For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஷாருக்கானின் ஃபிட்னஸ் சீக்ரெட் தெரியுமா!

பாலிவுட் ஹீரோ ஷாருக்கான் பின்பற்றும் டயட் ரகசியங்கள்

|

'பாலிவுட்டின் பாட்ஷா' என்றும், 'கிங் கான்' என்றும், 'கிங் ஆஃப் ரொமான்ஸ்' என்றும் புகழப்படும் ஷாருக்கானின் 52வது பிறந்த தினம் இன்று. எந்தவொரு சினிமா பின்னணியும் இல்லாமல், தொலைக்காட்சி மூலமாகத் திரை முன்பு தோன்றிய அவர், படிப்படியாகத் தனது திறமைகளை வளர்த்துக் கொண்டு, பாலிவுட்டில் கொடி கட்டிப்பறக்கிறார்.

diet followed by sharuk khan

1992ல், பாலிவுட்டில், 'டர்' என்ற திரைப்படத்தில் எதிர்மறையான கதாபாத்திரத்தில் அறிமுகமான அவர், மெல்ல நகர்ந்து, ஹீரோ என்ற அந்தஸ்தைக் கைப்பற்றி, முன்னணி ஹீரோக்கள் பட்டியலில் தனது பெயரைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறார். உலகளவில் ரசிகர்களைத் தனது நடிப்பால் ஈர்த்து, பில்லியன் கணக்கில் ரசிகர்கள் பட்டாளம் கொண்ட ஒரே நடிகரென்ற பெருமைக்குரியவர். இதனால் இவருக்கு, 'தி வேர்ல்ட்'ஸ் பிக்கெஸ்ட் மூவி ஸ்டார்' என்ற பட்டத்தை, லாஸ் ஏஞ்செல்ஸ் டைம்ஸ் 2011ல் வழங்கி கௌரவித்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கலைஞன் :

கலைஞன் :

30 முறை ஃபிலிம்ஃபேர் விருதுகளுக்காகப் பரிந்துரைக்கப்பட்டு, 15 முறை ஃபிலிம்ஃபேர் விருதுகளை வென்ற அவர், இந்திய அரசின் மிக உயரிய விருதான ‘பத்மஸ்ரீ', சிறந்த குடிமகன் விருதும், பல்வேறு சர்வதேச விருதுகளையும் வென்று, ஒரு நடிகனாகவும், தயாரிப்பாளாரகவும் இருந்து வருகிறார்.

ஹிந்தித் திரையுலகில் சாதாரணக் கலைஞனாக அடியெடுத்து வைத்து, உலகின் அனைத்து திரையுலகையுமே தன்னைத் திரும்பிப் பார்க்கும் அளவிற்கு முன்னேறிய ஷாருக்கானின் வெற்றிக்கு பின்னால் அவரது அசாத்திய உழைப்பு அடங்கியிருக்கிறது.

இதற்காக, தன்னை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள ஷாருக்கான் பின்பற்றிய டயட் என்ன என்று தெரிந்து கொள்ளலாமா?

ப்ரோட்டீன் :

ப்ரோட்டீன் :

உங்கள் உணவுகளில் அதிகப்படியாக ப்ரோட்டீன் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். கொழுப்பில்லாத பால், சிக்கன், முட்டையின் வெள்ளைக்கரு போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

கொழுப்பை கட்டுப்படுத்தும் பொருட்டு ஷாருக் எண்ணெயில் பொறித்த உணவுகளை அப்படியே தவிர்த்துவிடுகிறார். அதற்கு பதிலாக க்ரில் செய்யப்பட்ட அசைவ உணவுகளை எடுத்துக் கொள்கிறார். அதே போல வெண்ணெய்,சீஸ் போன்றவற்றையும் தவிர்க்கிறார்.

தினமும் வொர்க் அவுட் முடித்த பிறகு ப்ரோட்டீன் டிரிங் எடுத்துக் கொள்கிறார்.

சர்க்கரை :

சர்க்கரை :

வெள்ளைச் சர்க்கரை மற்றும் மாவு வகைகளை தவிர்த்துவிடுகிறார் ஷாருக்.அரிசி, பிரட் போன்றவற்றையும் பெரும்பாலும் தவிர்த்து விடுகிறார். சர்க்கரை நிறைந்த பொருள் குளிர்பானங்கள் என்றால் மிகப்பெரிய நோ சொல்லி விடுவாராம்.

முழு தானியங்களை விரும்பி சாப்பிடுகிறார். முழு தானியத்தைக் கொண்டு செய்யப்பட்ட டோஸ்ட் மற்றும் முட்டை, அல்லது சிக்கன் சாண்ட்விச் இதனை விரும்பி சாப்பிடுகிறார்.

