For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கீட்டோ டயட்ல வெயிட் கடகடனு குறையணுமா?... இத மட்டும் மனசுல வெச்சிக்கங்க...

கீட்டோ டயட் இருப்பவர்கள் செய்கின்ற தவறுகள் பற்றியும் அதன்மூலம் உண்டாகிற விளைவுகள் பற்றியும் இங்கே விரிவாகப் பார்க்கலாம்.

|

இப்பொழுது எல்லாம் உடல் எடையை குறைக்க வேண்டும் என்றால் புதுப்புது டயட் முறைகள் தான் வலம் வருகிறது. அப்படி 2018 ல் வந்த பெஸ்ட் டயட் முறை தான் இந்த கீட்டோ டயட். இது ஃப்லோ பண்ண கஷ்டமாக இருந்தாலும் உடல் எடை வெகுவாக குறைவது சாத்தியம் என்றே மக்களின் கருத்தாக உள்ளது.

Common Keto Mistakes

பொதுவாக இந்த டயட் முறையில் ஸ்டார்ச் நிறைந்த காய்கறிகள், குறைந்த பழங்கள், தானியங்கள், சாஸ், ஜூஸ் மற்றும் ஸ்வீட்ஸ் போன்றவற்றை தவிர்க்க வலியுறுத்தப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கீட்டோ டயட்

கீட்டோ டயட்

கார்போஹைட்ரேட் குறைந்த உணவை எடுத்துக் கொள்ளும் போது நமது எனர்ஜி கீட்டோனாக உருவாகி உடம்பில் உள்ள கெட்ட கொழுப்புகள் எரிக்கப்படுகிறது. இதனால் எளிதாக உடல் எடையும் குறைந்து விடுகிறது. ஒரே வார்த்தையில் சொல்லப் போனால் கீட்டோ டயட் ' கொழுப்பை எரிக்கும் மெஷின்' என்று சொல்லலாம். அப்படிப்பட்ட இந்த டயட் டை ஆரம்பிக்கும்முன் அதில் ஏற்படும் தவறுகளை எப்படி தவிர்ப்பது என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம்.

MOST READ: இந்த கிழங்க கட்டாயம் பார்த்திருப்பீங்க... இதோட மாவுல என்னென்ன அதிசயம் இருக்குன்னு தெரியுமா?

குறைந்த கார்போஹைட்ரேட்

குறைந்த கார்போஹைட்ரேட்

கார்போஹைட்ரேட்டை தவிர்த்து கொழுப்பை வேகமாக அதிகரிப்பது. திடீரென்று கார்போஹைட்ரேட்டை உணவாக எடுத்துக் கொண்டு வந்தவர்கள் கீட்டோ டயட்டை ஆரம்பிக்கும் போது முதல் நாளில் 20 கிராம் அளவு மட்டுமே கார்போஹைட்ரேட் உணவை எடுத்துக் கொள்ளுங்கள். இதற்கு ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் போதுமானது. ஒரு ஆப்பிளில் 25 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளது. இந்த கார்போஹைட்ரேட் மாற்றம் உங்களுக்கு ஒரு நல்ல மாற்றத்தை கொடுக்கும் என்று ஊட்டச்சத்து நிபுணர் லீலா க்ளெவென்ஜெர், நியூ ஸ்மிர்னா பீச், புளோரிடாவில் இருந்து கூறுகிறார்.

போதுமான தண்ணீர் குடிக்காமல்

போதுமான தண்ணீர் குடிக்காமல்

எல்லாரும் டயட் என்று வந்துட்டாலே சாப்பிடுவதில் மட்டுமே கவனம் செலுத்துவோம். கீட்டோ டயட் முறையில் நீர்ச்சத்து பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது. நீங்கள் கார்போஹைட்ரேட்டை குறைக்கும் போது அதே நேரத்தில் போதுமான அளவு நீர் அருந்தவும் வேண்டும். இந்த கார்போஹைட்ரேட் உணவுகள் தண்ணீருடன் சேமித்து வைக்கப்படுகின்றன என்று ஊட்டச்சத்து முகாமையாளர் அலிஸா டூக்கி கூறுகிறார். மேலும் அந்த ஆற்றலை கீட்டோனாக மாற்றி சிறுநீரில் உள்ள சோடியம் மற்றும் தண்ணீரை உடம்பிலிருந்து வெளியேற்றுகிறது. உங்கள் உடல் எடை பாதியாக குறையும் வரை போதுமான அளவு தண்ணீர் எடுத்து வாருங்கள் என்று டூக்கி கூறுகிறார்.

கீட்டோ ப்ளூ

கீட்டோ ப்ளூ

இதுவரை கார்போஹைட்ரேட் லிருந்து கொழுப்பாக டயட்டை மாற்றும் போது உடம்பில் சில உபாதைகள் ஏற்படலாம். தசைகள் பிடிப்பு, வாந்தி, தலைவலி மற்றும் சோர்வு போன்றவை முதல் இரண்டு வாரங்களுக்கு (கீட்டோ ப்ளூ) தென்படலாம். இருந்தாலும் இது எல்லாருக்கும் ஏற்படுவதில்லை. இந்த டயட்டுக்கு நீங்கள் முழுவதுமாக தயாராக இல்லை என்றால் கொஞ்ச நாளைக்கு குறைந்த ஆற்றலை தரும் உணவுகளை எடுத்துக் கொண்டு வரலாம் என்று க்ளெவென்ஜெர் கூறுகிறார். பொட்டாசியம், மக்னீசியம், சோடியம் போன்ற உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். இது கீட்டோ ப்ளூவை குறைத்து விடும் என்கிறார் அவர்.

