Latest Updates
-
உலகமே 2026-ல் இருக்கும்போது இந்த நாடு மட்டும் 2018-ல்தான் இருக்காம் - எந்த நாடு? ஏன் தெரியுமா? -
ராகு-சந்திர சேர்க்கை: இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
அரிசி உப்புமா - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
செப்டம்பர் 23, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களின் குடும்பத்தில் பல பிரச்சினைகள் வரப்போகுதாம் -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 01 வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 கேரட்டும், தயிரும் இருந்தா இந்த ஆந்திரா ஸ்டைல் கேரட் பச்சடியை செஞ்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
3 கேரட் இருந்தா.. இப்படி கீ ரோஸ்ட் ட்ரை பண்ணுங்க.. சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இந்தியாவின் முதல் போட்டோகிராபர் யார்? அவர் எந்த ராஜாவிடம் வேலை செய்தார் தெரியுமா? -
வீட்டில் கொசுக்கள் வரக்கூடாதா? அவற்றை விரட்ட இந்த செடிகளை வீட்டுல வாங்கி வையுங்க..
வெறும் 7 நாட்களில் உங்கள் எடையை அசால்ட்டா குறைக்கணுமா? அப்போ சர்ட்ஃபுட் டயட்டை ஃபாலோ பண்ணுங்க...
31 வயதான இங்கிலாந்தைச் சேர்ந்த பாடகரும் பாடலாசிரியருமான அடீல் லாரி இந்த சர்ட்ஃபுட் டயட் முறையை பற்றி சில தகவல்களை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார். இதன் மூலம் கிட்டத்தட்ட 22 கிலோ வரை குறைந்துள்ளாராம்.
இன்றைய காலகட்டத்தில் உடல் எடையை குறைப்பது தான் எல்லோருடைய பெரிய கவலையாக இருந்து வருகிறது. இதற்காக மக்களும் நிறைய டயட் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். ஆனால் அந்த வகையில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய டயட் திட்டம் தான் இந்த சர்ட்ஃபுட் டயட் திட்டம் என்பது.

31 வயதான இங்கிலாந்தைச் சேர்ந்த பாடகரும் பாடலாசிரியருமான அடீல் லாரி இந்த சர்ட்ஃபுட் டயட் முறையை பற்றி சில ஆச்சர்யமான தகவல்களை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார். இந்த டயட் உணவுப் பழக்கம் மூலம் கிட்டத்தட்ட 22 கிலோ வரை எடையை இழந்து உள்ளார். அதைப் பற்றிய ஒரு தொகுப்பு தான் இந்த கட்டுரை.

சர்ட்ஃபுட் டயட் என்றால் என்ன?
இந்த சர்ட்ஃபுட் டயட்டிற்கு என்றே தனி கருத்துக்கள் உள்ளன. இது சர்டூயின்ஸ் (sirtuins) எனப்படும் ஒரு வகை புரதங்களை செயல்படுத்த உதவுகிறது. இந்த புரத வகை தான் பெரும்பாலும் செல்லுலார் கட்டுப்பாடு, வயதான மற்றும் உடலின் வளர்சிதை மாற்றத்தில் ஈடுபட்டுள்ளது. இது குறித்து நடத்திய ஆய்வின் படி சர்டூயின்ஸ் உடல் மெட்டாபாலிசத்தை அதிகரிக்கவும், தேவையற்ற கொழுப்புகளை கரைக்கவும் உதவுகிறது. மேலும் அழற்சியை குறைக்கிறது, கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது.

சர்ட்ஃபுட் உணவு வகைகள்
* ரெட் ஒயின்
* டார்க் சாக்லேட்
* பார்சிலி
* சிட்ரஸ் பழங்கள்
* க்ரீன் டீ
* ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி
* சிவப்பு வெங்காயம்
* மஞ்சள்
* ஆப்பிள்
* கீரை
* சோயா
* வால்நட்ஸ்
* பாப்பரை
* ஆலிவ் ஆயில்
* ரெட் சிக்கரி

சர்ட்ஃபுட் டயட் திட்டம்
சர்ட்ஃபுட் திட்டத்தை இரண்டு வகையாக பிரிக்க இயலும். அதில்
* ஒன்று முதல் மூன்று நாளைக்கு உங்கள் கலோரியை ஒரு நாளைக்கு 1000 கலோரிகள் என்ற அளவில் குறைத்துக் கொள்ள வேண்டும். இந்த நாட்களில் பச்சை காய்கறிகள் மற்றும் பழ ஜூஸ்கள், ஒரு நேர மட்டும் உணவு எடுத்துக் கொள்ளுங்கள். முதல் மூன்று நாட்கள் இந்த உணவு முறையை கடைபிடிப்பது கஷ்டமாக இருக்கும். ஆனால் நான்காவது முதல் ஏழாவது நாட்களில் பசி உங்களுக்கு குறையக் கூடும். இந்த உணவுப் பழக்கம் செட் ஆகிவிடும். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக கலோரிகளை அதிகரித்து கொள்ளுங்கள். 1000 முதல் 1500 கலோரிகள் வரை அதிகரித்து கொள்ளுங்கள்.
* இரண்டு சர்ட்ஃபுட் பழச்சாறுகள், ஒரு நாளைக்கு இரண்டு வேளை உணவு ஆகியவை எடுத்துக் கொள்ளுங்கள். பச்சை காய்கறி ஜூஸ்களான செலரி, கீரைகள், க்ரீன் டீ மற்றும் பார்சிலி வகைகளை எடுத்துக் கொள்ளுங்கள். சாப்பாடு, சிக்கன், கீரை, கறி, இறால் ப்ரை, வான்கோழி, மீன் மற்றும் பாப்பரை போன்ற உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