விருப்பமானவை :

விருப்பமானவை :

ஷாருக்கானின் டயட்டில் பெரும்பாலான இடத்தை பிடித்திருப்பது வெஜிடேரியன் தான். இவர் தேர்ந்தெடுக்கும் உணவுகளில் குறைந்த அளவிலான கார்போஹைட்ரேட் இருக்கிறது. அதைத் தவிர தன் உடலுக்கு தேவையான விட்டமின்ஸ் மற்றும் மினரல்ஸ் ஆகியவற்றையும் கவனமாக சேர்த்துக் கொள்கிறார்.

சாப்பிடும் காய்கறி கலவை பல வண்ணங்கள் நிறைந்ததாகவே இருக்கும்.

பழங்கள் :

பழங்கள் :

இனிப்பிற்கு பதிலாக பழங்களை ஷாருக்கான் சேர்த்து கொள்கிறார். இனிப்புச் சுவைக்கும் சுவை கொடுக்கும் அதே சமயம் பழங்களில் இருக்கும் அதிகப்படியான நார்ச்சத்து,விட்டமின் மற்றும் மினரல்ஸ் ஆகியவை உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

தண்ணீர் :

தண்ணீர் :

தண்ணீர் மட்டும் ஒரு நாளைக்கு மூன்று லிட்டர் வரை குடிக்கிறார். இதைத் தவிர கொழுப்பு நீக்கப்பட்ட பால், இனிப்பு சுவை சேர்க்காத பழச்சாறு,காய்கறி சூப் ஆகியவை குடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

ஷாருக்கான் நடிப்பில் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த சில திரைப்படங்களைப் பற்றியும் அவர் வாழ்க்கையில் நடந்த சில சுவையான சம்பவங்கள் குறித்தும் ஒரு தொகுப்பு.

ஆரம்பம் :

ஆரம்பம் :

‘தில் டரியா', மற்றும் ‘ஃபௌஜி' என்ற தொலைக்காட்சித் தொடர்களில் நடித்தார். ‘ஃபௌஜி' என்ற தொடரில் அவர் நடித்த கமாண்டோ கதாபாத்திரம் பெருமளவு வரவேற்பு பெற்றுத்தந்ததால், அவர் தொடர்ந்து ‘சர்கஸ்' என்ற ஆங்கிலத் தொலைக்காட்சித் திரைப்படத்தில் நடித்தார். இதன் விளைவாக, ஹேமாமாலினி இயக்கும் படமான ‘தில் ஆஷ்னா ஹை' என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

‘தில் ஆஷ்னா ஹை' வெளிவருவதில் தாமதமானதால், அவரது ‘தீவானா' என்ற படம் 1992ல் முதலில் வெளியானது

காதல் :

காதல் :

சினிமா கனவுகளோடு 1991 ஆம் ஆண்டு மும்பைக்கு பயணமானார் ஷாருக். அங்கு ஒரு விழாவில், கவுரி சிப்பர் என்பவரைக் கண்டவருக்கு, அவர் மீது காதல் மலர்ந்தது. அவர் ஒரு இந்து என்பதால், பல எதிர்ப்புகளையும் மீறி, அதே ஆண்டு அக்டோபர் மாதம் 25 ஆம் தேதி,திருமணம் செய்தனர்.

இந்த காதல் தம்பதிகளுக்கு 1997ல் ஆரியன் என்ற மகனும், 2000ல் சுஹானா என்ற மகளும் பிறந்தனர். திருமணத்திற்கு முன்பு தனது மதமான இஸ்லாமியம் மீது அபார நம்பிக்கை கொண்ட அவர், திருமணத்திற்குப் பின், இரண்டு மதங்களையும் பின்பற்றுகிறார்.

தில் வாலே துல் ஹனியா லே ஜாயங்கே :

தில் வாலே துல் ஹனியா லே ஜாயங்கே :

படமும், பாடல்களும் இந்தியா முழுவதும் பிரபலமானது. மும்பையில் உள்ள 'மராத்தா மந்திர்' தியேட்டரில் இப்படம் 1009 வாரங்கள் (அதாவது சுமார் 20 ஆண்டுகள்) ஓடியது. சமீபத்தில் திரையரங்கிலிருந்து எடுக்கப்பட்ட இப்படத்தின் கடைசிக் காட்சியை 210 பேர் பார்த்திருக்கின்றனர்.

தில் தோ பாகல் ஹே :

தில் தோ பாகல் ஹே :

இப்படத்தில் ஷாருக் தன்னுடைய க்யூட் காதல் காட்சிகளில் நடிப்பை மட்டும் வெளிப்படுத்தாமல் சிறந்த டான்ஸர் என்பதையும் நிரூபித்திருப்பார். நடிப்பில் மட்டுமல்லாது நடனத்திலும் தன் திறமையை நிரூபிக்க உதவிய படம். இப்படம் மூன்று தேசிய விருது உட்பட எட்டு ஃபிலிம் பேர் விருதுகளையும் பெற்றது.

குச் குச் ஹோத்தா ஹய் :

குச் குச் ஹோத்தா ஹய் :

கரண்ஜோகர் அறிமுக இயக்குநராக திரையுலகில் கால் பதித்த முதல் படம். ஷாருக்கான், கஜோல், ராணிமுகர்ஜி மூவரின் முக்கோண காதல் கதையே "குச் குச் ஹோத்தா ஹய்".

கல்லூரி மாணவராக ஷாருக். அவரின் நெருங்கிய தோழி கஜோல், அழகு தேவதையாக வந்திறங்கும் ராணி முகர்ஜி என்ற மூவரின் காதலும், வலியுமே படக் கதைத்தளம். கரண்ஜோகருக்கு மட்டுமல்லாமல் ஷாருக்கின் நடிப்பிற்கும் திருப்புமுனையாக இருந்த படம் இது.

இந்தப் படம் எட்டு ஃபிலிம் பேர் விருதுகளை வென்றது. இன்றும் இப்படம் ஹிந்தியின் ஆல் வேஸ் ப்ளாக் பஸ்டர்.

கபி குஷி கபி கம் :

கபி குஷி கபி கம் :

ஷாருக்கான், அமிதாப் பச்சன், ஜெயா பச்சன், கஜோல், கரீனா கபூர், ஹிருத்திக் ரோஷன் என்று நட்சத்திரப் பட்டாளம் இணைந்த குடும்பம் சார்ந்த கதைத்தளம். வசூல் ரீதியில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம்.

ஐந்து ஃபிலிம் பேர் உள்ளிட்ட பல விருதுகளை அள்ளியது. அமிதாப் பச்சன் எனும் இமய நடிகருக்கு சமமான நடிப்பை இப்படத்தில் வெளிப்படுத்தி அமிதாப்பிற்கு அடுத்து ஹிந்தியில் ஷாருக்கான் என்ற பெயரைப் பெறுவதற்கு உறுதுணையாக நின்ற படம் இது.

தேவதாஸ் :

தேவதாஸ் :

தேவதாஸின் காதல் காவியத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இப்படத்தில் ஷாருக்குடன் ஐஸ்வர்யாராய், மாதுரி தீக்‌ஷித் இருவரும் நடித்திருப்பார்கள். காதலி விட்டுச் சென்ற பிரிவில் வாடும் ஷாருக் மதுவும், மாதுவுமாக இரவினைக் கடத்தும் க்ளாசிக் ஓண்டர்.

இப்படம் ஆஸ்கார் விருதிற்கான சிறந்த பிறமொழிப் படங்கள் பட்டியலுக்கு இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்டது. மேலும் ஐந்து தேசிய விருதுகளையும் தட்டியது.

வீர் சாரா :

வீர் சாரா :

வீர் பிரதாப் சிங் என்ற இந்திய விமானிக்கும், சாரா ஹயத் கான் என்ற பாகிஸ்தான் முஸ்லீம் பெண்ணிற்குமான காதலும் ,அதைச் சுற்றிய அரசியல் முகமே இப்படம்.

மொழி, மதம், ஜாதிகளைக் கடந்த உண்மைக் காதல் நிச்சயம் இணையும் என்பதைக் கண்களில் நீர் ஊற சொல்லியிருக்கும்

சக் தே இந்தியா :

சக் தே இந்தியா :

இந்தப் படத்திலிருந்து தான் பிடிக்கும் என்று ரசிகர்கள் சொன்னால் அந்தப் பட்டியலில் முதலில் இடம்பிடிக்கும் படம் இதுவாகத்தான் இருக்க முடியும். உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியாவை எதிர்த்து பாகிஸ்தான் விளையாடிய நேரம்,

அந்த விளையாட்டில் இந்தியா தோற்கிறது. குற்றம் அனைத்தும் காபிர்கான் என்ற ஷாருக்கான் மீது விழுகிறது. ஹாக்கியிலிருந்து வெளியேறும் ஷாருக் ஏழு ஆண்டுகள் கழித்து பெண்கள் ஹாக்கி டீமின் பயிற்சியாளராக நியமிக்கப்படுகிறார்.

அரசியல் சார்ந்த அனைத்து பிரச்னைகளையும் தாண்டி இந்தப் பெண்கள் அணி மட்டுமில்லாமல் ஷாருக்கானும் இந்தியாவிற்காக ஜெயிப்பது தான் "சக் தே இந்தியா".

மை நேம் இஸ் கான் :

மை நேம் இஸ் கான் :

மன இறுக்கம் காரணமாக ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட ஷாருக்கின் பெயர் கான். செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பிறகு முஸ்ஸீம் மக்கள் மீது உலக மக்கள் வெறுப்பை அள்ளித்தெளித்த நேரத்தில் ஒரு முஸ்லிமாக உலக மக்களை எதிர்கொள்ளும் ஒருவனின் கதையே மைநேம் இஸ் கான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

diet followed by sharuk khan

diet followed by sharuk khan
Desktop Bottom Promotion