For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இதய நோயாளியா? உப்புக்கு நோ சொல்லுங்க 16 உணவுகளில் உங்களுக்கே தெரியாம உப்பை அதிகமா உண்கிறீர்கள்

பணியிடை மாறுதல் ஏற்பட்ட எல்லா இடங்களிலும் ஒருவரைக் காதலித்து குடும்பம் நடத்தியிருக்கிறார். சொந்த ஊரான தருமபுரியில் தனது மாமன் மகளைக் காதலித்து திருமணம் செய்து அவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் இருக்கின்

By ஹரிபாலசந்தர் பாஸ்கர்
|

உப்பு சப்பில்லாமல் சாப்பாடா? சொல்லவே ஒரு மாதிரி இருக்கல்லவா.. உப்பு இல்லாமல் ஒரு பருக்கைக் கூட இறங்காதவர்கள் இங்கே அதிகம் ஆனால் அதிகப்படியா உப்புகள் எடுத்துக் கொண்டால் அதிலுள்ள சோடியம் சிறுநீரகச் செயல்பாட்டை அதிகமாக பாதிக்கிறது என்று ஆய்வறிக்கைகள் கூறுகிறது. சிறுநீரகம் தான் இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்வதில் முக்கிய பங்காற்றி வருகிறது. அப்படி இருக்கும் சூழலில் அதிகப்படியான சோடியம் அதிகமாக உடலில் எடுக்கும் பொழுது இரத்த அழுத்தத்தை அசௌகரியமாக்கி உடலில் எண்ணற்ற தீமைகளை ஏற்படுத்துகிறது.

high sodium foods to avoid

சோடியம் அதிகமுள்ள உணவுப்பொருட்கள் என பொதுவெளியில் எல்லோருக்கும் தெரிந்த உணவுப்பொருட்களை நீங்கள் தவிர்த்திருக்கலாம். ஆனால் நீங்கள் உண்ணும் உணவில் உங்களுக்கே தெரியாமல் சோடியம் அதிகமுள்ள உணவுகள் இருக்கிறது. கடுமையான டயட்டில் இருந்தும் இந்த உணவுகளை தெரியாமல் உண்பதால் டயட் இருந்து என்ன பயன். நீங்கள் அதிகம் உண்ணும் 16 உணவுகளில்

சோடியத்தின் அளவு எக்கச்சக்கமாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1 கிரீம் சீஸ் கொண்ட ஒரு பேகல்

#1 கிரீம் சீஸ் கொண்ட ஒரு பேகல்

ஒரு கிரீம் சீஸ் கொண்ட பேகலில் 450 மிகி சோடியம் நிறைந்துள்ளது. இது நீங்கள் ஒரு நாளைக்கு எடுத்துக் கொள்ளும் உப்பின் அளவில் 20% ஆகும். அதுமட்டுமில்லாமல் கூடுதலாக கிரீம், சீஸ், அல்லது பட்டரை சேர்க்கும் போது ஒரு டேபூள் ஸ்பூனுக்கு 40லிருந்து50 மிகி சோடியத்தை உங்கள் காலை உணவில் சேர்த்துக் கொள்கிறீர்கள் என்று அர்த்தம்.

Most Read: மேனிக்யூர் பெடிக்யூர் செய்ய பார்லர்லாம் போகத் தேவை இல்லை... இதுமட்டும் இருந்தா போதும் வீட்டிலேயே இதை செய்யலாம்.

#2 பன்றி இறைச்சி

#2 பன்றி இறைச்சி

பன்றி இறைச்சி 400 மிகி/அவுன்ஸ் சோடியத்தை கொண்டுள்ளது. மேலும் நீங்கள் புரதத்தை உட்கொள்வதாக எண்ணி இதை உட்கொள்ளலாம். ஆனால் எந்த விகிதத்தில் என்ற கேள்வி உங்களுக்குள் கட்டாயம் எழ வேண்டும் ஏனெனில் புரதத்துடன் கூடிய அதிகளவு சோடியமும் உடலில் சேர்கிறது. எனவே இந்த புரதம் கட்டாயம் தேவை என்று எண்ணுகிறவர்கள் அன்றைய தினத்தின் மற்ற உணவுகளில் சோடியம் குறைந்த உணவுகளாக தேர்வு செய்து டயட்டை மேற்கொள்ள வேண்டும்.

