Latest Updates
-
செப்டம்பர் 26-ல் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்! -
இந்த 4 ராசிக்காரங்க காதலில் அதிர்ஷ்டமே இல்லாதவர்களாம் - இவங்க எதிர்பார்க்கும் எதுவுமே நடக்காதாம் -
1 கப் பச்சை பயறு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இத பசங்களுக்கு செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
ஜப்பானில் 90 லட்சம் வீடுகளில் ஒருவர் கூட வசிக்காத வினோதம் - ஆடம்பர வீடுகள் 'பேய் வீடுகளாக' மாற காரணம் என்ன? -
உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க.. -
மலேசியா ஸ்பெஷல் முட்டை சம்பல் ரெசிபி - 4 முட்டை இருந்தா போதும் - தரமான சைடிஷ் ரெடி! -
15000 கோடி முகேஷ் அம்பானி வீட்டை விட பெரிய வீடு இந்தியாவிலுள்ள இந்த வீடுதானாம் - இந்த வீடு யாருடையது தெரியுமா? -
October Matha Rasipalan 2026: அக்டோபர் மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமானதா இருக்கப்போகுது! -
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறையும்.. -
செப்டம்பர் 24, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கபோகுதாம் - சந்தோஷமா இருங்க
நற்செய்தி! இந்த டயட் விறைப்புத்தன்மை பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்குமாம் - ஆய்வில் தகவல்
சமீபத்திய ஆய்வு ஒன்றில் கூட, ஒரு குறிப்பிட்ட வகையான டயட்டை பின்பற்றுவது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, விறைப்புத்தன்மை பிரச்சனையைக் குணப்படுத்துவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இன்றைய உலகில் ஆண்களுக்கு ஏற்படும் மிகப்பெரிய சவால் நிறைந்த ஒரு ஆரோக்கிய பிரச்சனை தான் விறைப்புத்தன்மை பிரச்சனை. இந்த பிரச்சனையைப் பொதுவாக ஆண்கள் 40-50 வயதிற்கு மேல் தான் சந்திப்பார்கள். ஆனால் தற்போது இப்பிரச்சனை எல்லா வயதினரிடமும் மிகவும் அதிகமாக உள்ளது. இதற்கு முக்கிய காரணம் மருந்துகள், புகைப்பழக்கம், போதைப் பொருட்கள் அல்லது ஆல்கஹால் போன்றவை தான்.

இந்த விறைப்புத்தன்மை பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காண பெரும்பாலான ஆண்கள் நினைக்கின்றனர். அதற்காக வீட்டு வைத்தியம் முதல் சப்ளிமெண்ட்டுகள் வரை அனைத்தையும் முயற்சி செய்தும் வருகிறார்கள். ஆனால் இத்தகைய பிரச்சனைக்கு மாத்திரைகளின் மூலம் குணப்படுத்த முடியும் என்றாலும், இந்த நிலையை சமாளிப்பதற்கு மற்றொரு ஆரோக்கியமான வழி உள்ளது. அது தான் ஆரோக்கியமான டயட்டை பின்பற்றுவது.
சமீபத்திய ஆய்வு ஒன்றில் கூட, ஒரு குறிப்பிட்ட வகையான டயட்டை பின்பற்றுவது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, விறைப்புத்தன்மை பிரச்சனையைக் குணப்படுத்துவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

விறைப்புத்தன்மை பிரச்சனை
விறைப்புத்தன்மை பிரச்சனை என்பது உடலுறவின் போது போதுமான விறைப்புத்தன்மையைப் பெறவோ அல்லது பராமரிக்கவோ இயலாமை ஆகும். இந்த நிலையில், ஆண்கள் ஆரோக்கியமான உடலுறவில் ஈடுபட முடியும். ஆனால் அதற்கு அவர்களது உடல் ஒத்துழைக்காமல் இருக்கும். இதற்கு முக்கியமான ஓர் காரணமாக அதிகப்படியான மன அழுத்தம் தான் என்று கூறப்படுகிறது.

