Latest Updates
-
சிம்ம ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
அக்டோபர் 28-ல் சுக்கிரன் உதயமாவதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஆந்திரா ஸ்டைல் குடைமிளகாய் தக்காளி சாதம் ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - பிரியாணி மாதிரி இருக்கும் -
பண்டிகைக் காலத்தில் சருமத்தை பளிச்சென்று புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவும் 5 காபி ஃபேஸ் பேக்குகள்! -
தாபா ஸ்டைல் ராஜ்மா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
சுதந்திர தேவி சிலையை அமெரிக்காவிற்கு பரிசாக கொடுத்தது எந்த நாடு தெரியுமா? -
சிங்கப்பூரில் அரசு அதிகாரிகள் திருமணம் செய்ய அரசாங்கம் என்ன செய்யுது தெரியுமா? என்ன இப்படி இறங்கிட்டாங்க -
Ayudha Pooja 2026: ஆயுத பூஜைக்கு வீட்டை ஈஸியா சுத்தம் செய்யணுமா? அப்ப இந்த ஒரு நேச்சுரல் க்ளீனர் போதும்! -
பூரி செய்யும் போது இந்த தவறுகளை தெரியாம கூட செஞ்சுராதீங்க - இல்லனா எண்ணெய் உறிஞ்சி முறுக்கு மாதிரி மாறிரும் -
நவராத்திரி ஸ்பெஷல் சுரைக்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க..
கரையாத உங்க தொப்பை கொழுப்பை கரைச்சி...உடல் எடையை குறைக்க...தயிரை நீங்க எப்படி சாப்பிடணும் தெரியுமா?
சுவையான மற்றும் ஆரோக்கியமான ஒன்றை நீங்கள் தேடும் போது, பழங்கள் உங்களுக்கான சிறந்த உணவு. அவை எடை இழப்புக்கு உதவுவது மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்றன.
பெரும்பாலான மக்களை பாதிக்கும் ஒரு முக்கிய பிரச்சனையாக உடல் பருமன் இருக்கிறது. நம் ஆரோக்கியமற்ற பழக்கவழக்கம் மற்றும் உணவு முறைகளால் உடல் எடை அதிகரிப்பது முதல் பல்வேறு உடல்நல பிரச்சனைகளை நாம் சந்திக்கிறோம். பல உடல்நல சிக்கல்களுக்கு வழிவகுக்கும் உங்கள் உடல் பருமனை குறைப்பது என்பது சாதாரணமான விஷயம் அல்ல. உடல் எடையை குறைப்பதில் உங்கள் உணவு முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால், ஆரோக்கியமான உணவுகளையும் உடல் எடையை குறைக்க உதவும் உணவுகளையும் நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். உங்கள் தினசரி உணவின் ஒரு பகுதியாக தயிர் இருக்கிறது. பல ஆய்வுகளின்படி, உங்கள் உணவில் தயிர் சேர்த்துக் கொள்வது, கொழுப்பை எரிக்க உதவுகிறது.

இது உங்கள் வளர்சிதை மாற்றத்தை விரைவுபடுத்தி உடல் எடையை குறைக்கவும் உங்கள் உடலின் திறனை அதிகரிக்கவும் உதவும் என்றும் கூறப்படுகிறது. இந்த சூப்பர்ஃபுட்டில் புரதம் மற்றும் புரோபயாடிக் நிறைந்துள்ளது. அதனால், நீங்கள் நீண்ட நேரம் முழுதாக உணரலாம் மற்றும் நாள் முழுவதும் குறைவான கலோரிகளை சாப்பிடலாம். உங்கள் உடல் எடையை குறைக்கவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவும் தயிரை இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள வழிகள் முறையில் சாப்பிடுங்கள்.

தயிர் சாப்பிடும் வழிகள்
உடல் எடையை குறைப்பது என்பது எளிதான செயல் அல்ல, அது மிகவும் சவாலான பணி. ஓரிரு நாட்களில் அது நடக்காது. தினமும் உடற்பயிற்சி செய்வது உடலிலுள்ள கூடுதல் கலோரிகளை எரிக்க உதவுகிறது. இருப்பினும், சமச்சீரான உணவை பராமரிப்பது சமமாக முக்கியமானது என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் எடை இழப்பு பயண உணவுத் திட்டத்தில் தயிரை சேர்ப்பது நல்ல முடிவுகளை விரைவில் தர உதவும்.

எடை இழப்புக்கு தயிரின் நன்மைகள்
தயிர் புரதம், கால்சியம் மற்றும் புரோபயாடிக்குகளின் சிறந்த மூலமாகும். இது செரிமான மண்டலத்தை நிர்வகித்தல் மற்றும் பாக்டீரியா தொற்றுகளைத் தவிர்ப்பதன் மூலம், இவை அனைத்தும் குடல் ஆரோக்கியத்தை பராமரிக்க பங்களிக்கின்றன. தயிர் உங்களை நீண்ட நேரத்திற்கு நிறைவாக உணரவும், உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது. ஏனெனில் அதில் ஆரோக்கியமற்ற கொழுப்புகள் குறைவாகவும், நார்ச்சத்து நிறைந்ததாகவும், சில கலோரிகள் மட்டுமே உள்ளன. பல ஊட்டச்சத்துகள் நிறைந்த தயிர், இயற்கையில் நீரேற்றம் கொண்டாதாகவும் மற்றும் குளிர்ச்சியானதாகவும் இருக்கிறது. தயிர் ஒரு சுவையான மூலப்பொருளாக இருப்பதால், மற்ற பொருட்கள் அல்லது உணவுகளுடன் சேர்த்து சாப்பிடுவது, உங்கள் உடல் எடையை விரைவில் குறைக்க உதவும்.