#3 கோழியின் நெஞ்சுப்பகுதி

#3 கோழியின் நெஞ்சுப்பகுதி

பேக் செய்யப்பட்ட கோழியின் நெஞ்சுப்பகுதி சமைக்கும் முன்னரே சோடியத்தால் நிரம்பியுள்ளது. ஒரு சில பிராண்ட்களில் ஒரு அவுன்ஸ்க்கு 133மிகி சோடியம் நிறைந்துள்ளது. சிக்கன் சுவையாக இருப்பதற்காக சாலின் எனப்படும் வேதிப்பொருளை உட்செலுத்தப்படுவதால் தான் இந்த சோடிய அளவு அதிகமாக காணப்படுவதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது. இதைத் தவிர்ப்பதற்கு பேக் செய்யப்பட்டு வரும் சிக்கனின் லேபிலைத் தெளிவாகப் படிக்க வேண்டும் . சுவையைக் கூட்டுவதற்காக சேர்க்கப்படும் பொருள்களைத் தெரிந்து கொண்டு சமைக்கும் போது மசாலாப் பொருட்கள், உப்பு, ஆகியவற்றை பயன்படுத்துவதை முடிவு செய்யலாம்.

#4 அவித்த பீன்ஸ்

#4 அவித்த பீன்ஸ்

உண்பதற்கு இனிமையாக இருந்தாலும் கூட அவித்த பீன்ஸ் 906 கலோரிகளைக் கொண்டுள்ளது இது உங்கள் நாள் முழுமைக்கும் தேவைப்படும் சோடியத்தின் அளவோடு பார்க்கும் போது 25% ஆகும். இதைத் தவிர்ப்பதற்கு சோடியம் குறைவாக உள்ள பேக் செய்யப்பட்ட பீன்ஸை தேர்வு செய்யவும் அல்லது பீன்ஸை சமைப்பதற்கு முன் நன்றாக நீரில் கழுவி பயன்படுத்தினால் சோடியத்தின் அளவு பேக்டு பீன்ஸில் முன்பிருந்த அளவைவிட கணிசமாக குறையும்.

#5 பேக் செய்யப்பட்ட ரவ்யோலி:

#5 பேக் செய்யப்பட்ட ரவ்யோலி:

ரவியோலி ஒரு வகையான இத்தாலியன் பாஸ்தா வகையைச் சேர்ந்தது. இந்த பாஸ்தா சீஸ்களை கொண்டிருந்தால் சோடியத்தின் அளவு அதிகமாக இருக்கும். பேக் செய்யப்பட்ட ரவியோலி 927 மிகி சோடியத்தைக் கொண்டுள்ளது. இது ஒரு நாளைக்குத் தேவையான அளவில் 38% ஆகும். ரவியோலி பிரியர்களாக இருந்தீர்கள் என்றால் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்ட ரவியோலியை வாங்கி சீஸ் மற்றும் சாஸை நீங்களாகவே குறைவான அளவு சேர்த்து பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

#6 அடைத்து வைக்கப்பட்ட காய்கறி ஜூஸ்:

#6 அடைத்து வைக்கப்பட்ட காய்கறி ஜூஸ்:

பாட்டிலில் அடைத்து காய்கறி சாறில் சுவையை அதிகரிப்பதற்காக வி-8ஐ பயன்படுத்துகிறார்கள். ஆனால் ஒரு பாட்டிலில் 450 மிகி சோடியம் உள்ளது என்பது ஊட்டச்சத்திற்காக குடிக்கிறீர்கள் என்றாலும் மிகவும் அதிகமானது.