விறைப்புத்தன்மை பிரச்சனை எவ்வளவு பொதுவானது?
எப்போதாவது விறைப்புத்தன்மை பிரச்சனை ஏற்படுவது என்பது அரிதானது. அதே சமயம் அடிக்கடி விறைப்புத்தன்மை பிரச்சனையை சந்திப்பது என்பது உடலில் உள்ள தீவிர பிரச்சனைகளின் அறிகுறியாக இருக்கலாம். மேலும் 5 இல் ஒருவர் விறைப்புத்தன்மை பிரச்சனை இருப்பதாக புகாரளிப்பதாகவும், வயதிற்கு ஏற்ப எண்ணிக்கை அதிகரிப்பதாகவும் தரவு தெரிவிக்கிறது.

எந்த டயட்டை பின்பற்ற வேண்டும்?
நாம் உண்ணும் உணவுகள் நமக்கு ஆற்றலை வழங்குவதோடு மட்டுமல்லாமல், நம்மை ஆரோக்கியமாகவும், நோயற்றவராகவும் வைத்திருக்க உதவுகிறது என்பது நம் அனைவருக்குமே தெரியும். புதிய ஆய்வு ஒன்றில், மத்தியதரைக் கடல் உணவு முறையை நெருக்கமாக கடைப்பிடிக்கும் ஆண்கள் விறைப்புத்தன்மை பிரச்சனையை எதிர்கொள்வது குறைவு என தெரிய வந்துள்ளது. சான் பிரான்சிஸ்கோவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் மருத்துவ உதவி பேராசிரியர் டாக்டர் ஸ்காட் ஆர். பாவ் தலைமையிலான ஆய்வில் இது தெரியவந்தது.

ஆய்வு
இந்த ஆய்விற்காக, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் ஒரு கணக்கெடுப்புக்காக முன்னர் சேகரிக்கப்பட்ட தரவுகளை ஆய்வாளர்கள் குழு ஆய்வு செய்தது. சுமார் 21000-க்கும் மேற்பட்ட ஆண்களின் தரவு வைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த தரவில் 1986 மற்றும் 2014 க்கு இடையே ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ஆண்களின் உணவுத் தரம் ஆராயப்பட்டது.

முடிவு
ஆய்வின் முடிவில், மத்தியதரைக் கடல் உணவு முறையை நெருக்கமாக பின்பற்றிய ஆண்களுக்கு எந்த வயதிலும் விறைப்புத்தன்மை பிரச்சனைக்கான வருவதற்கான வாய்ப்புக்கள் குறைவு என்பது கண்டறியப்பட்டது. மேலும், 60 வயதிற்குட்பட்ட ஆரோக்கியமான டயட்டை பின்பற்றும் ஆண்களுக்கு நாள்பட்ட நோய்க்கான அபாயம் குறைவதுடன், விறைப்புத்தன்மை பிரச்சனையை அனுபவிக்கும் வாய்ப்பும் குறைவு என தெரிய வந்தது.

மத்தியதரைக் கடல் உணவுமுறை என்றால் என்ன?
மத்தியதரைக் கடல் உணவு முறை அதன் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளுக்காக அதிகம் பாராட்டப்படுகிறது. இந்த வகை டயட்டின் நம்பிக்கைக்குரிய ஆரோக்கிய நன்மைகளின் காரணமாக, இது 2019 ஆம் ஆண்டின் ஆரோக்கியமான உணவுமுறை என்று பெயரிடப்பட்டது.
மத்தியதரைக்கடல் உணவு முறையானது க்ரீஸ், பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட மத்தியதரைக் கடல் பகுதிக்கு நெருக்கமான நாடுகளில் உள்ள மக்கள் சாப்பிடும் பாரம்பரிய உணவுகளை அடிப்படையாகக் கொண்டது. இந்த உணவு முறையின் அடித்தளமே காய்கறிகள், பழங்கள், மூலிகைகள், நட்ஸ், பீன்ஸ், முழு தானியங்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புக்கள் ஆகும். பெரும்பாலும் தாவர அடிப்படையிலான உணவுகளை உள்ளடக்கியது தான் இந்த டயட். அதே சமயம் மிதமான அளவில் பால், கோழி மற்றும் முட்டைகளும் இந்த டயட்டில் அனுமதிக்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications
