For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பக்கவிளைவுகள் இல்லாம எடைய குறைக்கணுமா? பூசணிக்காய இப்படி சாப்பிடுங்க...

பூசணிக்காயை வைத்து எந்த பக்க விளைவுகளும் இன்றி, உடல் எடையை வேகமாக எப்படி குறைக்கலாம் என்பது பற்றி இங்கே குறிப்பிட்டுள்ளோம். படித்துப் பயன்பெறுங்கள்.

|

பெரும்பாலும் காய்கறிகளை விரும்பிச் சாப்பிடுகின்ற அனைவருக்கும் பூசணிக்காயை நன்கு தெரியும். பெரிதாக வட்டவடிவில், உட்புறத்தில் எல்லோரையும் கவர்கின்ற ஆரஞ்சு நிறத்தில் அழகாக இருக்கும். இந்திய சமையலில் கட்டாயம் இந்த காய்க்கு என்று தனித்த இடமுண்டு. இந்த பூசணிக்காயைக் கொண்டு பொரியல், கூட்டு, சூப், கபாப், அல்வா என பல வகைகளில் சமைக்க முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பூசணிக்காய்

பூசணிக்காய்

இந்த காயின் வெளிப்புறத் தோல் மிகவும் தடிமனாக இருக்கும். உட்புறத்தில் நல்ல ஆரஞ்சு நிறத்தில் முழுவதும் சதைப்பகுதியாகவும் அதற்குள் விதையும் இருக்கும். இந்த பூசணிக்காய் நம் ஊரில் மட்டுமல்ல உலக அளவில் பிரபலம். அமெரிக்கா, சீனா, கனடா மற்றும் மெக்சிகோவிலும் இது பிரபலம். இந்த காய்கறி நல்ல இனிப்பு சுவை கொண்டது. இதில் சுவை மிகுதி என்பது தெரியும். ஆனால் இதை வைத்து மிக எளிமையாக நம்முடைய உடல் எடையைக் குறைக்க முடியும் என்பது எவ்வளவு பேருக்குத் தெரியும்?

ஊட்டச்சத்துக்கள்

ஊட்டச்சத்துக்கள்

பூசணிக்காயில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. இதில் மிக அதிக அளவில் சோடியமும் உடலுக்குத் தேவைப்படுகின்ற நல்ல கொழுப்பும் நிறைய இருக்கின்றன. அதேபோல் இதில் ஸ்டார்ச்சும் நிறைய இருக்கிறது.

நன்மைகள்

நன்மைகள்

இந்த பூசணிக்காயில் உள்ள சதை, விதை, அந்த விதையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் ஆகியவை பல்வேறு வகைகளில் நமக்குப் பயன்படுகின்றன. கேக், ஸ்மூத்தி ஆகியவற்றில் கூட இந்த பூசணிக்காயை மசித்துப் பயன்படுத்தப்படுகிறது.

MOST READ: படுத்ததும் ஆழ்ந்த உறக்கத்தைப் பெற வேண்டுமா? அப்ப இத சாப்பிடுங்க...

எடை குறைப்பு

எடை குறைப்பு

உங்களுடைய உணவில் தினமும் சிறிது சிறிதாக பூசணிக்காயைச் சேர்த்துக் கொண்டே வந்தால், மிக வேகமாக உங்களுடைய உடல் எடையைக் குறைத்துவிட முடியும். இது உடலின் கலோரிகளை எரிக்கும் ஆற்றல் கொண்டது. நீங்கள் சாப்பிடும் உணவில் குறைந்த கார்போஹைட்ரேட் இருப்பதாக இருந்தால், இந்த காயை நீங்கள் தாராளமாகச் சேர்த்துக் கொள்ளலாம்.

குறைந்த கலோரி

குறைந்த கலோரி

இதில் மிகக்குறைந்த அளவு கலோரி மட்டுமே இருக்கிறது. அதாவது 100 கிராம் பச்சை பூசணிக்காயில் வெறும் 26 கலோரிகள் மட்டுமே இருக்கின்றன. அதனால் உங்களுடைய விருப்பத்துக்கு ஏற்றபடி சமைத்து சாப்பிடலாம்.

அதிக நார்ச்சத்து

அதிக நார்ச்சத்து

பூசணிக்காயில் மிக அதிக அளவில், ஒரு நாளைக்குத் தேவையான நார்ச்சத்தில் 45 சதவீதம் வரை இதில் உள்ளது. 100 கிராம் பூசணிக்காயில் 0.6 கிராம் அளவுக்கு நார்ச்சத்து இருக்கிறது. இதன்மூலம் வெறும் 49 கிராம் கலோரி மட்டும் தான் உங்களுக்குக் கிடைக்கிறது. இது உடல் எடையைக் கூட்ட காரணமாக உள்ள இடைவெளி ஸ்நாக்ஸ் டைமை குறைக்கிறது. அதிக நேரம் பசி தாங்குகிறது.

உடற்பயிற்சிக்கு பின்

உடற்பயிற்சிக்கு பின்

உடற்பயிற்சி செய்து முடித்த பின், அந்த நாள் முழுக்க தேவைப்படுகின்ற முழு ஆற்றலையும் நீங்கள் பெற முடியும். அதனால் தினசரி உடற்பயிற்சிக்குப் பின் சாலட்டாகவோ சூப்பாகவோ அந்த பூசணிக்காயை சாப்பிடலாம்.

எதிர்ப்பு சக்தி

எதிர்ப்பு சக்தி

உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் மிக தீவிரமான ஆற்றலை பூசணிக்காய் செலுத்துகிறது. இதிலுள்ள வைட்டமின் சி மற்றும் பீட்டா கரோட்டீன் ஆகியவற்றின் மூலம் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

MOST READ: உங்களுக்கு மச்சம் இருக்கா.. அதோட ரகசியம் தெரியுமா.. காதைக் கிட்ட கொண்டு வாங்க!

மன அழுத்தம்

மன அழுத்தம்

மன அழுத்தத்தைக் குறைக்கும் மிகச் சிறந்த தீர்வாக இந்த பூசணிக்காய் இருக்கும். ட்ரைடோபமைன், அமினோ அமிலங்கள் மனதை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ள உதவுவதோடு, மன அழுத்தத்தையும் குறைக்கும். அதனால் எந்த விதமான பக்க விளைவுகளும் இல்லாமல் உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைக்க விரும்பினால் குறைந்தது வாரத்துக்கு மூன்று முறையாவது பூசணிக்காயை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Pumpkin For Fast Weight Loss

Here's all you need to know about pumpkin for fast weight loss!
Story first published: Friday, September 28, 2018, 7:55 [IST]
Desktop Bottom Promotion