Latest Updates
-
அக்டோபரில் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
புதன் துலாம் ராசிக்குள் நுழைவதால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
மீல் மேக்கர் சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரி அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு ஏற்ற ஆப்கானி சோயா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களின் உணர்வுகளாடு மோசமாக விளையாடுபவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி என்ன? -
பார்லர் போகாமலேயே முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தமிழ்நாட்டின் மிகச்சிறிய மாவட்டம் எது தெரியுமா? நிச்சயமா நீங்க நினைக்கிற மாவட்டம் இல்ல -
கிராமத்து ஸ்டைல் புளிச்ச கீரை பருப்பு கடையல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
மும்பை ரோட்டுக்கடை தவா புலாவ் ரெசிபி - இந்த ஸ்டைலில் செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
சென்னையில் காய்ச்சல் அதிகரிப்பு: காய்ச்சல் வந்தா உடனே என்ன பண்ணனும்? டாக்டர் சொல்லும் முக்கிய அறிவுரைகள்!
ஈஸியா தொப்பையைக் குறைக்கணுமா? அப்ப பேரிக்காயை இப்படி சாப்பிடுங்க...
பேரிக்காய் கலோரி குறைவான பழம் என்பதால், எடையைக் குறைக்க மேற்கொள்ளப்படும் டயட்டில் சேர்த்துக் கொள்வதற்கு ஏற்ற பழமாகும். இதில் உள்ள அதிகளவிலான நார்ச்சத்து, நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கும்.
ஒவ்வொரு சீசனிலும் ஒரு பழம் மிகவும் வந்து மார்கெட்டில் குவியும். அதே சமயம் சீசன் முடிந்ததும், அந்த பழத்தைக் காண்பதே கடினமான ஒன்றாக இருக்கும். அந்த வகையில் கோடை முடிந்து, குளிர் காலம் ஆரம்பித்த நிலையில், தற்போது மார்கெட்டுகளில் பேரிக்காய் சற்று குறைந்த விலையில் கிடைக்கும். சீசன் காலத்தில் அந்த சீசன் பழங்களை சாப்பிடுவது மிகவும் நல்லது. ஏனெனில் அப்போது அந்த பழங்கள் நற்பதமாக இருப்பதோடு, ஏராளமான ஊட்டச்சத்துக்களையும் வழங்கும்.

பேரிக்காய் நல்ல நறுமணம் கொண்டிருப்பதோடு, ஏராளமான சத்துக்களையும் தன்னுள் கொண்டது. இது கலோரி குறைவான பழம் என்பதால், எடையைக் குறைக்க மேற்கொள்ளப்படும் டயட்டில் சேர்த்துக் கொள்வதற்கு ஏற்ற பழமாகும். இதில் உள்ள அதிகளவிலான நார்ச்சத்து, நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கும் மற்றும் அளவுக்கு அதிகமாக உணவு உண்பதையும் தடுக்கும்.

எடையைக் குறைக்க உதவும் பழம்
ஒரு மிதமான அளவிலான பேரிக்காயில் 6 கிராம் நார்ச்சத்து உள்ளது. அதுமட்டுமின்றி, இப்பழத்தில் நீர்ச்சத்தும் ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. ஒரு பேரிக்காயில் சுமார் 84 சதவீத நீர்ச்சத்து நிறைந்திருக்கும். எனவே தான் பேரிக்காய் உடல் எடையைக் குறைக்க உதவும் சிறப்பான பழமாக கருதப்படுகிறது.

இதர நன்மைகள்
பேரிக்காய் உடல் எடையைக் குறைக்க உதவுவதோடு மட்டுமின்றி, பல்வேறு ஆரோக்கிய நன்மைகளையும் வழங்கக்கூடியது. அதில் பேரிக்காய் குளிர்ச்சியானது, அலர்ஜி ஏற்படுத்தாத பழம் மற்றும் நீரில் கரையக்கூடிய நார்ச்சத்துக்களைக் கொண்ட பழம். மேலும் இப்பழத்தில் பீட்டா-கரோட்டீன் மற்றும் பி வைட்டமின்கள் அதிகம் உள்ளது மற்றும் சிறிது காப்பர், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் இதர அத்தியாவசிய கனிமச்சத்துக்களையும் உள்ளடக்கியது.

