For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சாப்பிட்டதும் வயிறு வீங்குதா? அதுக்கு நீங்க சாப்பிடற இந்த பொருள்தான் காரணம்...

சாப்பிட்டவுடன் வயிறு வீக்கமாக இருப்பதற்கு காரணம் என்ன, அதை எப்படி தவிர்க்கலாம் என்பது பற்றி தான் இந்த கட்டுரையில் விளக்கமாகப் பார்க்கப் போகிறோம்.

|

பொதுவாக மனிதர்கள் தங்கள் உணவில் க்ளுடன் சேர்த்துக் கொள்வதால் வயிறு வீக்கம் ஏற்படுவது கிடையாது. ஒரு வேளை, நீங்கள் க்ளுடன் சேர்க்கப்பட்ட உணவுகளை எடுத்துக் கொள்ளும்போது, வயிறு வீக்கம் ஏற்பட்டால், அது உங்கள் உடலில் இருக்கும் வேறொரு பாதிப்பின் அடையாளமாக இருக்க முடியும் அல்லது க்ளுடன் சகிப்புத்தன்மை இல்லாத நிலை அல்லது க்ளுடன் ஒவ்வாமை போன்ற பாதிப்புகளையும் குறிக்கலாம்.

Gluten Free Diet

க்ளுடன் உட்கொள்வதால் வயிறு வீக்கம் ஏற்பட்டால், அதனை உட்கொள்வதைத் தவிர்த்துக் கொள்ளலாம். க்ளுடன் சகிப்புத்தன்மை அற்ற நிலை அல்லது ஒவ்வாமை இருப்பின், மருத்துவர் உங்களுக்கு க்ளுடன் நீக்கப்பட்ட உணவுகளை உங்களுக்கு பரிந்துரைக்கலாம். அவ்வாறு பரிந்துரைக்கும் நேரத்தில், மருத்துவர் அனுமதியின்றி உங்கள் உணவு அட்டவணையில் எந்த ஒரு மாற்றத்தையும் நீங்கள் செய்ய வேண்டாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நிலைப்பாடு

நிலைப்பாடு

க்ளுடன் தொடர்புடைய இரண்டு நிலைகள், க்ளுடன் சகிப்புத் தன்மை இன்மை மற்றும் க்ளுடன் ஒவ்வாமை. கோதுமை, பார்லி, கம்பு போன்றவற்றில் காணப்படும் ஐந்து புரதங்களில் ஒன்று க்ளுடன். க்ளுடன் சகிப்புத்தன்மை இன்மை என்பது க்ளுடன் புரதத்தை செரிக்கும் திறன் இல்லாத செரிமான மண்டல குறைபாடு ஆகும். இதன் விளைவாக வயிறு உப்புசம், வீக்கம், வயிற்றுப்போக்கு, குமட்டல், வயிறு வலி போன்றவை ஏற்படலாம்.

அதுவே க்ளுடன் ஒவ்வாமை என்பது செரிமான மண்டலத்தின் பாதிப்பு அல்ல, நோயெதிர்ப்பு மண்டலத்தின் உயர் உணர்திறன் காரணமாக ஏற்படுவதாகும். க்ளுடன் ஒவ்வாமை, வயிறு வீக்கத்தை ஏற்படுத்துவதில்லை, மாறாக ஆஸ்துமா, படை நோய், சைனஸ் போன்ற இதர அறிகுறிகள் வளர்ச்சி அடையும் வாய்ப்பைக் கொண்டதாகும்.

MOST READ: சர்க்கரை நோயாளிகள் மாத்திரை இல்லாமல் எப்படியெல்லாம் சமாளிக்கலாம்?

தவிர்க்க வேண்டிய உணவு வகைகள்

தவிர்க்க வேண்டிய உணவு வகைகள்

உணவின் பல்வேறு வகைகளின் க்ளுடன் காணப்படுகிறது. ஒரு சில மருந்துகளிலும் க்ளுடன் புரதம் உள்ளது. க்ளுடன் அல்லாத உணவுகளை எடுத்துக் கொள்ளும்போது இங்கே குறிபிட்டுள்ள சில உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. அவை, உயர் க்ளுடன் மாவு, ஸ்டார்ச், கோதுமை மால்ட், ரவை, துர்ரம் (DURUM) கோதுமை, உயர் புரத மாவு, தவிடு, ஃபரீனா என்னும் ஒரு வகை புட்டிங், பல்குர் கோதுமை, கடலை மாவு, மற்றும் கோதுமை மாவு போன்றவையாகும்.

