உடம்ப குறைச்சே ஆகணுமா? அப்போ ஏன் இந்த மாம்பழ டயட் ஃபாலோ பண்ணக்கூடாது?

இந்த கோடை பருவத்தில் மிகவும் விரும்பப்படும் பழம், மிகுதியாக காணப்படுகிறது. ஆம்! நாம் பழங்களின் அரசனான - மாம்பழங்கள் பற்றித்தான் கூறுகிறோம்.

இந்த கோடை பருவத்தில் மிகவும் விரும்பப்படும் பழம், மிகுதியாக காணப்படுகிறது. ஆம்! நாம் பழங்களின் அரசனான - மாம்பழங்கள் பற்றித்தான் கூறுகிறோம். இந்த மிகச்சிறந்த மற்றும் ஜூசியான பழங்கள் வெப்பமான மாதங்களில் உங்கள் தாகத்தை தணிப்பதற்கு போதுமானது.

health

ஆனால், இந்த மாம்பழங்கள் உங்களுடைய ஆரோக்கியத்திற்காக வேறொரு வழியிலும் பயனுள்ளவையாக இருக்குமென்பதை எடுத்துரைக்கப்போகிறோம். நீங்கள் எடை இழக்கத் திட்டமிட்டால் மாம்பழங்கள் உங்களுக்குத் தேவைப்படும். இந்த கட்டுரையில், எடை இழப்புக்கான மாம்பழ உணவு திட்டம் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மாம்பழ டயட்

மாம்பழ டயட்

மாம்பழ டயட் என்பது மாம்பழங்களைப் பயன்படுத்தி உடல் எடையைக் குறைக்கும் ஒரு டயட் முறையாகும். வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள், ஃபோலேட்(folate), வைட்டமின் ஏ, வைட்டமின் பி 6, மற்றும் வைட்டமின் சி உள்ளிட்டவை ஏராளமான அளவில் மாம்பழங்களில் உள்ளன.

பல தாதுக்கள் மாம்பழங்களில் அதிகமாக உள்ளன, மேலும் பீட்டா கரோட்டின் மற்றும் ஃபைபர் (பெக்டின்) ஆகியவற்றின் காரணமாக கொழுப்புக்களைக் குறைப்பதற்கும் உகந்தது. மாம்பழங்கள் இரத்த அழுத்தத்தை குறைக்கலாம் என்றும் புற்றுநோயைத் தடுக்கவும் முடியும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன.

மாம்பழங்கள் வைட்டமின் கே-வைக் கொண்டுள்ளது, இது கால்சியத்தை உறிஞ்ச உதவுகிறது மற்றும் சிறந்த எலும்பு ஆரோக்கியத்தை ஊக்குவிக்கிறது.

மாம்பழத்தின் குணங்கள்

மாம்பழத்தின் குணங்கள்

மாம்பழங்கள் போன்ற குறைந்த ஆற்றல் அடர்த்தி கொண்ட பழங்கள் கிராம் ஒன்றுக்கு குறைவான கலோரியே அளிக்கிறது, மேலும் இது எடை இழக்க எளிதாகிறது. ஆற்றல் அடர்த்தி அதிகமாக இருக்கும் பழங்களை சாப்பிடுவதைவிட குறைவான கலோரிகள் உள்ள பழங்களையே நீங்கள் சாப்பிடலாம். மாம்பழங்களில் கிராம் ஒன்று 0.6 கலோரி உள்ளது, இதனால் இவை ஆற்றல் அடர்த்தி குறைந்தவையாக உள்ளன.

மேலும், மாம்பழங்கள் நார்ச்சத்து கொண்டுள்ளதால் எடை இழப்புக்கு உதவுகின்றன, ஏனெனில் ஃபைபர் உங்கள் வயிற்றை நீண்ட காலத்திற்கு நிரம்பியதாகவே வைத்துக்கொள்வதால்,உங்களுக்கு பசியை குறைகிறது. இந்த பழம் எடையை இழக்கச் செய்ய, கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்பு போன்ற மேக்னட்யூட்ரின்களை உறிஞ்சுவதை குறைக்கிறது.

ஒரு கப் மாம்பழத்தில், 2.6 கிராம் ஃபைபர் உள்ளது, இது தினசரி பரிந்துரைக்கப்பட்ட 10 சதவிகிதம் ஃபைபர் ஆகும்.

வெறும் மாம்பழ உணவுத்திட்டம் என்பது உங்களது சாப்பாட்டு உணவு திட்டத்தை பொறுத்ததே, தவிர, கலோரிகள் மாம்பழங்களிலிருந்து வரும். சரியான அளவு உட்கொண்டால், எடை இழப்புக்கு மாம்பழம் ஒரு பயனுள்ள விளைவாகும். மாங்காய்கள் பிரக்டோஸ் உள்ளடக்கத்தில் உயர்ந்தவையாக இருப்பதால், அவை குறைந்த அளவிலேயே உட்கொள்ளப்பட வேண்டும்.

எடையைக் குறைக்கும்

எடையைக் குறைக்கும்

கொழுப்புச் செல்கள் விரிவடைவதை கட்டுப்படுத்தும் பைட்டோகெமிக்கல்கள் மாம்பழங்கள் உள்ளன. இந்த செயல்முறை எடை அதிகரிப்பதைத் தடுக்கிறது. அவை மாலிக் அமிலத்தையும், டார்டாரிக் அமிலத்தையும் கொண்டிருக்கின்றன; இந்த இரு கூறுகளும் உடலில் உள்ள காரத்தன்மையை தக்கவைத்துக் கொள்கின்றன.

இன்சுலின் எதிர்ப்பு காரணமாகவும், முடக்கு வாதம் தடுக்கப்படுவதாலும், எடையைக் குறைக்க உதவுகிறது. உடலில் இருந்து அதிகப்படியான நச்சுகள் அகற்றப்படுவதன் மூலம் மாம்பழங்கள் உங்கள் உடலை எடையைக் குறைக்க உதவுகின்றன. மாம்பழத்தில் மிக அதிக அளவில் நார்ச்சத்து இருப்பதால், அது உடலின் குடல் சுவர்களில் இருந்து தேவையற்ற நச்சுகளை நீக்க உதவுகிறது.

மேலும், இந்த பழங்கள் லிகோபீன் நிறைந்திருக்கும், இது எடை இழப்புக்கு உதவும் ஒரு இயற்கை ஆக்ஸிஜனேற்றாகும். மாம்பழங்கள் உங்கள் வயிற்று கொழுப்பை அகற்றவும், உங்கள் மனநிலையை மேம்படுத்தவும் உதவுகின்றன, ஏனெனில் அவை உங்கள் உடலிலுள்ள ஆரோக்கியமான வைட்டமின்கள் கொண்ட இயற்கை புரோபயாடிக்குகளைக் கொண்டுள்ளன.

பழத்தின் நார்ச்சத்துள்ள சதை உங்கள் இரத்த சர்க்கரை அளவை நிலைத்திருக்க வைக்க உதவும் ஒரு இயற்கை கார்போஹைட்ரேட் அடைப்பான்(பிளாக்கர்) ஆகும்.

மாம்பழம் டயட் நல்லதா?

மாம்பழம் டயட் நல்லதா?

மாம்பழங்கள் மட்டுமே உணவு என எடுத்துக் கொள்வது ஒரு கெட்ட யோசனையாக இருக்கலாம் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் மாம்பழங்களை ஒரு நாளைக்கு 2-3 முறை டயட்டாக உண்ணலாம் மற்றபடி அதற்கும் அதிகமாக இருக்கக் கூடாது. இவைகளை பால் மற்றும் சிட்ரஸ் பழங்களுடன் சேர்த்து உட்கொள்ளப்படக்கூடாது.

உடல்நலம் வல்லுநர்கள், மாம்பழங்களை தினமும் ஒரு நாளின் முதல் பாதியிலேயே சாப்பிடுவதை பரிந்துரைக்கிறார்கள். ஏனெனில் BMR (அடிப்படை வளர்சிதை மாற்ற விகிதம்) மதியவேளையில் அதிகமாக இருக்கும்.மாம்பழத்தை மற்றொரு உணவுடன் உட்கொள்ளப்படக்கூடாது.

மாம்பழம் மட்டுமே கொண்ட டயட்டினால்,கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்கள் பல குறைபாடுகளுக்கு வழி வகுக்கும் மற்றும் அனைத்து வளர்சிதை மாற்ற விளைவுகளும் தவறாக போகலாம்.

நன்மைகள்:

நன்மைகள்:

மாம்பழம் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் கொண்டிருக்கிறது, இது நோய்களைத் தடுக்க உதவுகிறது மற்றும் உடல் ஒழுங்காக செயல்பட உதவுகிறது. ஒரு நடுத்தர பழுப்பு மாம்பழம் சுமார் 165 கலோரிகளைக் கொண்டுள்ளது, எனவே நீங்கள் மாம்பழங்களை உங்கள் வொர்க்அவுட்டிற்கு அரை மணி நேரத்திற்கு முன் உட்கொள்ளலாம் மற்றும் பழத்தில் இருந்து பெறப்படும் ஆற்றலை சிறந்த முறையில் பயன்படுத்தலாம்.

ஊட்டச்சத்துக்கள்

ஊட்டச்சத்துக்கள்

ஒரு கப் மாம்பழத்தில் 75 சதவிகிதம் வைட்டமின் சி உள்ளது, இது வீக்கம், உடல் பருமன், மற்றும் முடக்கு வாதம் மற்றும் நீரிழிவு நோய்கள் போன்ற நோய்களைத் தடுக்கிறது. வைட்டமின் ஏ மற்றும் 25 வெவ்வேறு கரோட்டினாய்டுகள் மாம்பழத்தில் உள்ளன. அவைகள் உங்களை உடற்பயிற்சியினால் ஏற்படும் இழப்பை தடுக்க உதவுகிறது.

வைட்டமின் B6 மற்றும் பிற B வைட்டமின்கள் தைராய்டு சுரப்பிகள் மற்றும் பிட்யூட்டரி சுரப்பிகளின் மென்மையான செயல்பாட்டை பராமரிக்க உதவுகின்றன. மாம்பழங்கள் உங்கள் தசைகள் மற்றும் நரம்பு மண்டலத்தை ஓய்வெடுக்க உதவும் மெக்னீசியம் நிறைந்தவை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Friday, June 1, 2018, 12:30 [IST]
Desktop Bottom Promotion