For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உடல் எடை குறைய முட்டையை எப்படி சாப்பிட வேண்டும்?

இங்கே உடல் எடையை குறைக்க முட்டையை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது பற்றி கொடுக்கப்பட்டுள்ளது.

By Lakshmi
|

உடல் எடை அதிகமாக இருப்பது இன்று பலரது பிரச்சனையாக இருக்கிறது. உடல் எடையை கட்டுக்குள் வைத்துக்கொள்வதால் பல நோய்களில் இருந்துவிடுபட முடிகிறது. அளவான உடல் எடை ஆரோக்கியமாகவும் அழகாகவும் வாழ உதவுகிறது.

முட்டையை உடல் பருமனை அதிகரிப்பதற்காக சாப்பிட்டு கேள்விப்பட்டிருப்போம் ஆனால் முட்டை உடல் பருமனை குறைக்கவும் உதவுகிறது. சரி, முட்டையை உடல் பருமனை குறைக்க எப்படி சாப்பிடுவது என காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இரண்டு முட்டைகள்

இரண்டு முட்டைகள்

பருமனான உடலை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், காலை உணவாக இரண்டு முட்டைகளை மட்டுமே சாப்பிடுவது நன்மை விளைவிக்கும் என ஒரு மருத்துவ ஆய்வு தெரிவிக்கிறது.

ஆய்வு

ஆய்வு

இது தொடர்பான ஆய்வு, அமெரிக்காவிலுள்ள பென்னிங்டன் பயோமெடிக்கல் ஆராய்ச்சி மையத்தின் பேராசிரியரும், இந்தியாவை பூர்விகமாக கொண்டவருமான நிகில் வி. துரந்தர் என்பவரது தலைமையில் நடைபெற்றது.

குறைவான கலோரி

குறைவான கலோரி

உடல் எடையை குறைக்க விரும்புவர்கள் கலோரிகளை மனதில் வைத்துக்கொண்டு சாப்பிடுவார்கள். தினமும் காலை உணவாக இரண்டு முட்டைகளை மட்டும் சாப்பிடுவதால், மற்ற காலை உணவுகளை உண்பவர்களை காட்டிலும் 65 % குறைவாக கலோரிகளை மட்டுமே எடுத்துக்கொள்கிறோம்.

ஆரோக்கியம்

ஆரோக்கியம்

காலை உணவாக இரண்டு முட்டைகளை உண்பதால், உடல் எடை குறைவது மட்டுமின்றி, நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும் செயல்பட முடிகிறது. இதனால் நாம் ஆரோக்கியமாக உடல் எடையை குறைக்க முடிகிறது.

இதய பாதுகாப்பு

இதய பாதுகாப்பு

தினமும் முட்டை உண்பவர்களுக்கு இதயம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுவது குறைவு எனவும் மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

how to eat egg for weight loss

here are the some weight loss benefits of egg
Story first published: Tuesday, June 6, 2017, 16:18 [IST]
Desktop Bottom Promotion