#7 பாஸ்தா சாஸ்:

#7 பாஸ்தா சாஸ்:

பாஸ்தா சாஸிற்கு எக்ஸ்ட்ரா உப்பு தேவை என நினைத்து ஏமாற வேண்டாம். ஏனெனில் சாஸ் நிரப்பப்படும் சாடிகள் சோடியத்தால் நிரப்பப்பட்டுள்ளன. மேலும் 1/2 கப் பாஸ்தாவில் 480 மிகி சோடியம் இருக்கிறது.உங்களுடைய நூடுல்ஸ் சிறப்பானதாக அமைய ஆரோக்கியமான மூலிகைகளையும், மசாலாக்களையும் உப்பிற்கு பதிலாக பயன்படுத்தலாம்.

Most Read: டயட் இருக்கும்போது நீங்க செய்யற ஆபத்தான 10 விஷயங்கள் என்ன தெரியுமா?

#8 வெஜ் பர்க்கர்:

#8 வெஜ் பர்க்கர்:

வெஜ் பர்க்கரில் கூடுதலாக சேர்க்கப்படும் பன், ஊறுகாய், மற்றும் சுவையூட்டும் பொருள்கள் நீங்கலாக 540 மிகி சோடியம் உள்ளது. எனவே இந்த புள்ளிவிவரங்கள் கடைக்கு கடை மாறுபடும் எனவே வெஜ் பர்க்கரை உண்ணும் போது ஊட்டச்சத்துக் குறிப்புகளை பார்த்துவிட்டு வாங்குவது நல்லது.

#9 காட்டேஜ் சீஸ்

#9 காட்டேஜ் சீஸ்

குறைந்த கொழுப்புள்ள காட்டேஜ் சீஸ் ஆரோக்கியமான காலை உணவிற்குச் சிறந்தது. ஆனால் கொழுப்பு நிறைந்த காட்டேஜ் சீஸ் சோடியங்களை அதிக அளவு கொண்டிருக்கும். ஒரு கப்பில் உள்ள 2 சதவீத காட்டேஜ் சீஸில் 740 மிகி காட்டேஜ் சீஸ் உள்ளது.

#10 பேக் செய்யப்பட்ட காய்கறிகள் :

#10 பேக் செய்யப்பட்ட காய்கறிகள் :

பேக் செய்யப்பட்ட காய்கறிகளின் சுவை மற்றும் குணம் மாறாமல் இருப்பதற்காக சோடியம் சேர்க்கப்படுகிறது. மேலும் பசுமையான காய்கறிகளில் கிடைக்கும் அதே அளவான மருத்துவக் குணங்கள் இதில் கிடைத்தாலும் கூட அதிகளவுள்ள சோடியம் உடலுக்கு நல்லது அல்ல. பேக் செய்யப்பட்ட கார்னில் 540 மிகி சோடியம் இருக்கிறது இது இயற்கையான கார்னில் வெறும் 13 மிகி/ 4 அவுன்ஸ் தான் இருக்கிறது. பேக் செய்யப்பட்ட கார்னுக்கும் இயற்கையான கார்னுக்கும் உள்ள வித்தியாசத்தைப் பார்த்தாலே உடல்நலத்திற்கு எவ்வளவு கெடுதல் என்பதை எண்ணிப் பார்க்க முடியும்.

#11 ப்ரெட்

#11 ப்ரெட்

என்னது ப்ரெட்டிலுமா சோடியம் அதிகமாக உள்ளது என்ற சந்தேகம் எழலாம். ஏனெனில் பலருடைய காலை உணவே ப்ரெட்டாகத் தான் இருக்கிறது. ஆனால் உண்மை என்னவெனில் சோடியம் நிறைந்த பொருள்களில் ப்ரெட் முக்கியமானது. ஒரு ப்ரெட் துண்டு 200மிகி-க்கும் அதிகமான சோடியத்தை தன்னகத்தே கொண்டுள்ளது. இதுவே இதை நீங்கள் சாண்ட்வெஜ்காக பயன்படுத்துகிறீர்கள் என்றால் ப்ரெட் மட்டுமே 400 கலோரிகளைக் கொண்டுள்ளது.

