Latest Updates
-
இந்த தேதியில் பிறந்த பெண்கள் அவங்க கணவரை கோடீஸ்வரராக்கும் அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம் -
முட்டையை இந்த மாதிரி பட்டாணியுடன் சேர்த்து குருமா செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
வாஸ்து செடிகள்: 42°C வெயிலிலும் வீட்டை ஜில்லுனு வச்சுக்கணுமா? இந்த செடிகள் இருந்தா போதும்! -
5 லட்சம் ஆண்டுகளுக்கு ஆதி மனிதர்கள் இந்தியாவில் வாழ்ந்த 5 இடங்கள் - தமிழ்நாட்டின் ஒரு இடமும் இதில் இருக்காம் -
கோடை வெப்பத்தை சமாளிக்க இந்த வாஸ்து ரகசியங்கள் தெரியுமா? வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுங்கள்! -
நார்த் இந்தியன் ஸ்டைல் தக்காளி சிக்கன் கிரேவி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வேற லெவலில் இருக்கும் -
வார ராசிபலன் (26 April 2026 - 02 May 2026) - இந்த வாரம் இந்த 4 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும் -
இன்றைய ராசிபலன் 26 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஜாலியான நாளாக இருக்குமாம் -
மே மாதத்தில் நடக்கும் கிரக பெயர்ச்சிகளால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வெயில் கொடுமை! திருமணத்தை மாற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 டிப்ஸ் உங்கள் விழாவை காப்பாற்றும்!
இந்த 4 உணவுகளை சாப்பாட்டில் இருந்து கட் செய்து 13 கிலோ எடை குறைத்த பெண்!
இந்த 4 உணவுகளை சாப்பாட்டில் இருந்து கட் செய்து 13 கிலோ எடை குறைத்த பெண்!
உடல் எடைக் குறைக்க உடற்பயிற்சி மட்டும் செய்தால் போதாது. நல்ல டயட் கண்ட்ரோலும் அவசியம். சிலர் ஜிம் அல்லது வாக்கிங் சென்ற பிறகு நேராக ஏதாவது ஒரு பேக்கரி அல்லது ஹோட்டலுக்குள் நுழைந்து ஒரு கட்டுக் கட்டிவிடுவார்கள். பிறகு எப்படி உடல் எடை குறையும்.
உடல் எடை அதிகரிப்பதன் காரணமாக பல பக்கவிளைவுகளை நாம் சந்திக்க நேரிடுகிறது. உதாரணமாக நீரிழிவு நோயில் இருந்து இதயக் கோளாறுகள், இரத்த ஓட்ட குறைப்பாடு, இரத்த அழுத்தம் என பல ஆரோக்கியக் கோளாறுகள் ஏற்பட இந்த உடல் பருமன் தான் காரணம்.
உடல் எடை குறைக்க பல டயட்டுகள் இருக்கின்றன. அதில் ஒரு டயட்டை பின்பற்றி தனது உணவுமுறையில் இருந்து வெறும் நான்கு உணவை மட்டும் நீக்கி மூன்றே மாதத்தில் 13 கிலோ எடை குறைத்துள்ளார் மார்கா பங்கா எனும் பெண்மணி.

புத்தாண்டில் இருந்து!
நம்மில் பலரும் புத்தாண்டு குறிக்கோளாக ஜிம் செல்வதையும், உடல் எடை குறைப்பதையும் வைத்திருப்போம். ஆனால், அவற்றை ஓரிரு வாரங்கள் அல்லது நாட்களில் காணாமல் போய்விடும். இதுவொரு தொடர்கதையாக அடுத்தடுத்த ஆண்டுகளும் தொடரும்.
ஆனால், மார்கா அப்படி லேசில் விட்டுவிடவில்லை. இந்த புத்தாண்டில் தான் தனது உடல் எடை குறைப்பு குறிக்கோள் கையில் எடுத்தார் மார்கா.
Image Source: instagram / margabanaga

