Latest Updates
-
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
அக்டோபர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 6 ராசிக்காரங்க அடுத்த 1 மாதம் கவனமா இருக்கணும்! -
சைக்கோவாக நடந்து கொள்ளும் 4 ஆபத்தான ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
இப்படி இருக்குற பானை வயிறை 2 வாரங்களில் தேனை கொண்டு குறைப்பது எப்படி?
உடல் எடை கூடும் பிரச்சினை ஒரு பக்கம் இருந்தாலும், இதனால் உண்டாக கூடிய பாதிப்புகள் தான் நம்மை பாடாய் படுத்தி எடுக்கிறது. என்னதான் செஞ்சாலும் இந்த உடல் எடையை குறைக்க முடியாமல் திணறுவது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் இந்த பானை போன்ற தொப்பை நம்மை மோசமான நிலைக்கு கொண்டு வந்து விடுகிறது.

தொப்பை பிரச்சனையை நினைத்தாலே அதை எப்படி எல்லாரும் கிண்டல் செய்வார்கள் என்பது தான் நியாபகத்துக்கு வரும். இந்த தொப்பையை அவர்கள் செய்யும் கிண்டலுக்காக குறைப்பதை விட, நமது உடல் ஆரோக்கியத்திற்காக குறைப்பது தான் நல்லது.
தொப்பையை சில சிறப்பான இயற்கை வீட்டு முறைகளை கொண்டே குறைக்க இயலும். குறிப்பாக தேனை வைத்தே நம்மால் தொப்பையை குறைக்க முடியும் எனதற்போதைய ஆய்வு சொல்கிறது. தேனை வைத்து தொப்பையை குறைக்கும் 3 வழிகளை பற்றி இந்த பதிவில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

ஆயுர்வேதம்
மருத்துவ பயன்பாட்டில் தேன் மிக முக்கியமான ஒன்று. குறிப்பாக இயற்கை முறை வைத்தியங்களான சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவ போன்றவற்றில் இதன் பங்கு அளப்பரியது. நீண்ட காலம் கெடாத மிக பழமை வாய்ந்த உணவாக தேனை தான் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

ஆய்வு!
தேனை வைத்து செய்த ஆய்வில் உடல் எடை சார்ந்த சில தகவல்கள் வெளி வந்தன. அதாவது நமது உடலில் பயன்படுத்தப்படாமல் இருக்கின்ற கொழுப்புகள் தான் உடல் எடை மற்றும் தொப்பை போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.
இந்த வகை தேவையற்ற தேங்கியுள்ள கொழுப்பை நீக்குவதற்கு தேன் உதவுகிறது என இந்த ஆய்வின் முடிவுகள் வெளியிட்டுள்ளன.

கொலஸ்ட்ரால்
தேனில் நல்ல கொலெஸ்ட்ரால்கள் அதிக அளவில் உள்ளது. மேலும், இவற்றில் கெட்ட கொலஸ்ட்ராலை வெளியேற்ற கூடிய தன்மையும் இருப்பதால் மிக சுலபமாக தேனை கொண்டு தொப்பையை குறைத்து விடலாம். கூடவே இதய நோய்களையும் தடுக்கலாம்.

சத்துக்கள்
நாம் நினைப்பதை விடவும் தேனில் பல விதமான சத்துக்கள் உள்ளது. முக்கியமாக ஆன்டி ஆக்சிடன்ட்ஸ், குளுக்கோஸ், மால்டோஸ், பொட்டாசியம், பாஸ்பரஸ், இரும்புசத்து, சோடியம் போன்றவை நிறைந்துள்ளது.
இதில் உள்ள பொட்டாசியம் தான் இதய நோய்களை ஏற்படுத்தாமல் பார்த்து கொள்கிறது.

எவ்வாறு பயன்படுத்தலாம்?
தேனை சில பொருட்களோடு சேர்த்து பயன்படுத்தும் போது தான், அதன் தன்மை சிறப்பாக இருக்கும். குறிப்பாக வெது வெதுப்பான நீர், எலுமிச்சை சாறு முதலியவற்றை கூறலாம்.
சிலர் பூண்டுடன் சேர்த்தும் சாப்பிடுவதுண்டு. இனி எப்படி இந்த தொப்பையை குறைக்கும் கலவையை தயாரிப்பது என்பதை பற்றி அறியலாம்.

தயாரிப்பு முறை #1
5 பூண்டு பற்களை எடுத்து கொண்டு அவற்றை துண்டு துண்டாக நறுக்கி ஒரு ஜாடியில் போட்டு கொள்ளவும். அதன் பின் இவை மூழ்கும் அளவிற்கு தேன் சேர்த்து கொள்ள வேண்டும்.
இதனை தினமும் காலையில் வெறும் வயிற்றில் 1 ஸ்பூன் அளவு சாப்பிட்டு வந்தால் தொப்பை கிடுகிடுவென குறையும்.

தயாரிப்பு முறை #2
1 கிளாஸ் மிதமான சுடு நீரில் 1 ஸ்பூன் தேன் கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் தொப்பை கிடுகிடுவென குறையும். இதில் முக்கிய குறிப்பு என்னவென்றால் தண்ணீரானது அதிக சூடு கொண்டதாக நிச்சயம் இருக்க கூடாது.

தயாரிப்பு முறை #3
1 ஸ்பூன் தேனை 1 கிளாஸ் வெது வெதுப்பான நீர் மற்றும் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு ஆகியவற்றுடன் கலந்து காலை நேரத்தில் வெறும் வயிற்றில் குடித்து வரலாம்.
அல்லது 1 கிளாஸ் கிரீன் டீயில் தேனை 1 ஸ்பூன் கலந்து குடித்து வரலாம். இந்த வகையில் தேனை பயன்படுத்தினால் மிக விரைவிலே பானை வயிற்றையும், பருமனான உடலையும் குறைத்து விடலாம்.



Click it and Unblock the Notifications
