For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உடம்புல இருக்குற அதிகமான கொழுப்பு வேகமா குறையணுமா? அப்ப பூண்டை இப்படி சாப்பிடுங்க...

காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் பூண்டு நீரைக் குடித்தால், உடலினுள் மாயங்கள் நிகழும். பலருக்கும் எலுமிச்சை நீரை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் உடல் எடை கட்டுப்பாட்டில் இருக்கும் தெரியுமா?

|

லாக்டவுன் காலத்தில் வீட்டிலேயே இருந்து வாய்க்கு ருசியாக வயிறு நிறைய சாப்பிட்டு பலருக்கும் தொப்பை வந்திருக்கும். என்ன சரிதானே? ஒருவரது உடல் எடையை அதிகரிப்பது என்பது சுலபமான ஒன்று. ஆனால் அதைக் குறைப்பது தான் மிகவும் கடினமான செயல் மற்றும் அதற்காக கடுமையாக போராடி வேண்டியிருக்கும்.

How To Lose Belly Fat With Garlic Water, Tips & Tricks For Flat Tummy

டயட் மற்றும் உடற்பயிற்சியை அன்றாடம் மேற்கொள்வதன் மூலம் வயிற்றில் தேங்கியுள்ள கொழுப்புக்களைக் கரைத்து தட்டையான வயிற்றைப் பெற பல மாதங்கள் ஆகும். ஆனால் நீங்கள் பழைய உடலமைப்பை வேகமாக பெற நினைத்தால், பூண்டு நீரைக் குடியுங்கள். ஆம், இது கேட்பதற்கு உங்களுக்கு விசித்திரமாக இருக்கலாம். ஆனால் நிச்சயம் இது சிறப்பான பலனைத் தரும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பூண்டின் குணங்கள்

பூண்டின் குணங்கள்

பூண்டு கொழுப்புக்களைக் கரைக்க உதவும் மிகச்சிறப்பான பொருட்களில் ஒன்று. ஒருவர் அன்றாட உணவில் பூண்டை அதிகம் சேர்த்து வந்தால், பல ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து விலகி இருக்கலாம். உலகெங்கிலும் சமையலில் பயன்படுத்தப்படும் ஓர் முக்கிய பொருள் தான் பூண்டு. குறிப்பாக இந்திய உணவுகளில் இது கட்டாயம் இடம் பெறக்கூடிய ஒரு பொருளும் கூட. பூண்டு நல்ல மணத்தைக் கொண்டதால், இது உணவிற்கு ஓர் நல்ல மணத்தைக் கொடுக்கிறது.

பூண்டு ஊட்டச்சத்துக்களின் கிடங்கு என்பது பலருக்கும் தெரியாது. இது உடல் எடை குறைப்பதில் இருந்து நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவது, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவது என்று பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கக்கூடியது. இப்போது நாம் அசிங்கமான தொப்பையைக் குறைக்க பூண்டை எப்படியெல்லாம் சாப்பிடலாம் என்பது குறித்து தான் காணவிருக்கிறோம். வாருங்கள் பார்ப்போம்.

எடை இழப்பில் பூண்டு

எடை இழப்பில் பூண்டு

பூண்டில் நார்ச்சத்து, கால்சியம், வைட்டமின் பி6 மற்றும் சி மற்றும் மாங்கனீசு போன்றவை அடங்கியுள்ளன. இந்த ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் முக்கியமானவை மற்றும் எடையைக் குறைக்க வழிவகுப்பவை. ஒருவர் ஆரோக்கியமான மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறையுடன் பூண்டை உட்கொண்டு வந்தால், ஒரே வாரத்தில் உடல் எடையில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

பூண்டு எப்படி எடையைக் குறைக்க உதவுகிறது?

பூண்டு எப்படி எடையைக் குறைக்க உதவுகிறது?

* பூண்டில் கொழுப்புக்களை எரிக்கும் உட்பொருட்கள் உள்ளது. இது உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களை குறி வைத்து, தேவையில்லாத கொழுப்புக்களை உருகுவதற்கு தூண்டிவிடும்.