MOST READ: கர்ப்பமாக இருக்கும்போது பேலியோ டயட் இருக்கலாமா? அதனால் என்ன மாதிரி பிரச்சினை வரும்?

ஓமேகா 3 கொழுப்பு உணவை எடுங்கள்

ஓமேகா 3 கொழுப்பு உணவை எடுங்கள்

கொழுப்பு என்றாலே பன்றி இறைச்சி, சீஸ் மற்றும் க்ரீம் போன்றவை மட்டும் இல்லாமல் ஓமேகா 3 அடங்கிய உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். குறிப்பாக இபிஏ மற்றும் டிஎச்ஏ கொழுப்புகள் நல்லது. இவை சால்மன், மத்தி, சிப்பிகள், ஹெர்ரிங் போன்ற மீன்களில் உள்ளன. இதை நீங்கள் மீன் எண்ணெய் ஆக கூட எடுத்துக் கொள்ளலாம். அவகேடா, ஆலிவ் ஆயில், சியா விதைகள், ஆளி விதைகள் போன்ற பாலி அன்சேச்சுரேட்டேடு மற்றும் மோனோசேச்சுரேட் நல்ல கொழுப்புகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

உப்பை தவிருங்கள்

உப்பை தவிருங்கள்

அதிகமாக உப்பு சேர்க்காமல் இருப்பது நல்லது. பதப்படுத்தப்பட்ட உணவுகளான பிரட், சிப்ஸ், குக்கீஸ், ரொட்டி போன்றவற்றில் அதிகமான உப்பு இருக்க வாய்ப்புள்ளது. எனவே கீட்டோஜெனிக் டயட் இருக்கும் போது உங்களுக்கு தேவையான உணவை போதுமான அளவு உப்பிட்டு தயாரித்து நீங்களே சாப்பிடுங்கள் என்று டூக்கி கூறுகிறார்.

மருத்துவரை ஆலோசியுங்கள்

மருத்துவரை ஆலோசியுங்கள்

நிறைய பேர்கள் இந்த டயட் பற்றிய புரிதல் இல்லாமல் அவர்களாகவே உடனே ஆரம்பித்து விடுகிறார்கள். அப்படி இல்லாமல் இது குறித்து உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்ு கொள்ளலாம் என்று க்ளெவென்ஜெர், கூறுகிறார். ஏனெனில் இந்த குறைந்த கார்போஹைட்ரேட் டயட் முறை உங்கள் இன்சுலின் அளவை குறைக்க வாய்ப்புள்ளது எனவே உங்கள் உடல் நலம் புரிந்த மருத்துவரிடம் இது குறித்து பேசிக் கொள்வது நீங்கள் எடுத்து வரும் மருந்துகளை மேம்படுத்த உதவியாக இருக்கும்.

காய்கறிகளை எடுப்பதில் கவனமாக இருங்கள்

காய்கறிகளை எடுப்பதில் கவனமாக இருங்கள்

காய்கறிகளிலும் கார்போஹைட்ரேட் உள்ளது. எனவே கீரைகள் போன்றவற்றை எடுத்துக் கொள்ளும் போது கவனமாக இருங்கள். அதிகளவில் கார்போஹைட்ரேட் எடுத்தால் கீட்டோன் அளவு குறைந்துவிடும். எனவே சரியான அளவில் காய்கறிகளை எடுத்து கொள்ளுங்கள். காய்கறிகளை சுத்தமாக தவிர்ப்பதும் நல்லது அல்ல. காரணம் இதிலுள்ள நார்ச்சத்துகள் மலச்சிக்கலை போக்கும். எனவே பச்சை காய்கறிகள், கீரைகள், வெள்ளரிக்காய், தக்காளி, பிரக்கோலி, காலிபிளவர், குடைமிளகாய், அஸ்பாரகஸ் போன்ற காய்கறிகளை எடுத்துக் கொள்ளுங்கள் என்று டூக்கி கூறுகிறார்.

MOST READ: உறவின்போது விந்து உள்ளே செல்லும்முன் உறுப்பை எடுத்துவிட்டால் கர்ப்பம் உண்டாகுமா? ஆகாதா?

உணவு தரத்தை மறத்தல்

உணவு தரத்தை மறத்தல்

கீட்டோ டயட் என்றதும் கார்போஹைட்ரேட் இல்லாத உணவை சாப்பிட ஆரம்பித்து விடுவோம். ஆனால் இதற்கிடையில் தரமான உணவை எடுத்துக் கொள்ள மறந்து விடுகிறார்கள். தரமான உணவுகள் மட்டுமே உங்களை ஆரோக்கியமாக வைக்கும். எனவே தரமான ஓமேகா 3 கொழுப்பு உணவுகள், சமநிலை அளவில் காய்கறிகள் மற்றும் பழங்களை எடுத்து வருதல் அவசியம்.

இதிலும் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுவதால் சிலர் இந்த டயட்டை விரும்புவதில்லை. ஆனால் உங்களின் சரியான அளவு முறை இதை நீக்கிவிடும். உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து உணவுகளை இந்த டயட் முறையில் எடுத்து வந்தாலே போதும். எடை குறைவதோடு ஆரோக்கியமாக இருக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

8 Common Keto Mistakes That Beginners Make and How to Avoid Them

here we are giving some Common Keto Mistakes That Beginners Make, and How to Avoid Them.
Desktop Bottom Promotion