புற்றுநோயை எதிர்க்கும்
பேரிக்காயில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. இதனால் இப்பழம் உடலைத் தாக்கும் ப்ரீ ராடிக்கல்களை எதிர்க்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளாக செயல்படும். சில சமயங்களில் இப்பழம் புற்றுநோயையும் எதிர்த்துப் போராடும் சக்தி கொண்டவையாகும்.

இதய நோயைத் தடுக்கும்
பேரிக்காயில் கனிமச்சத்துக்களான சோடியம் மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இந்த முக்கியமான சத்துக்கள் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் மற்றும் இதய தசைகளை வலிமையாக்கும். இதில் உள்ள நார்ச்சத்து இரத்த சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து, இதய செயல்பாட்டை சிறப்பாக வைத்துக் கொள்ளும்.

பேரிக்காய் ஜூஸ் வகைகள்
பொதுவாக பேரிக்காய் அப்படியே கடித்து சாப்பிட அற்புதமாக இருக்கும். ஆனால் பலர் பேரிக்காயை ஜூஸ் வடிவில் குடிக்க விரும்புவர். அவர்களுக்காக மற்றும் உடல் எடை மற்றும் தொப்பையைக் குறைக்க நினைப்பவர்களுக்காகவும் சில பேரிக்காய் பானங்களின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போம் வாருங்கள்.

பேரிக்காய் ஸ்மூத்தி
இந்த ஸ்மூத்தியில் உடலுக்கு தேவையான சக்தியை வழங்கும் வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. அதற்கு காரணம் இந்த ஸ்மூத்தியில் சேர்க்கப்படும் பசலைக் கீரை மற்றும் செலரி கீரை ஆகும். இஞ்சியில் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது.
* முதலில் பேரிக்காயின் தோலை நீக்கிவிட்டு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
* பின் பசலைக் கீரை மற்றும் செலரி கீரையை தனியாக வேக வைத்து துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்பு பிளெண்டரில் அனைத்தையும் போட்டு, அத்துடன் தயிர் மற்றும் தேன் சேர்த்து நன்கு அரைத்தால், பேரிக்காய் ஸ்மூத்தி தயார்!

பேரிக்காய் சங்ரியா
பேரிக்காய் சங்ரியா என்பது ஒரு காக்டெயில் பானமாகும். இந்த பானமானது ரெட் ஒயின், பேரிக்காய் துண்டுகள், பெர்ரிப் பழங்கள், திராட்சை ஜூஸ் மற்றும் சிறிது துளசி இலைகளால் ஆனது. இந்த வகை பானமானது நண்பர்களுடனான விருந்து அல்லது பார்ட்டிகளின் போது குடிக்க ஏற்றதாக இருக்கும்.

பேரிக்காய் ஆப்பிள் அன்னாசி ஜூஸ்
இந்த ஜூஸ் மிகவும் அற்புதமாக, அனைவருக்கும் விரும்பிக் குடிக்கும் வகையில் இருக்கும். ஏனெனில் இதில் சுவையான மற்றும் ஏராளமான ஊட்டச்சத்துக்களைக் கொண்ட ஆப்பிள், அன்னாசிப் பழம் மற்றும் பேரிக்காய் கொண்டு தயாரிக்கப்படுவதாகும்.
இந்த ஜூஸ் தயாரிப்பதற்கு மிக்ஸியில் ஆப்பிள், பேரிக்காய் மற்றும் அன்னாசிப் பழங்களின் தோலை நீக்கிவிட்டு, சிறு துண்டுகளாக்கி போட்டுக் கொள்ள வேண்டும். பின் அதில் சிறிது ப்ளாக் சால்ட் மற்றும் தேன் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள மூன்று வகையான பேரிக்காய் பானங்களும் உடல் எடை மற்றும் தொப்பையைக் குறைக்க மிகவும் உதவியாக இருக்கும். முயற்சித்துப் பாருங்கள். மறக்காமல் உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications
