For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அந்த காலத்தில் உடலை கட்டுகோப்பாக வைக்க என்ன செய்தார்கள் தெரியுமா?

நமது முன்னோர்கள் மேற்கொண்ட முறைகளை சேகரித்து நாமும் இன்றைய காலகட்டத்தில் கட்டுடல் மேனியுடன் ஆரோக்கியமாக வாழலாம்

|

இப்பொழுது உள்ள மாடர்ன் வாழ்க்கையில் நமது முகம் மட்டுமல்ல உடலையும் கச்சிதமாக பிரதிபலிப்பது மிகவும் முக்கியம் வாய்ந்ததாக உள்ளது. இதற்கு நீங்கள் என்ன செய்து இருப்பீர்கள். மணிக்கணக்கில் உடற்பயிற்சி, ஜிம்மில் நேரம் கழிப்பது இப்படி நிறைய மெனக்கெடல்களை மேற்கொண்டு இருப்பீர்கள் சரியா.

நிறைய பேர்களுக்கு தங்களது உடம்பை கச்சிதமாக 6 பேக்ஸ் மற்றும் வலுவான தசைகளுடன் காட்டுவது தற்போது பேஷனாக மாறி வருகிறது.

ஆனால் உண்மையை ஆராய்ந்து பார்த்தால் நமது முன்னோர்கள் கூட தங்களது உடம்பை கச்சிதமாக வைத்து கொள்ள 3 விதமான அற்புத முறைகளை பின்பற்றி வந்துள்ளனர்.

நீங்கள் உங்கள் பாட்டன், முப்பாட்டன் மற்றும் தாத்தா கால பிளாக் ஆன்ட் வொயிட் புகைப்படத்தை பார்த்தாலே தெரியும் அவர்களது உடல் கச்சிதம். அந்த அளவுக்கு அவர்கள் உடம்பை பராமரிப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளனர்.

இதற்காக அவர்கள் மேற்கொண்ட முறைகள் எல்லாம் பாதுகாப்பானதாகவும் எந்த வித பக்க விளைவுகள் இல்லாத வண்ணமும் இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நீண்ட நாள் பயனும் கிடைத்தது.

3 Secrets From Ancient India That Help Us Lose Weight & Stay Fit!

ஆனால் தற்போது நாம் எவ்வளவு தான் ஜிம்மில் வொர்க் அவுட் செய்து தசைகளை ஏத்தினாலும் ஒரு வாரம் பயிற்சியை விட்டால் போதும் எல்லாம் மாறிவிடும். உங்கள் கட்டுடல் எல்லாம் காணாமல் போய்விடும்.

ஏன் இந்த மாற்றம் ஏற்படுகிறது என்றால் நாம் உடற்பயிற்சி செய்யும் அளவிற்கு நமது வாழ்க்கையில் சில நல்ல பழக்கத்திற்கு இடம் கொடுப்பதில்லை. அதனால் தான் நம் உடல் என்றும் கச்சிதமாக இருக்க முடிவதில்லை.

நமது முன்னோர்கள் கூட தங்களது உடம்பை கச்சிதமாக வைத்து கொள்ள 3 விதமான அற்புத முறைகளை பின்பற்றி வந்துள்ளனர். எனவே தான் உங்களுக்காக நம் முன்னோர்கள் மேற்கொண்ட ரகசிய உடல் கட்டு முறைகளை இங்கே கூற உள்ளோம். சரி வாங்க பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
யோகா

யோகா

முந்தைய காலத்தில் யோகா என்பது ஒரு உடற்பயிற்சி ஆக இல்லாமல் ஆன்மீக கலையாக பார்க்கப்பட்டது. எனவே தான் அந்த காலத்தில் எல்லா குழந்தைகளும், இளைஞர்களும் இந்த பயிற்சியை கற்று கொண்டு தினமும் செய்தனர்.

யோகா என்பது ஒரு சிறந்த உடற்பயிற்சி. இதை தினமும் செய்யும் போது உங்கள் உடல் மட்டுமல்ல மனமும் கச்சிதமாக இருக்கும். மனதில் ஒரு அமைதி நிலவும். மனக் குழப்பங்கள், மன அழுத்தம் இல்லாத நிலை கிடைக்கும். இதன் மூலம் மனழகே உடலழகாக பிரதிபலிக்கும்.

எனவே நீங்களும் தினசரி சிறிது நேரம் யோகா பயிற்சி மேற்கொண்டால் நீண்ட ஆயுளோடு கட்டுடல் மேனியுடன் வாழ முடியும்.

 தினசரி நடவடிக்கைகள்

தினசரி நடவடிக்கைகள்

முந்தைய காலத்தில் நம் முன்னோர்கள் நிறைய வேலைகளை அவர்களே இறங்கி செய்வர். எனவே தான் அவர்கள் நிறைய ஆற்றலுடன் மற்றும் வலிமையான தசைகளுடன் காணப்பட்டனர். உதாரணமாக பார்த்தால் அவர்களே தங்கள் வீடுகளை கட்டுதல், தோட்டம் அமைத்தல், மரம் அறுத்தல், சமைத்தல் போன்ற உடலுக்கு வேலை கொடுக்கும் வேலைகளை செய்து வந்தனர்.

மேலும் புதிய வாகனங்கள் கண்டுபிடிப்பதற்கு முன் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு பயணம் மேற்கொள்ள தங்களது கால்களையோ அல்லது மிதிவண்டிகளையோ பயன்படுத்தினர். தங்கள் உடல் உழைப்பை செலவு செய்து களத்தில் இறங்கி விவசாயம் செய்து வாழ்ந்து வந்தனர். ஆனால் நாம் இப்பொழுது எல்லாம் உட்கார்ந்த இடத்தில் இருந்து கணினி வேலைகளை தான் செய்கிறோம்.

எனவே மேற்கண்ட வேலைகளை நாம் செய்யும் போது நமது உடலில் உள்ள ஆற்றல் மற்றும் கலோரிகள் செலவழிந்து நாம் பிட்டாக இருக்க முடியும். இதனால் இயற்கையாகவே நாம் கட்டுடல் மேனியுடன் காணப்படலாம்.

சமச்சீரான உணவுகள்

சமச்சீரான உணவுகள்

நீங்கள் முந்தைய காலத்திற்கு சென்றால் நம் இந்தியாவில் எந்த வித பாஸ்ட் புட்டும் இருந்து இருக்காது. சில உணவுக் கடைகளை மட்டுமே நீங்கள் பார்க்க முடியும். ஏனெனில் நமது முன்னோர்கள் எல்லாரும் ஆரோக்கியமான உணவுகளை வீட்டிலேயே சமைத்து சாப்பிட்டனர். இதனால் அவர்களுக்கு அதிகமான கொலஸ்ட்ரால், சுகர் போன்ற எந்த பிரச்சினையும் இருந்ததில்லை.

எனவே நாமும் பதப்படுத்தப்பட்ட உணவுகள், வெளி உணவுகள் இவற்றை தவிர்த்து வீட்டிலேயே ஆரோக்கியமான சமச்சீரான உணவுகளை சாப்பிட்டு வந்தால் கண்டிப்பாக நாமும் பிட்டாக காட்சி அளிப்போம். நமது உடலும் ஆரோக்கியமாக இருக்கும். நோய் நொடிகள் இல்லாத வாழ்வு வாழலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

3 Secrets From Ancient India That Help Us Lose Weight & Stay Fit!

3 Secrets From Ancient India That Help Us Lose Weight & Stay Fit!
Story first published: Friday, November 24, 2017, 15:23 [IST]
Desktop Bottom Promotion