Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
இந்த பானங்களை அடிக்கடி குடிச்சீங்கனா... உங்க தொப்பை மலை மாதிரி வளர்ந்துக்கிட்டே போகுமாம்..ஜாக்கிரதை!
குளிர் பானங்கள், சோடா அடிப்படையிலான ஆற்றல் பானங்கள் அவற்றின் கவர்ச்சியான சுவை மற்றும் ஃபிஸி பஞ்ச் மூலம் உங்கள் தாகத்தைத் தணிக்கலாம்.
பெரும்பாலான மக்களின் புத்தாண்டு தீர்மானமாக இருப்பது தொப்பை மற்றும் உடல் எடையை குறைப்பது சார்ந்ததாக இருக்கும். ஆனால், உங்கள் உடல் எடையை குறைப்பது என்பது அவ்வளவு எளிதானதல்ல. கடுமையான உடற்பயிற்சி முதல் நீண்ட தூரம் நடப்பது மற்றும் உணவை மாற்றுவது வரை உடல் எடையைக் குறைக்கும் ஆர்வம் உங்களை மலையளவு உழைக்கச் செய்யும். ஆனால், உடல் எடையை குறைக்கும் பயணத்தில் நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள்? என்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதேநேரம், நீங்கள் எதைப் பருகுகிறீர்கள் என்பதில் எப்போதாவது கவனம் செலுத்தி இருக்கிறீர்களா? ஏனெனில், பெரும்பாலான உணவுத் திட்டங்கள் நாம் உண்ணும் உணவைச் சுற்றியே இருக்கின்றன.

ஆனால் நாம் உணவுடன் இணைக்கும் பானங்களிலிருந்து வரும் அதிக கலோரிகளைப் பற்றி நாம் கவனம் செலுத்துவதில்லை. உங்கள் உடலில் கலோரிகளை ரகசியமாகச் சேர்த்து, உங்கள் எடை இழப்புத் திட்டங்களைக் கெடுக்கும் சில பொதுவான பானங்கள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

காபி
உடல் எடையை குறைக்க முடியாமல் போனதற்கு தங்களுக்கு பிடித்த பானமே காரணம் என்பதை ஏற்றுக்கொள்ள காபி பிரியர்களுக்கு கசப்பான உண்மையாக இருக்கலாம். காஃபினை சரியான முறையில் எடுத்துக் கொண்டால் உடல் எடையை குறைக்க ஒரு ஊக்கியாக செயல்படும். ஆனால் காபியை சர்க்கரை, அதிகப்படியான பால் மற்றும் கிரீம் ஆகியவற்றைக் கலந்து அதன் செயல்திறனைக் குறைத்து கலோரி எண்ணிக்கையை அதிகரிக்கலாம். நீங்கள் எடையை குறைக்க திட்டமிட்டால், நிபுணர்கள் பிளாக் காபிக்கு மாற பரிந்துரைக்கிறார்கள். சிறந்த எடை மேலாண்மைக்கு உதவும் சில மசாலாப் பொருட்களுடன் அதை இணைக்கவும் வலியுறுத்தவும் பரிந்துரைக்கின்றனர்.

பிரீமிக்ஸ்டு பானங்கள்
உடல் எடையைக் குறைக்கும் போது, பிரீமிக்ஸ்டு பானங்கள் மிகவும் வசதியான விருப்பமாக உங்களுக்கு தோன்றலாம். ஆனால் உங்களுக்குப் பிடித்த ப்ரீமிக்ஸ்டு டீ ஒன்றும் இல்லை. இதில், சர்க்கரை, சுவைகள், டீயின் சிறிய குறிப்புடன் கூடிய வெற்று கலோரிகள் மட்டுமே உள்ளது. இந்த பானங்கள் உங்கள் கலோரிகள் மற்றும் சர்க்கரையை மட்டுமே அதிகரிக்கும் என்றும், புதிய தேநீர் தயாரிப்பது அல்லது ஆரோக்கியமான மற்றும் ஆறுதல் தரும் மூலிகை தேநீர் வகைகளைத் தேர்ந்தெடுப்பது சிறந்தது என்றும் நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

கார்பனேற்றப்பட்ட பானங்கள்
குளிர் பானங்கள், சோடா அடிப்படையிலான ஆற்றல் பானங்கள் அவற்றின் கவர்ச்சியான சுவை மற்றும் ஃபிஸி பஞ்ச் மூலம் உங்கள் தாகத்தைத் தணிக்கலாம். ஆனால், நிபுணர்கள் இந்த பானங்களில் சர்க்கரை மற்றும் வெற்று கலோரிகளின் குவியல்கள் மட்டுமே உள்ளன என்று தெரிவிக்கிறார்கள். இந்த பானங்கள் உடனடியாக ஆற்றலை வழங்கும். இந்த ஆற்றலின் எழுச்சி படிப்படியாக உங்களை நீரிழப்புக்கு ஆளாக்குகிறது மற்றும் இரத்த சர்க்கரை, இதய பிரச்சினைகள் மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஆகியவற்றின் அபாயத்தையும் அதிகரிக்கிறது.

மது பானங்கள்
ஒயின், பீர் மற்றும் பிற மதுபானங்களுடன் உணவுகளை இணைத்துக்கொள்வது கலோரி எண்ணிக்கையை அதிகரிக்கலாம் மற்றும் உங்கள் எடை இழப்பு திட்டங்களை அழிக்கலாம். டிஜிட்டல் நாளிதழில் வெளியிடப்பட்ட சிடிசி (நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம்- CDC) அறிக்கையின்படி, அமெரிக்க நபர்கள் சராசரியாக ஒரு நாளைக்கு 100 கலோரிகளை மது பானங்களிலிருந்து உட்கொள்வது கண்டறியப்பட்டது. உண்மையில், இரவு உணவோடு மதுபானங்களைப் பருகுவது கலோரி எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கலாம் மற்றும் வளர்சிதை மாற்ற மற்றும் இதயக் கோளாறுகளின் அபாயத்தை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

பழச்சாறுகள்
ஆரோக்கியமானவை என்று கூறப்படும் பழச்சாறுகள் மிகவும் ஆரோக்கியமற்ற பானங்களில் ஒன்றாகும். ஏனென்றால், உங்களுக்கு நல்ல சுவையை வழங்குவதற்காக பழச்சாறுகளில், சர்க்கரை மற்றும் ப்ரிசர்வேட்டிவ்களை சேர்க்கிறார்கள். இது கலோரி எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் உங்கள் உணவுத் திட்டங்களைக் கெடுத்துவிடும். மேலும், சர்க்கரையானது உடல் எடையை அதிகரிப்பது மட்டுமின்றி, உடல்நலப் பிரச்சனைகளையும் அதிகரிக்கும் என்பதால், பேக்கேஜ் செய்யப்பட்ட பழ ஜூஸைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, புதிய ஜூஸைத் தேர்ந்தெடுப்பது நல்லது என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். இல்லையெனில், பழங்களை நீங்கள் அப்படியே சாப்பிடலாம்.



Click it and Unblock the Notifications