Latest Updates
-
இந்த 4 ராசிக்காரங்க காதலில் அதிர்ஷ்டமே இல்லாதவர்களாம் - இவங்க எதிர்பார்க்கும் எதுவுமே நடக்காதாம் -
1 கப் பச்சை பயறு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இத பசங்களுக்கு செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
ஜப்பானில் 90 லட்சம் வீடுகளில் ஒருவர் கூட வசிக்காத வினோதம் - ஆடம்பர வீடுகள் 'பேய் வீடுகளாக' மாற காரணம் என்ன? -
உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க.. -
மலேசியா ஸ்பெஷல் முட்டை சம்பல் ரெசிபி - 4 முட்டை இருந்தா போதும் - தரமான சைடிஷ் ரெடி! -
15000 கோடி முகேஷ் அம்பானி வீட்டை விட பெரிய வீடு இந்தியாவிலுள்ள இந்த வீடுதானாம் - இந்த வீடு யாருடையது தெரியுமா? -
October Matha Rasipalan 2026: அக்டோபர் மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமானதா இருக்கப்போகுது! -
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறையும்.. -
செப்டம்பர் 24, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கபோகுதாம் - சந்தோஷமா இருங்க -
அக்டோபரில் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது!
தண்ணி குடிச்சே வெயிட் குறைக்கலாம்... ஆனா இந்த 6 விஷயத்தையும் கண்டிப்பா ஞாபகம் வெச்சிக்கணும்...
குறைவாக தண்ணீர் குடித்தால், உடலில் நச்சுப்பொருள்கள் சேரும்; செரிமான கோளாறுகள் வரக்கூடும். கூடவே, உடலில் கொழுப்பு சேர்ந்து, ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும்.
ரொம்ப வெயிட் போட்டுட்டதா ஃபீல் பண்றீங்களா? "பாடி வெயிட்டை கொஞ்சம் மெயின்ட்டெய்ன் பண்ணு"ன்னு ஃப்ரண்ட்ஸ் எல்லாம் சொல்றாங்களா? "வெயிட் ரெட்யூஸ் பண்ணுங்க"ன்னு டாக்டர் சொல்றாரா?

உடல் எடையை எப்படி குறைப்பது என்று யோசித்து யோசித்து களைத்துப் போய் விட்டீர்களா? உடல் எடை குறைவதற்கு சிம்பிளான, பக்க விளைவு இல்லாத வாட்டர் தெரபி உங்களுக்கு உதவும். "தண்ணீ எப்டீங்க எடையை குறைக்கும்?"னு கேட்கிறீர்களா, இந்தக் கட்டுரை உங்களுக்குப் பதில் கூறும்.

வாட்டர் தெரபி என்றால் என்ன?
உயிர் வாழ்வதற்கு நீர் இன்றியமையாத ஒன்று. உடலுக்குத் தேவையான நீர்ச்சத்தை தண்ணீர் குடிப்பதன் மூலமாகவே பெற்றுக்கொள்கிறோம். குறைவாக தண்ணீர் குடித்தால், உடலில் நச்சுப்பொருள்கள் சேரும்; செரிமான கோளாறுகள் வரக்கூடும். கூடவே, உடலில் கொழுப்பு சேர்ந்து, ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும். தினமும் நிறைய தண்ணீர் அருந்துவது, நல்ல பசியை ஏற்படுத்துவதோடு, மெட்டோபாலிஸம் என்னும் உடலியக்கத்தை ஒழுங்கு படுத்தும்; தசைகள் வலுப்பெறும். தேவையற்ற உடல் எடையை குறைப்பதற்கு, தண்ணீர் அருந்துவது மிகவும் ஏற்ற எளிய வழியாகும். வாட்டர் தெரபி மூலம் உடல் எடையை குறைப்பதற்கு நீங்கள் கைக்கொள்ள வேண்டிய ஆறு வழிகளை கீழே காணலாம்.

நன்றாக உறங்கி எழும்புங்கள்
இரவில் ஆழ்ந்த உறக்கம் அவசியம். அப்போது காலையில் மனம், அழுத்தம் இல்லாமல் ஃப்ரெஷ்ஷாக இருக்கும்
.

நிறைய தண்ணீர் அருந்துங்கள்
காலையில் எழுந்ததும் பல் துலக்கும் முன்னதாக 400 முதல் 600 மி.லி. சுத்தமான தண்ணீர் குடியுங்கள். அதன்பிறகு பல் துலக்கலாம்; காலை கடன்களை முடிக்கலாம்.

வெறும் தண்ணீருக்கு மட்டுமே அனுமதி
சுத்தமான தண்ணீர் அருந்துவதே போதுமான நீர்ச்சத்து உடலில் சேருவதற்கு உதவும். கார்பனேட்டட் வாட்டர் எனப்படும் சோடா வகைகள் அல்லது சோடியம், காஃபைன் சேர்க்கப்பட்ட நீர் வேண்டாம். வாட்டர் தெரபியை கடைப்பிடிக்கும்போது, குறைந்த கலோரி கொண்ட பானங்கள் எதுவும் அருந்த வேண்டாம். அவற்றில் சேர்க்கப்பட்டுள்ள சர்க்கரை பொருட்கள் பசியை தூண்டி, உங்கள் எடை குறைப்பு முயற்சியை முறியடித்துவிடக்கூடும்.

முக்கால் மணி நேரத்துக்கு சாப்பிடக்கூடாது
காலையில் 400 முதல் 600 மி.லி. சுத்தமான நீர் அருந்தியதற்கு பின்பு, 45 நிமிட நேரத்துக்கு எந்த உணவும் சாப்பிடக்கூடாது. காலையில் எழுந்ததும் பசிப்பதுபோன்று உணரலாம்; தேங்காய் சட்னி தொட்டு இரண்டே இரண்டு இட்லி சாப்பிட வேண்டும் போல் தோன்றலாம். ம்ஹூம்... 45 நிமிடங்களுக்கு பிறகு தான் காலை உணவு சாப்பிட வேண்டும்.

சாப்பிட்ட பிறகு 2 மணி நேரம் தண்ணீர் குடிக்கக்கூடாது
வாட்டர் தெரபியில் நல்ல பலன் கிடைக்க வேண்டுமென்றால் உணவு உண்டபிறகு இரண்டு மணி நேரத்துக்கு நீர் அருந்தக்கூடாது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இரண்டு மணி நேரம் கழித்து, எவ்வளவு வேண்டுமானாலும் தண்ணீர் குடித்துக்கொள்ளலாம்.

உடல் எடைக்குப் பாதியளவு தண்ணீர் பருக வேண்டும்
வாட்டர் தெரபி முறையை கைக்கொள்ளும்போது, உடல் எடைக்கு பாதியளவு தண்ணீர் அருந்தவேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். வாட்டர் தெரபி உங்கள் உடல் எடையை சார்ந்தே செயல்படும். அதாவது உங்கள் எடை 70 பவுண்ட் என்றால் நீங்கள் 35 அவுன்ஸ் நீர் அருந்த வேண்டும். (1 கிலோ = 2.2 பவுண்ட்; 1 லிட்டர் = 33.8 அவுன்ஸ்). இதை நீங்கள் கவனமாக கடைப்பிடிக்கும்போது, நல்ல பலன் கிடைப்பதோடு, உங்கள் உடல் நச்சு நீங்கி சுத்தமாக இருக்கும்; தோல் நீட்சிதன்மை பெறும்.
தண்ணீ குடிங்க; ஸ்லிம் ஆகுங்க!



Click it and Unblock the Notifications