#12 துரித புட்டிங்

#12 துரித புட்டிங்

புட்டிங் கேக்குகள் பலரது விருப்பப்பட்டியலில் கட்டாயம் இடம் பெற்ற ஒன்று. மிகவும் சுவையான இதிலும் சோடியத்தின் அளவு கணிசமாக உள்ளது. உதாரணமாக 1 கப்பில் 520 மிகி சோடியம் உள்ளது. துரித புட்டிங் விரும்பிகள் ஒருபோதும் ஒரு கப்போடு நிறுத்தி விடமாட்டார்கள். அப்போது பாருங்கள் ஒரு நாளைக்குத் தேவையான சோடியத்தின் அளவை மாலை நேர இடைவேளை உணவே நிறைத்துவிடும்.

#13 போர்க் ரின்ட்ஸ்:

#13 போர்க் ரின்ட்ஸ்:

கெட்டோ போன்ற குறைந்த கார்போஹைட்ரேட் உணவுகள் மிகவும் பிரபலமடைந்து வருவதால் பன்றி இறைச்சி ஒரு புதிய சிற்றுண்டியாக மாறி வருகிறது. ஆனால் மொறுமொறுப்பாக இருக்கும் போர்க் ரின்ட்ஸ்

அதிகப்படியான சோடியத்தை தன்னகத்தே கொண்டுள்ளது. 520 மிகி கலோரிகளை போர்க் ரிண்ட்ஸ் கொண்டுள்ளது. ஒருவேளை இந்த உணவின் தவிர்க்க முடியாத பிரியராக இருந்தால் உண்ட பிறகு தண்ணீரை அதிக அளவு குடியுங்கள்.

#14டார்ட்லிலாஸ்:

#14டார்ட்லிலாஸ்:

மாவால் ஆன டார்ட்டிலாஸ்களில் ஒரு டகோவில் 950 மிகி சோடியத்தைக் கொண்டுள்ளது. இதோடு மட்டுமல்லாமல் கூடுதலாக ஏதேனும் சுவைக்காக சேர்க்கப்பட்டால் சோடியத்தின் அளவு கணிசமாக உயரும்.

#15 சூடான ப்ரீட்ஸெல்

#15 சூடான ப்ரீட்ஸெல்

மிக விரைவாக செய்யக்கூடிய ஸ்நாக்ஸ்களில் சூடான ப்ரீட்ஸெல் முக்கியமாக ஒன்று ஆனால் ஒரு சூடான ப்ரீட்ஸெலில் 925 மிகி சோடியம் உள்ளது. இதைக் குறைக்க ஒரே வழி தான் உள்ளது. பாதியை உங்கள் நண்பருக்காக பகிர்ந்தளிப்பது மட்டும் தான் சோடியத்தின் அளவை உங்களது உடலில் நிலைப்படுத்துவதற்கு சரியான வழியாகும்.

Most Read: திருமணமான சில வருடங்களிலே விவாகாரத்தா? காரணம் இதுதான் ?

#16 சார்க்ராட்

#16 சார்க்ராட்

முட்டைக்கோஸால் செய்யப்படும் இந்த டிஸ்சில் 939 மிகி சோடியம் நிறைந்துள்ளது. முட்டைக்கோஸ் உடலுக்கு நல்லது என்றாலும் கூட அதை உருவாக்கும் முறையும் மிகவும் முக்கியமல்லவா. எனவே ஒரு பொருளில் ஊட்டச்சத்து இருக்கிறதே என்பதற்காக மட்டும் அதை அதிகமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. உணவுமுறையில் மாற்றத்தைக் கொண்டு வரும் போது முறையான டயட் கன்ரோலையும் பின்பற்ற வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: health diet fitness
English summary

high sodium foods to avoid

Some common foods that you probably already know to avoid, but sometimes food manufacturers add sodium to many restaurant dishes and other food products to boost their flavor. That's why it's especially important to check the nutrition facts and ingredients label of every food you purchase to ensure you're not sneaking in salt where you don't need it (remember to stick to no more than 2,300 milligrams of salt per day). Here are some foods that pack more sodium than you might think.
Desktop Bottom Promotion