பொதுவாக க்ளுடன் உள்ள உணவுகளாக அறியப்படுவன பாஸ்தா, ஸ்பெல்ட், பிரட், கேக், குக்கி, கிராக்கர், தானியம் போன்றவையாகும். ஐஸ்க்ரீம், கெட்சப் போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுகள் சிலவற்றிலும் க்ளுடன் காணப்படுகிறது. பாக்கெட்டில் உள்ள உணவுப் பொருட்களை வாங்கும்போது, அதன் லேபிளில் உள்ள மூலப்பொருட்கள் பற்றிய விவரங்களைப் படித்துத் தெரிந்து கொண்டு பின்னர் அவற்றை வாங்குவது நல்லது.

உட்கொள்ள வேண்டிய உணவு வகைகள்

உட்கொள்ள வேண்டிய உணவு வகைகள்

இயற்கையாகவே க்ளுடன் இல்லாத உணவுகள் பற்றி இப்போது நாம் அறிந்து கொள்வோம். பழங்கள், காய்கறிகள், கோழி இறைச்சி, ஆட்டிறைச்சி, மீன், அரிசி மற்றும் சோயா போன்றவை க்ளுடன் அல்லாதவையாகும். அரிசி மாவு, சோயா மாவு, மரவள்ளிக் கிழங்கு மாவு, சோளமாவு, ஓட்ஸ் மாவு போன்ற க்ளுடன் அல்லாத மாவு கொண்டு தயாரிக்கபட்ட ப்ரெட், கேக் போன்றவற்றை உட்கொள்ளலாம்.

"க்ளுடன் ஃப்ரீ" என்று அச்சிடப்பட்ட உணவுப் பொருட்களை மட்டும் வாங்குவது நல்லது. இந்த உணவுகள் க்ளுடன் மாவு இல்லாமல் தயாரிக்கப்படுவது மட்டுமல்லாமல், க்ளுடன் பொருட்களைப் பதப்படுத்தும் கருவிகளைக் கூட பகிர்ந்து கொள்வதில்லை. நட்ஸ், யூக்கா, வெள்ளாவி வைத்த கோதுமை, கூவை கிழங்கு, ஆளி விதைகள், சிறுதானியங்கள், சீமைத்தினை மற்றும் உருளைக்கிழங்கு போன்றவை க்ளுடன் அல்லாத உணவுகள் பட்டியலில் இணைக்கப்படுகின்றன.

MOST READ: சர்க்கரை நோயாளிகள் வெள்ளை அரிசிக்கு பதிலாக கருப்பு அரிசி தினமும் சாப்பிடலாமா?

கவனத்தில் கொள்ள வேண்டியது

கவனத்தில் கொள்ள வேண்டியது

க்ளுடன் சகிப்புத்தன்மை இன்மை மற்றும் க்ளுடன் ஒவ்வாமை போன்ற பாதிப்புகள் இருப்பவர்கள், ஒரு சிறு அளவு க்ளுடன் எடுத்துக் கொள்வதாலும் அவர்கள் உடலில் சில தீவிர சிக்கல்களை சந்திக்க நேரலாம்.

க்ளுடன் சகிப்புத்தன்மை இல்லாதவர்கள் ஒரு சிறு அளவு க்ளுடன் எடுத்துக் கொள்வதாலும் அவர்கள் குடலில் நிரந்தர சேதங்கள் ஏற்படும் வாய்ப்பும் உள்ளது. க்ளுடன் ஒவ்வாமை என்பது அதி ஒவ்வாமை அதிர்ச்சி நிலை (anaphylactic shock) என்னும் தீவிர பாதிப்பிற்கு வழிவகுக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Gluten Free Diet for Stomach Bloating

Gluten does not cause stomach bloating in most people. If you develop stomach bloating after eating gluten, the bloating is a sign of an underlying condition, such as gluten intolerance or an allergy to gluten. Stop eating gluten to determine if gluten is the cause of the bloating.
Story first published: Monday, June 24, 2019, 13:31 [IST]
Desktop Bottom Promotion