சியா விதைகளைச் சேர்க்கவும்
சியா விதைகள் ஒரு சிறந்த ஊட்டச்சத்து மூலப்பொருள் ஆகும். இது பிடிவாதமான தொப்பை கொழுப்பைக் குறைக்க உதவும். நார்ச்சத்து, இரும்புச்சத்து, பொட்டாசியம், உப்பு, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின் சி உள்ளிட்ட ஏராளமான ஊட்டச்சத்துக்கள் இதில் உள்ளன. இதை நீங்கள் கஞ்சி, பழக் கிண்ணம், ஸ்மூத்திஸ் போன்றவற்றில் தயிருடன் சேர்த்து சாப்பிடலாம். வெறும் தயிரை நன்றாக அரைத்து மென்மையாக்கி, அதில் சில சியா விதைகளை சேர்த்து சாப்பிடலாம்.

தயிரில் பழங்களைச் சேர்க்கவும்
சுவையான மற்றும் ஆரோக்கியமான ஒன்றை நீங்கள் தேடும் போது, பழங்கள் உங்களுக்கான சிறந்த உணவு. அவை எடை இழப்புக்கு உதவுவது மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்றன. உங்களுக்கு இனிப்புப் பற்கள் இருந்தாலும், தயிருடன் பழங்களைச் சேர்த்து சாப்பிடுவது சிறந்த தேர்வாகும். உங்களுக்கு பிடித்த பழங்களை துண்டுகளாக வெட்டி தயிரை அதில் சேர்க்கவும். ஆப்பிள், கிவி, வாழைப்பழம், கொய்யா, மாதுளை, தர்பூசணி போன்றவை நீங்கள் தயிரில் சேர்த்து சாப்பிடலாம். ஆரோக்கியமான பழங்கள் நிறைந்த தயிர் உணவில் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிரம்பியிருப்பதால் இது எடை இழப்புக்கு சிறந்த உணவாகும்.

தயிர் மற்றும் கிரானோலா
கிரானோலாவில் போதுமான அளவு கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது, இது தொப்பை கொழுப்பை இழக்க உதவுகிறது. மேலும் தயிருடன் ஒரு சரியான குறைந்த கலோரியை கொடுக்கும் ஆரோக்கியமான சிற்றுண்டியாக இருக்கும். தேன், பழம், சணல் விதைகள் மற்றும் சியா விதைகளை சேர்த்து, உங்கள் கிண்ணத்தை மேலும் ஆரோக்கியமாக மாற்றலாம். இதன் மூலம், 5 நிமிடங்களுக்குள் உங்கள் நாளைத் தொடங்க சத்தான சுவையான உணவை பெறுவீர்கள். சர்க்கரை இல்லாத, குறைந்த கொழுப்பு அல்லது குறைந்த சர்க்கரை கொண்ட கிரானோலாவைத் தேர்ந்தெடுக்கவும்.

நட்ஸ்களை சேர்க்கவும்
அதிகமாக சாப்பிடுவது எடை அதிகரிப்பதற்கு ஒரு பொதுவான காரணம். எனவே, ஆரோக்கியமற்ற தின்பண்டங்களை சாப்பிடுவதை தவிர்த்து, தயிருடன் சேர்த்து உலர்ந்த பழங்கள் மற்றும் நட்ஸ்களை சேர்த்து சாப்பிடுங்கள். அவற்றில் நார்ச்சத்து, புரதங்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன. அவை கொழுப்பு மற்றும் கலோரி எரியும் செயல்முறையை அதிகரிக்க உதவுகின்றன. தயிர் சுவையூட்டுவதுடன், பேரீச்சம்பழம், அக்ரூட் பருப்புகள் மற்றும் பிற உலர் பழங்களைச் சேர்ப்பதும் அதை நிரப்புகிறது.

ஓட்ஸ் அல்லது குயினோவாவுடன் சேர்க்கவும்
கிரானோலா உங்களின் சிறந்த நார்ச்சத்து இல்லை என்றால், குயினோவா அல்லது ஓட்ஸை முயற்சி செய்யலாம். இதில் நல்ல அளவு புரதம், நார்ச்சத்து, கால்சியம் மற்றும் குறைந்த கிளைசெமிக் குறியீடுகளுடன் ஆரோக்கியமான கொழுப்பு உள்ளடக்கம் உள்ளது. ஓட்ஸ் அல்லது குயினோவாவுடன் தயிர் கலந்து நீங்கள் சாப்பிடலாம்.

இறுதிக்குறிப்பு
ஆரோக்கியத்தில் அக்கறை கொண்டவர்கள் சத்தான உணவுகள் மற்றும் ஆரோக்கியமான மாற்றுகளைத் தேடுகிறார்கள். தயிர், கூடுதல் நன்மைகளுடன் கூடிய பல்துறை மூலப்பொருளாக இருப்பதால், எடை இழப்பை அடைய சிறந்த ஆரோக்கியமான மாற்றாக அமைகிறது.



Click it and Unblock the Notifications
