Latest Updates
-
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்..
50 வயசாகிடுச்சா? அப்ப இந்த உடற்பயிற்சியெல்லாம் தப்பித்தவறி கூட செஞ்சுடாதீங்க…
வயதாக வயதாக நம் உடல் நமக்கு ஒத்துழைக்காது. உடலின் வலிமைக்கு ஏற்ப நாம் தான் நம்மை மாற்றி கொள்ள வேண்டும். நம் உடலின் ஆற்றலுக்கு தகுந்தாற்போன்ற உடற்பயிற்சிகளையும் செய்ய வேண்டும்.
ஆரோக்கியமான உடல்நிலையை பெற வேண்டுமென்றால், சத்தான ஆகாரம், தினசரி உடற்பயிற்சி போன்றவை இன்றியமையாத ஒன்று. மருத்துவர்கள் பரிந்துரைப்பது கூட இதனை தான். நமது உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமெனில், உடல் உழைப்பு என்பது அவசியம். இன்றைய காலக்கட்டத்தில் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்க்கும் சூழல் உருவாகிவிட்டதால், உடற்பயிற்சி இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. இருப்பினும், ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்திற்கு மட்டுமே நம் உடல் நாம் சொல்வதை கேட்கும் நிலையில் இருக்கும்.

அட, வயதாவதை தான் நாசுக்காக சொல்கிறேன். வயதாக வயதாக நம் உடல் நமக்கு ஒத்துழைக்காது. உடலின் வலிமைக்கு ஏற்ப நாம் தான் நம்மை மாற்றி கொள்ள வேண்டும். நம் உடலின் ஆற்றலுக்கு தகுந்தாற்போன்ற உடற்பயிற்சிகளையும் செய்ய வேண்டும். சிறு வயதில் ஒரு உடற்பயிற்சியை சிறப்பாக செய்தீர்கள் என்பதற்காக அதனை 60 வயதில் செய்வேன் என்று செய்தால் பிரச்சனை உங்களுக்கு தான். இப்போது அவற்றை பற்றி தான் சற்று விரிவாக தெரிந்து கொள்ள போகிறோம்.

30 வயதிற்கு மேல் குறையத் தொடங்கும் உடல் வலிமை
பொதுவாகவே உடற்பயிற்சி செய்வதன் மூலம் சீரான ஆற்றல், சிறப்பான மூளை செயல்பாடு, நாள்பட்ட வியாதிகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு, வயதான காலத்தல் ஞாபக மறதி ஏற்படாமல் இருப்பது என நிறைய பலன்கள் கிடைக்கக் கூடும். ஆனால், ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் உடலில் உள்ள தசைகள் வலுவிழக்க தொடங்கும். ஆய்வுகள் கூறுவது என்னவென்றால், 30 வயதிற்கு மேல், ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கும் உடலில் வலிமையானது 3 முதல் 8 சதவிகிதம் வரை குறையும் என்றும், அதுவே 60 வயதிற்கு மேல் அதிக அளவில் குறைந்திடும் என்றும் கூறப்படுகிறது.
ஜாகிங், நீச்சல் மற்றும் நடைப்பயிற்சி போன்ற சில பயிற்சிகள் ஆரோக்கிய பலன்களை வழங்கும் உடற்பயிற்சிகளின் வரிசையில் முக்கிய இடம் பிடிக்கின்றன. இருப்பினும், உடல் காயப்படுவதை தவிர்ப்பதற்காக 50 வயதிற்குப் பிறகு ஒருபோதும் செய்யக்கூடாத சில வகை உடற்பயிற்சிகள் உள்ளன. அவற்றைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

லெக் பிரஸ் (Leg press)
கீல்வாதம் மற்றும் சுளுக்கு, புர்சிடிஸ் போன்ற மூட்டு தொடர்பான பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்கள், காலால் அழுத்தம் கொடுத்து செய்யக்கூடிய உடற்பயிற்சியை தவிர்த்தே ஆக வேண்டும். இந்த உடற்பயிற்சி முழங்கால்களில் தேவையற்ற அழுத்தத்தை உருவாக்குவதன் மூலம், முழங்கால் மூட்டுகளைச் சுற்றியுள்ள தசைநார்கள் மற்றும் தசைநாண்களை பாதிப்படையக்கூடும்.

பளுதூக்குதல் (Deadlifts)
டெட்லிஃப்ட் என்பது அதிதீவிரம் கொண்ட உடற்பயிற்சிகளில் ஒன்றாகும். இது முழங்காலில் பாதிப்பு ஏற்படுத்துவதற்கான அபாயம் அதிகம் உள்ளது. குறிப்பாக 50 வயதிற்கும் அதிகமாக உள்ளவர்கள் இந்த உடற்பயிற்சியை தவிர்த்தே ஆக வேண்டும். பொதுவாகவே வயதாகும் போது, உங்கள் தசைகள் வலிமையை இழக்கத் தொடங்குகின்றன. மேலும், இது முதுகெலும்பு பாதிப்பிற்கு வழிவகுக்கும்.

ஸ்குவாட் (Squat)
ஸ்குவாட் உடற்பயிற்சி செய்யும் போது பல மூட்டுகள் ஈடுபடுவதால், இது முழங்கால் வலி அல்லது காயத்தை ஏற்படுத்தக்கூடும். கீல்வாதம் அல்லது முழங்காலில் காயம் போன்றவை இருப்பவர்கள் ஸ்குவாட் செய்வதை நிறுத்தியே ஆக வேண்டும். அப்போது தான் மூட்டுகளில் வலி ஏற்படுவதை தவிர்க்க முடியும்.

படுத்தபடி பளு தூக்குதல் (Bench press)
சரியான முறையில் பெஞ்ச் பிரஸ் செய்ய தவறும் பட்சத்தில் தோள்கள், மணிகட்டுகள் மற்றும் மார்பு தசைகளுக்கு ஆபத்தாக முடியும். ஆனால், வயதான பிறகு, பெஞ்ச் பிரஸ் பயிற்சியில் ஈடுபடும் போது உண்டாகக்கூடிய அழுத்தம் மற்றும் எடையை உங்கள் மூட்டுகளால் தாங்கவோ, கையாளவோ முடியாது. இது அதிகப்படியான ஆபத்தை உண்டாக்கக்கூடும்.

லாட்-புல் டவுன்
லாட் புல்-டவுன் என்பது பல மூட்டுகள் மற்றும் தசைகளுக்கு ஒரே நேரத்தில் வேலை அளிக்கக்கூடிய ஒரு உடற்பயிற்சி ஆகும். இந்த உடற்பயிற்சியின் போது முதுகின் பின்புறமாக எடையை இழுக்க வேண்டும். மேலும், தோள்பட்டையின் முன்புற மூட்டு பகுதிக்கு அதிக அழுத்தத்தை அளிக்கக்கூடியது. எனவே, இந்த உடற்பயிற்சியை 50 வயதிற்கு மேல் செய்ய முயற்சி செய்யவே கூடாது.

முடிவுரை
ஜாக்கிங், வாக்கிங், சைக்கிளிங் போன்ற குறைந்த தாக்கத்தை கொண்ட பயிற்சிகள் மட்டுமே 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு நன்மை பயக்கும். இந்த பயிற்சிகள் எவ்வித காயத்தையோ, பாதிப்பையோ ஏற்படுத்தாது மற்றும் தசைகள், தசைநார்கள் ஆகியவற்றில் குறைந்த அழுத்தத்தை மட்டும் உண்டாக்கக்கூடியவை.



Click it and Unblock the Notifications