* பூண்டு உடலை சுத்தம் செய்யும் செயல்முறையிலும் முக்கிய பங்காற்றுகிறது. இதனால் செரிமான ஆரோக்கியம் மேம்பட்டு, உடல் எடையை வேகமாக குறைக்க வழி செய்கிறது.

* பூண்டிற்கு பசியுணர்வைக் கட்டுப்படுத்தும் பண்புகள் உள்ளது. ஆகவே அன்றாடம் இதை அதிகமாக உணவில் சேர்ப்பதன் மூலம், அளவுக்கு அதிகமாக உணவு உண்பது தடுக்கப்படுவதோடு, நீண்ட நேரம் பசி எடுக்காமலும் இருக்கும்.

* பூண்டு உடலின் மெட்டபாலிசத்தை மேம்படுத்தும் மற்றும் ஆற்றல் அளவை சீராக பராமரித்து ஒருவரை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும். இதனால் உடலில் உள்ள கலோரிகள் எரிக்கப்பட்டு, உடல் எடை சிறப்பாக குறையும்.

தட்டையான வயிற்றைப் பெற உதவும் பூண்டு நீர்

தட்டையான வயிற்றைப் பெற உதவும் பூண்டு நீர்

காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் பூண்டு நீரைக் குடித்தால், உடலினுள் மாயங்கள் நிகழும். பலருக்கும் எலுமிச்சை நீரை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் உடல் எடை கட்டுப்பாட்டில் இருக்கும் என்பது தெரியும். ஆனால் பூண்டு நீரைக் குடிப்பதால், உடலில் உள்ள கொழுப்புக்கள் வேகமாக எரிக்கப்படும் என்பது தெரியுமா?

சிலர் காலையில் எழுந்ததும் ஒரு பல் பூண்டை பச்சையாக வாயில் போட்டு மென்று, ஒரு டம்ளர் நீரைக் குடிப்பார்கள். ஆனால் அனைவராலும் இவ்வாறு குடிக்க முடியாது. ஏனெனில் பூண்டில் உள்ள காரத்தன்மை சிலருக்கு நெஞ்செரிச்சலை உண்டாக்கிவிடும். அத்தகையவர்கள் பூண்டு நீரைக் குடிக்கலாம்.

பூண்டு நீர் தயாரிக்கும் முறை:

பூண்டு நீர் தயாரிக்கும் முறை:

* ஒரு டம்ளர் நீரில் 2-3 பல் பூண்டு பற்களை தோலுரித்துப் போட வேண்டும்.

* இரவு முழுவதும் பூண்டை நீரில் ஊற வைக்க வேண்டும். இதனால் பூண்டில் உள்ள சத்துக்கள் அனைத்தும் நீரில் இறங்கும்.

* மறுநாள் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் பாதி டம்ளர் நீரைக் குடிக்க வேண்டும்.

* எஞ்சி நீரை மதிய வேளையில் குடிக்க வேண்டும்.

* இப்படி 3-4 வாரங்கள் தொடர்ந்து செய்து வந்தால், ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.

வேறு எப்படியெல்லாம் பூண்டை சாப்பிடலாம்?

வேறு எப்படியெல்லாம் பூண்டை சாப்பிடலாம்?

பூண்டு மற்றும் தேன்

* ஒரு சிறிய கண்ணாடி ஜாரில் தேனை நிரப்பிக் கொள்ள வேண்டும்.

* பின் அதில் சிறிது பூண்டு பற்களை தோலுரித்து சேர்த்து மூடி கொள்ள வேண்டும்.

* 4-5 மணிநேரம் நன்கு ஊற பின்னர், பூண்டை தேனுடன் சேர்த்து சாப்பிடலாம்.

பூண்டு மற்றும் எலுமிச்சை நீர்

பூண்டு மற்றும் எலுமிச்சை நீர்

* ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில், சிறிது எலுமிச்சை சாற்றினை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

* பின் அதில் சிறிது பூண்டை துருவி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

* இந்த நீரை தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இதனால் தொப்பை/உடல் எடை வேகமாக குறையும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How To Lose Belly Fat With Garlic Water, Tips & Tricks For Flat Tummy

Are you looking for ways to lose belly fat faster? Try garlic water. This remedy works in flattening your tummy within a few weeks.
Desktop Bottom Promotion