நவராத்திரி டயட் பற்றி தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

இன்றைக்கு பெரும்பாலானோர் தங்களின் ஆரோக்கியம் சார்ந்த விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள். அதன் பலனாக உடல் எடையில் அதிகப்படியான கவனம் செலுத்தப்படுகிறது.

வித விதமான டயட்டுகள், உடற்பயிற்சிகள் என தங்களின் உடல் எடையை குறைக்க பல பிரயத்தனங்கள் மேற்கொள்ளப்படுகிறது.

The diet to follow during navratri festival time

சிலருக்கு இது குறித்த விழிப்புணர்வு இருந்தும், கட்டுப்பாடற்ற உணவுப் பழக்கத்தால் உடல் எடை சிறிதும் சேதாரமின்றி கூடிக் கொண்டேயிருக்கும். இவர்கள் இந்த நவராத்திரி நாட்களை பயன்படுத்தி உடல் எடையை குறைக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ப்ரோட்டீன் மற்றும் ஃபைபர் :

ப்ரோட்டீன் மற்றும் ஃபைபர் :

உடல் எடை குறைக்க அதிகம் பயன்படுவது ப்ரோட்டீன் மற்றும் ஃபைபர் தான். மாதுளம்பழத்தில் அதிகப்படியான ஃபைபர் இருக்கிறது. வெறும் பழத்தை அப்படியே மென்று சாப்பிடுங்கள். வேண்டுமானால் தயிர் சேர்த்துக் கொள்ளலாம்.

இதனை அதிகமாக சாப்பிடாதீர்கள். ஏனென்றால் ஃபைபர் அதிகமாக சாப்பிட்டால், அது டீஹைட்ரேஷன் ஏற்படுத்திவிடும். ஒரு நாளில் இரண்டு முதல் மூன்று லிட்டர் தண்ணீர் குடிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

பொறித்த உணவுகள் :

பொறித்த உணவுகள் :

மொறுமொறுப்பான எண்ணெயில் பொறித்த உணவுகள் எல்லாருக்கும் பிடிக்கும். இந்த நவராத்திரி காலத்தில் மட்டுமாவது அவற்றை தவிர்த்திடுங்கள்.

அதிக உடல் எடையில் இருப்பவர்கள், சர்க்கரை நோய் இருப்பவர்கள் முற்றிலுமாக தவிர்ப்பது தான் நல்லது.

குடிக்க :

குடிக்க :

தண்ணீரில் புதினா இலை அல்லது வெள்ளரி சேர்த்து குடிக்கலாம். இளநீர்,ஜூஸ்,மோர் என நீராகாரங்களை அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள். செயற்கை சுவையூட்டிகளுக்கு பதிலாக தேன், வெல்லம் போன்றவற்றை பயன்படுத்தலாம்.

பிரசாதம் :

பிரசாதம் :

இந்நாளில் பூஜை செய்பவர்கள் பிரசாதமாக சபுதனா கிச்சடி எனச் சொல்லப்படுகிற காய்கறி சேர்த்த கிச்சடியை சாப்பிடுவார்கள். தானிய வகைகளை சாப்பிடுவார்கள்.

அதனை பிரசாதமாக மட்டுமல்லாது பிரதான உணவாக எடுத்துக் கொள்ளலாம். அளவை அதிகரிக்காது. ஒரு கிண்ணம் அளவுக்கு மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். இதனுடன் புதினா சட்னி சேர்த்து சாப்பிடலாம்.

ட்ரை ப்ரூட் :

ட்ரை ப்ரூட் :

பாதாம், முந்திரி,பேரிட்சை,அத்திப்பழம் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். ஒரு நாளின் காலையில் மூன்று அத்திப்பழம் சாப்பிட்டால் அன்றைய நாளுக்கு தேவையான எனர்ஜி முழுவதும் கிடைத்திடும்.

ஒரு நாளில் நான்கு பேரிட்சை சாப்பிடுவதால் உங்கள் உடலுக்கு தேவையான இரும்புச் சத்து கிடைத்திடும். அதிக கொலஸ்ட்ரால் இருப்பவர்கள் முந்திரியை தவிர்ப்பது நல்லது.

பச்சைக் காய்கறிகள் :

பச்சைக் காய்கறிகள் :

பச்சைக்காய்கறிகள் கலந்த சூப் குடிக்கலாம். பீட்ரூட் சூப் குடிப்பதால் உங்களுக்குத் தேவையான இரும்புச் சத்து மற்றும் கால்சியம் சத்து கிடைத்திடும். விரதமிருப்பவர்களுக்கு இது மிகவும் நல்லது.

காபி,டீ :

காபி,டீ :

டீ காபி குடிப்பதை விட தவிர்க்கலாம். அதற்கு பதிலாக சூப் குடிக்கலம. இரவு படுக்கச் செல்வதற்கு முன்னால் மட்டும் வேண்டும் என்கிறவர்கள் ஒரு கிளாஸ் பால் குடிக்கலாம்.

இதில் இருந்து ப்ரோட்டீன் சத்து கிடைக்கும். நன்றாக தூக்கத்தையும் கொடுக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

The diet to follow during navratri festival time

The diet to follow during navratri festival time
Story first published: Tuesday, September 26, 2017, 13:20 [IST]