Latest Updates
-
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்..
ரமலான் நோன்பின் போது இப்படிப்பட்ட உணவுகளை சாப்பிடாமல் இருப்பதுதான் உங்களுக்கு நல்லது...!
விரதம் அல்லது நோன்பு இருந்தால் எடை குறையும் என்பது பொதுவாக இருக்கும் நம்பிக்கையாகும். ஆனால் அது முற்றிலும் உண்மையல்ல.
இஸ்லாமியர்களின் முக்கிய புனித பண்டிகையான ரம்ஜானுக்கான கொண்டாட்டங்கள் தொடங்கி விட்டது. இஸ்லாமிய சகோதரர்கள் தங்களின் நோன்பை இறைநம்பிக்கையோடு கடைபிடிக்க தொடங்கிவிட்டார்கள். இந்த நோன்பு ரம்ஜானில் சென்று முடிவடையும். ஈகை திருநாளான ரம்ஜான் அன்பையும், மகிழ்ச்சியையும் பரவசெய்வதாக இருக்கிறது.

விரதம் அல்லது நோன்பு இருந்தால் எடை குறையும் என்பது பொதுவாக இருக்கும் நம்பிக்கையாகும். ஆனால் அது முற்றிலும் உண்மையல்ல. விரதத்தின் போது என்ன உணவை சாப்பிடுகிறோம் என்பதை பொறுத்தே இது தீர்மானிக்கப்படுகிறது. வழக்கத்தை விட அதிகமாக கொழுப்பு உணவுகளை காலையில் எடுத்துக்கொள்ளும்போது அடு எடை அதிகரிப்பிற்கு வழிவகுக்கும். இந்த பதிவில் ரமலான் நோன்பின் போது எடையை சீராக பராமரிக்க உதவும் குறிப்புகளை பார்க்கலாம்.

எடை அதிகரிப்பு
நோன்பின் போது எடை அதிகரிக்கும் பலர் இருக்கிறார்கள். அதற்கு காரணம் அதிக கொழுப்பு இருக்கும் உணவுகளும், குறைந்துவிடும் செயல்பாடுகளும்தான். ஆனால் சரியான திட்டமிடல் மூலம் நோன்பின் போது உங்கள் எடையை குறையாமல், அதிகரிக்காமல் பார்த்து கொள்ளலாம். எப்படி திட்டமிட வேண்டும் என்று மேற்கொண்டு பார்க்கலாம்.

தண்ணீர் குடிக்க வேண்டும்
இயற்கையின் இந்த பரிசானது உங்கள் உடலை நாள் முழுவதும் நீரேற்றத்துடன் வைத்திருக்கும். விரதம் இல்லாத நேரத்தில் போதுமான அளவு நீர் குடிக்க வேண்டியது அவசியமாகும். மேலும் இது உங்கள் உடலின் எலெக்ட்ரோலைட்டுகளின் அளவை சீராக பராமரிக்க உதவியாக இருக்கும். அதுமட்டுமின்றி நாள் முழுவதும் சாப்பிடாமல் இருப்பதால் அதிகரிக்கும் அமிலத்தன்மையை குறைக்க உதவும்.

உணவை திட்டமிடுங்கள்
நாள் முழுவதும் உணவு உண்ணாமல் இருந்த பிறகு இப்தார் நேரம் வரும், குடும்பத்தில் இருக்கும் அனைவரும் தங்கள் வீரத்தை அப்போதுதான் முடித்துக் கொள்வார்கள். பொதுவாக இப்தார்காக தயாரிக்கப்படும் உணவானது அதிக கலோரிகள் உள்ளதாக இருக்கும் ஏனெனில் பசி ஏற்படக்கூடாது என்பதற்காக இவ்வாறு செய்யப்படுகிறது. ஆனால் இப்தார் உணவை எடுத்துக்கொள்ளும் முன் பழங்கள், சாலட் மற்றும் சூப் போன்றவற்றை எடுத்துக்கொள்வது உங்கள் பசியை குறைக்கும் இதனால் நீங்கள் குறைவான உணவை மட்டுமே எடுத்து கொள்வீர்கள். இது உங்கள் உடலில் கலோரி மற்றும் ஊட்டச்சத்துக்களின் அளவை சீராக்கும்.

