முறைபடுத்தக்கூடியதாக இருப்பது, எளிதாக பின்பற்றக்கூடியதாக இருப்பது, வாழ்க்கை முறையாக மாற்றம் பெறக்கூடியதாக இருக்கும் பழக்கமாக இருப்பது என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்தாகும். ஒரு சிறந்த டயட் என்பது கடினமான ஒன்றாக இருக்கக் கூடாது. இதுவே மிகவும் முக்கிய அம்சமாகும்.

சிறந்த டயட்
மத்திய தரைக்கடல் உணவுமுறை அல்லது மெடிட்டரேனியன் டயட் (Mediterranean Diet) என்பது சிறந்த டயட் வரிசையில் உள்ள ஒரு டயட் ஆகும். இந்த வகை டயட்டில் இரவு உணவுடன் ஒரு டம்ளர் ஒயின் பருகுவது அனுமதிக்கப்பட்டுள்ளது. ஒன்று அல்லது இரண்டு டம்ளர் ஒயின் பருகலாம் என்று அனுமதிக்கும் ஒரு டயட்டை பின்பற்றுவது மது பிரியர்களுக்கு எளிதாகும். மேலும் இதனை தொடர்ந்து பின்பற்றுவதில் ஒரு ஆர்வம் மேலோங்கும். பாதியில் புறக்கணிக்க எண்ணம் தோன்றாது.

நிபுணர்கள் கருத்து
மது அருந்தும் பழக்கத்தை கைவிடாமல் கூட எடை இழப்பு சாத்தியமாகும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால் உங்கள் கலோரி உட்கொள்ளல் அளவில் சிறிது கவனம் செலுத்துவதால் இது சாத்தியமாகும் என்றும் அவர்கள் கூறுகின்றனர். உங்கள் உணவுடன் ஒரு டம்ளர் ஒயின் நீங்கள் அருந்துவதால் உங்கள் உடற்பயிற்சிக்கான நேரத்தை 30 நிமிடத்தில் இருந்து 45 நிமிடமாக உயர்த்திக் கொள்வதன் மூலம் ஒரு சமநிலையை அடைய முடியும்.
டயட் திட்டத்தில் இருக்கும் போது மது அருந்துவதா இல்லையா என்பது ஒரு தனி நபரின் தனிப்பட்ட கருத்தாகும். நீங்கள் மருத்துவ பாதிப்புகள் காரணமாக ஏதேனும் மருந்துகள் எடுத்துக் கொண்டிருந்தால் அல்லது மதுப்பழக்கம் தொடர்பான கோளாறுகள் எதாவது இருந்தால் நீங்கள் உட்கொள்ளும் மதுபான அளவு குறித்த கட்டுப்பாட்டுடன் இருப்பது பாதுகாப்பானது.
மதுபானத்தை அனுமதிக்கும் சில டயட் திட்டங்கள் குறித்து இப்போது காணலாம்.

டாஷ் டயட் (DASH Diet)
ஒரு சிறப்பான விழாக்காலத்தில் அல்லது நீங்கள் மிகவும் சோர்வாக உணரும் தருணத்தில் ஒரு டம்ளர் ஒயின் பருகுவதில் உங்களுக்கு ஆர்வம் இருந்தால் அதில் ஒரு தவறும் இல்லை. ஆனால் ஒரு டம்ளருக்கு மேல் பருகாமல் பார்த்துக் கொள்வது நல்லது. அதே நேரம் மறுநாள் உங்கள் உடற்பயிற்சிக்கான நேரத்தை அதிகரித்துக் கொள்ளலாம்.

மெடிட்டரேனியன் டயட் (Mediterranean Diet)
மெடிட்டரேனியன் டயட் என்பது பழங்கள், காய்கறிகள் மற்றும் தானியங்கள் ஆகியவற்றுடன் ஒரு நாளில் ஒன்று அல்லது இரண்டு டம்ளர் மதுபானத்தை அனுமதிக்கிறது. உலகின் ஆரோக்கியமான டயட் திட்டமாக இந்த டயட் இருந்தாலும், குறைவானது முதல் மிதமானது வரையிலான மதுபானத்தை இந்த திட்டம் அனுமதிக்கிறது.

ட்யுக்கன் டயட் (Dukan Diet)
இந்த டயட்டின் முதல் இரண்டு கட்டங்களில் மது அருந்துவது முற்றிலும் அனுமதிக்கப்படவில்லை. ஆனால் பின்னர் ஓரளவு மது அருந்துவது அனுமதிக்கப்படுகிறது. ஆனால் மொத்தமாக மதுவில் மூழ்குவது அனுமதிக்கப்படவில்லை.

அட்கின்ஸ் டயட் (Atkins Diet)
அட்கின்ஸ் டயட் திட்டத்தின் தொடக்க நிலையில் மது அருந்துவது அனுமதிக்கப்படவில்லை. பீர், ஒயின், காக்டையில் போன்றவற்றை அருந்துவதால் உங்கள் எடை இழப்பு நடவடிக்கைகள் தாமதமாகக்கூடும் என்று அட்கின்ஸ் டயட் நம்புகிறது. தொடக்க நிலை முடிந்தவுடன் ஒரு சிறு அளவு மதுவை கவனத்துடன் எடுத்துக் கொள்ள இந்த திட்டம் அனுமதிக்கிறது.
ஆனால் வேகமாக மற்றும் விரைவாக எடை இழக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் மது அருந்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். நமது உடல் மதுவை எரிபொருளுக்காக எரிக்கிறது, நமது உடலில் மது இருக்கும் போது கொழுப்புகள் எரிக்கப்படமாட்டாது.

குறிப்பு
உங்களால் முடிந்த வரை மது இல்லாத உணவு அட்டவணையை பின்பற்றுங்கள், மேலும் நீங்கள் தேர்ந்தெடுக்கும் மதுபானங்கள் குறித்து கவனம் கொள்வது மிகவும் அவசியம்.



Click it and Unblock the Notifications