இரண்டாவது கட்டம்
இந்த சர்ட்ஃபுட் இரண்டாவது கட்டத்தில் தான் உடல் எடையில் நல்ல மாற்றம் தெரியும். இந்த கட்டத்தில் 14 நாட்கள் டயட்டை நீங்கள் ஃபாலோ செய்ய வேண்டும். ஒரு நாளைக்கு சாப்பாடு, க்ரீன் ஜூஸ்கள் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். 7 நாட்களில் 7 பவுண்ட் எடை வரை உங்களால் குறைக்க முடியும். ஆரோக்கியமான மற்றும் ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

வேலை செய்யும் விதம்
இந்த சர்ட்ஃபுட் டயட் திட்டத்தின் பெரிய வேலை கொழுப்பை குறைத்து தசைகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது. இந்த டயட்டை ப்லோ செய்த 3-வது வாரத்தில் என்ன நடக்கும்.
முதல் இரண்டு கட்டத்தை கடந்தவர்கள் தொடர்ந்து உங்கள் உணவுப் பழக்கத்தை ஆரோக்கியமாக மாற்றிக் கொள்வது நல்லது. க்ரீன் ஜூஸ்கள், சர்ட்ஃபுட் உணவுகள் உங்கள் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை கொண்டு வரும். எனவே இதை உங்கள் வாழ்நாள் முழுவதும் பின்பற்ற முடியும். இந்த உணவை தினமும் பின்பற்ற முடியவில்லை என்றால் கூட முடிந்த வரை பின்பற்ற முயலுங்கள். இது உங்கள் உடல் நலத்திற்கு நிறைய நன்மைகளை தரும்.
ஊட்டச்சத்து மருந்தகத்தில் நிபுணரான ஐடன் மற்றும் க்ளென் ஆகியோரால் நடத்தப்பட்ட ஒரு பைலட் ஆய்வின்படி, சர்ட்ஃபுட் டயட் திட்டத்தால் மக்கள் 7 நாட்களில் 7 பவுண்ட் எடை வரை இழந்து உள்ளனர் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த உணவுப் பழக்கம் மூலம் அவர்களின் ஆற்றல் அதிகரித்து உள்ளதாகவும், நல்ல தூக்கம், சரும ஆரோக்கியத்திற்கு உதவுவதும் தெரிய வந்துள்ளது.

சர்ட்ஃபுட் டயட்டின் பயன்கள்:
சர்ட்ஃபுட் உணவுப் பழக்கம் இதய நோய்களின் அபாயத்தை போக்கவும், உடல் பருமன், சர்க்கரை நோய் மற்றும் இறப்பு அபாயத்தை தடுக்கிறது. இதைத் தவிர ஆரோக்கிய நன்மைகள் மற்றும் நோய் அபாயம் ஆகியவற்றை தடுத்து நல்வாழ்வை அளிக்கிறது. பேராசிரியர் ஃபிராங்க் ஹு எழுதிய அட்வான்ஸஸ் இன் நியூட்ரிஷன் இதழின் கூற்றுப்படி, சர்ட்ஃபுட் உணவு நினைவாற்றலை மேம்படுத்தவும், இரத்த குளுக்கோஸ் அளவை நிர்வகிக்கவும், உடலில் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைத் தடுக்கவும் உதவுகிறது.

சர்ட்ஃபுட் உணவுகளின் ஆரோக்கிய நன்மைகள்:
* இது கொழுப்புகளை இழக்க உதவுகிறது. தசைகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது.
* இந்த டயட் உங்கள் ஆற்றலை குறைக்காமல் எனர்ஜிட்டிக்காக இருக்க உதவுகிறது.
* உடல் எடையை குறைக்க நீங்க ஜிம், உடற்பயிற்சி முகாமிற்கெல்லாம் செல்ல வேண்டாம்.
* இது ஒரு எளிய மற்றும் ஈஸியான உணவுப் பழக்க திட்டம் நீங்க நீண்ட காலத்திற்கு கூட இந்த திட்டத்தை கடைப்பிடிக்கும்.
* இந்த டயட் திட்டம் உடல் எடையை குறைக்க நீங்கள் பட்டினி கிடக்க வேண்டும் என்று கூறவில்லை. மாறாக ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்ள வலியுறுத்துகிறது.
* நாள்பட்ட நோய்களை தடுக்க உதவுகிறது. இந்த டயட் திட்டத்தில் பல ஆரோக்கியமான உணவுகளும், ஊட்டத்துக்களும் அடங்கியுள்ளன.



Click it and Unblock the Notifications