அளவுகளில் கவனம்
எடை அதிகரிக்காமல் இருக்க அதிகம் சாப்பிடுவதை தவிருங்கள். உங்கள் எடையை சீராக வைத்திருக்க இதுதான் சிறந்த வழியாகும். ஆனால் நாள் முழுவதும் சாப்பிடாமல் இருப்பவர்களுக்கு இது கடினமான ஒன்றுதான். இதற்கு எளிய வழி குறைந்த அளவு அதேசமயம் சுவையான, சத்தான உணவை தயார் செய்யுங்கள். இது உங்கள் எடையை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ளும்.

செயற்கை பழச்சாறு வேண்டாம்
பலரும் இனிப்பூட்டப்பட்ட செயற்கை குளிர்பானங்களை தாகத்தை தீர்த்து கொள்ள குடிக்கிறார்கள். இது மிகவும் தவறான ஒன்றாகும். ஏனெனில் இதில் ஒரு கிளாஸ் குடிப்பது உங்களின் வயிற்றில் வீக்கத்தை ஏற்படுத்துவதுடன், மொத்த கலோரி மற்றும் சர்க்கரை அமைப்புகளையும் கெடுக்கிறது. இதற்கு சிறந்த வழி நீங்களாகவே பழங்களில் இருந்து சாறு தயாரித்து குடிப்பதுதான். இது உங்கள் தாகத்தை தீர்ப்பதுடன் தேவையான ஊட்டச்சத்துக்களையும் வழங்குகிறது. இதிலிருக்கும் நார்ச்சத்துக்களும், சர்க்கரையும் உங்கள் வளர்ச்சிதை மாற்றத்தை சீராக்க உதவுகிறது.

சரியான உணவை தேர்ந்தெடுங்கள்
ரமலான் மாதத்தில் பலரின் எடையும் அதிகரிக்க காரணம் தவறான உணவுகளை தேர்ந்தேடுப்பதுதான். இந்த காலகட்டத்தில் உங்களின் எடையை நீங்கள் தேர்ந்தெடுக்கும் உணவுகள்தான் தீர்மானிக்கும். எனவே ஆரோக்கியமான உணவுகளான கொழுப்பு குறைவான பால் பொருட்கள், இறைச்சிகள், தானியங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.

சமைக்கும் முறை
நீங்கள் சாப்பிடும் உணவுகளில் இருக்கும் கலோரிகளை குறைக்கும் மற்றொரு முறை அதை எப்படி சமைக்கிறோம் என்பதுதான். பெரும்பாலனோர் இப்தார் உணவாக அதிக எண்ணெய் சேர்க்கப்பட்ட அல்லது வறுக்கப்பட்ட இறைச்சிகளை எடுத்து கொள்கிறார்கள். இதுதான் அவர்களின் எடை அதிகரிக்க முக்கியமான வழியாகும். அதற்கு பதிலாக வேகவைக்கப்பட்ட, குறைவான எண்ணெயில் சமைக்கப்பட்ட உணவுகளை எடுத்து கொள்வது நல்லது.

உடற்பயிற்சி
சாப்பிடாமலும், தண்ணீர் குடிக்காமலும் நோன்பிருப்பது உங்கள் தசைகளை பலவீனமாக்கும். எனவே இந்த மாதத்தில் மிதமான உடற்பயிற்சிகள் செய்வது உங்களை இந்த ஆற்றல் இழப்பிலிருந்து பாதுகாக்கும். மாலை உணவிற்கு பிறகு நடைப்பயிற்சிக்கு செல்வது உங்களுக்கு நல்ல பலனை அளிக்கும்.



Click it and Unblock the Notifications