நான்கு உணவுகள்!
நூறு நாட்கள் சவால் என்ற முறையில், தினமும் ஜிம்முக்கு சென்ற மார்கா தனது உணவில் இருந்து நான்கு உணவுகளை முற்றிலுமாக தவிர்த்தார். அவை, ஆல்கஹால், சீல், இறைச்சி மற்றும் இனிப்பு உணவுகள். Pescatarian என்ற டயட்டை பின்பற்றி ஒரு நாளும் தவறாமல் உடற்பயிற்சிகளும் மேற்கொண்டு வந்துள்ளார் மார்கா.
உடல் எடை குறைக்க வேண்டுமானால், தவறாமல் டயட் மற்றும் உடற்பயிற்சி இரண்டுமே தேவை. இதுதான் ஆரோக்கியமான முறையில் உடல் எடை குறைக்க உதவும் சிறந்த வழி.
Image Source: instagram / margabanaga

யூடியூப்!
மார்கா தனது யூடியூப் சேனலில் இந்த நூறு நாள் சவால் குறித்த வீடியோக்களும் பதிவு செய்து வந்துள்ளார். இந்த புத்தாண்டில் உடல் எடை குறைப்பு குறிக்கோள் எடுத்துக் கொண்ட போது, அவர் வாழ்வில் அதிகப்படியான எடையில் இருந்தாராம் மார்கா. இப்போது அந்த எடையில் இருந்து 13 கிலோவை மூன்றே மாதத்தில் குறைத்துள்ளார்.
Image Source: instagram / margabanaga

மன அழுத்தம்!
தனது உடல் எடை தன்னை மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாக்கியது என்றும், இதன் காரணத்தால் நான் என் நண்பர்களுடன் வெளியே செல்வதையே தவிர்த்து வந்தேன். என்னால், உணவு மற்றும் ஆல்கஹால் மீதான எனது ஈர்ப்பை குறைத்துக் கொள்ளவே முடியவில்லை. பிறகு எனது சுய கட்டுப்பாடு காரணமாக வற்றை தவிர்த்து இப்போது சிறந்த முறையில் உடல் எடை குறைத்துள்ளேன் என்று மார்கா கூறியுள்ளார்.
Image Source: instagram / margabanaga

சகோதரன் மரணம்!
மார்காவின் இந்த நூறு நாள் பயணம் லேசாக அமையவில்லை. இடையே இவரது 67வது நாள் உடல் எடை குறைப்பு பயணத்தின் போது, இவரது சகோதரர் மரணம் அடைந்துவிட்டார். இதனால், இடையே இதை கைவிட்டுவிடலாம் என்று கூட எண்ணி இருக்கிறார். ஆனால், பல காரணங்கள் மற்றும் எண்ணங்களால் கடைசியில் விடா முயற்சியுடன் தனது நூறு நாள் பயணத்தை வெற்றிகரமாக முடித்துள்ளார் மார்கா.
Image Source: instagram / margabanaga

வெற்றி!
நூறு நாள் உடல் எடை குறைப்பு பயணத்தின் முடிவில், இப்போது மார்கா தனது மிகவும் குறைந்த, ஸ்லிம்மான ஃபிட்டில் இருப்பதாக அறிவித்துள்ளார். ஆனால், தான் இன்னும் தனக்கு நிறைய சவால்களை வகுத்துக் கொள்ள வேண்டும். நிறைய ஊட்டச்சத்துக்கள் மீது கவனம் செலுத்த வேண்டும் இனிமேல் பளுதூக்குவது மேல் கவனம் செலுத்தலாம் என்று எண்ணி வருகிறேன் என்றும் கூறியுள்ளார். நான், என்னை நானே அதிகம் உத்வேகப்படுத்திக் கொள்ள விரும்புகிறேன் என்றும் மார்கா கூறியுள்ளார்.
Image Source: instagram / margabanaga



Click it and Unblock the Notifications