உடல் எடையை குறைக்க வந்தாச்சு 3 மணி நேர டயட்!! அதைப் பற்றி தெரியுமா?

Posted By: Ambika Saravanan
Subscribe to Boldsky

டயட்டில் பல வகைகளை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். வெஜிடேரியன் டயட், கெடொஜெனிக் டயட், பேலியோ டயட், லோ கார்ப் டயட் போன்றவை மக்களால் பின்பற்றப்படும் சில வகை டயட்டாகும் . புதிதாக ஒரு டயட் இந்த குழுவில் இடம்பிடிக்கப்பட்டுள்ளது. அதனை பற்றியது தான் இந்த பதிவு.

அதுதான் 3 ஹவர் டயட்(3-Hour Diet). இதனை கண்டுபிடித்தவர் திரு. ஜார்ஜ் க்ரூயிஸ். இவர் ஒரு பிட்னெஸ் பத்திரிகையாளர். இது அவருடைய சொந்த அனுபவத்தில் உண்டான டையட்டாகும். அவர் சிறு குழந்தையாக இருக்கும் போது அதிக எடையுடன் இருந்ததாக கூறுகிறார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
3 மணி நேர டயட் என்றால் என்ன ?

3 மணி நேர டயட் என்றால் என்ன ?

3 மணி நேர படம் தெரியும். இது என்ன 3 மணி நேர டயட்? 3 மணி நேர டயட் என்பது 3 மணி நேரத்திற்கு ஒரு முறை சாப்பிடுவது தான். இதனை செய்யும்போது அடிப்படை வளர்சிதை மாற்ற விகிதம் அதிகரிக்கும், இதனால் அதிக கலோரிகள் எரிக்கப்படும். நேரம் தான் எல்லாவற்றையும் கண்காணிக்கும் என்று அவர் குறிப்பிடுகிறார்.

எப்படி மேற்கொள்ள வேண்டும்?

எப்படி மேற்கொள்ள வேண்டும்?

காலையில் எழுந்து ஒரு மணி நேரத்தில் காலை உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் பிறகு ஒவ்வொரு 3 மணி நேரத்திற்கு பிறகும் உணவை சாப்பிட வேண்டும். இரவில் உறங்க செல்லும் 3 மணி நேரம் முன்னதாக இரவு உணவை எடுத்துக் கொள்ள விடும். இது தான் 3 மணி நேர டயட்.

ஒவ்வொரு முறை உண்ணுவதற்கு இடையில் அதிகம் இடைவெளி இருக்கும்போது, உடல் அந்த இடைவெளியில் உண்டாகும் பசியை எதிர்ப்பதற்காக கொழுப்பை தக்க வைத்து கொள்கிறது. இந்த இடைவெளியை குறைக்கும்போது , கொழுப்பு சேமிக்க படுவது குறைகிறது. இந்த பயிற்சியை தொடர்வது மூலம் ஒரு வாரத்தில் 1 கிலோ குறைவதற்கு வாய்ப்பு உண்டு.

நன்மை:

நன்மை:

இந்த டயட் ஒரு சமசீரான டயட் ஆகும். கார்போஹைடிரேட், புரதம், மற்றும் கொழுப்பு போன்றவை சரியான விகிதத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. பழங்களும் காய்கறிகளும் இந்த டயட்டில் சேர்க்கப்பட்டுள்ளது.

3 வேளை முக்கிய உணவு 400 கலோரிகளும், 3 வேளை சிற்றுண்டி 70-80 கலோரிகளும், சேர்த்து ஒரு நாளைக்கு 1450 கலோரிகள் பரிந்துரைக்கப்படுகிறது. இது உடல் ஆரோக்கியத்திற்கு ஒரு நாளைக்கு தேவையான சரியான கலோரி எண்ணிக்கை.

உணவுகள் :

உணவுகள் :

உணவில் கெட்ட உணவு என்று எதுவும் கிடையாது. கெட்ட அளவு தான் இருக்கிறது என்று ஜார்ஜ் கூறுகிறார். இந்த டயட்டில் சாக்லேட் , பன்றி இறைச்சி, சிவப்பு இறைச்சி, போன்றவையும் இணைக்கப்பட்டுள்ளது.

ஆனால் அதனை எடுத்து கொள்ளும் அளவு கண்காணிக்கப்பட வேண்டிய ஒன்று. சாக்லேட் என்பது சிறிய அளவு சாக்லேட் அல்லது சாக்லேட் பாரில் ஒரு பகுதி. ஒரு முழு சாக்லேட் பார் அல்ல. இத்தகைய டயட் நமது ஆவலையும் பூர்த்தி செய்கிறது. டயட்டை பின்பற்றுவதில் உள்ள சிரமத்தையும் தவிர்க்கிறது. இது எல்லாவற்றுடன் சேர்த்து 8 க்ளாஸ் தண்ணீரை அவசியம் பருக வேண்டும்.

தீமைகள்:

தீமைகள்:

இந்த டயட், பார்ப்பதற்கு எளிமையாக இருந்தாலும், நடை முறை சிக்கல் இருக்கவே செய்கிறது. தொடர்ந்து பல மணி நேரம் வேலை பார்ப்பவர்கள் , அடிக்கடி உணவு உண்ணுவது சாத்தியப்படாத ஒன்று. அதுவும் ஆரோக்கியமான உணவு உண்ண வேண்டும். இதனை பின்பற்ற அவர்கள் வீட்டில் இருந்து தேவையான அளவு உணவை எடுத்து கொண்டு வர வேண்டும்.

இல்லையென்றால் தேவையற்ற ஜங்க் உணவுகளை வெளியில் இருந்து வாங்கி உண்ண வேண்டியிருக்கும். அடிக்கடி உணவு சாப்பிடும் போது, சில நேரம் அதிகம் உண்ணுவதற்கான வாய்ப்புகள் உண்டு. ஆகவே உணவு அளவில் அவசியம் நமது கவனம் இருக்க வேண்டும். முக்கியமான ஒரு பின்னடைவு இந்த டயட்டில் என்ன வென்றால், இதில் உடற்பயிற்சி பற்றிய குறிப்புகள் இல்லை. உணவில் என்னதான் கட்டுப்பாடுகள் விதித்தாலும், பயிற்சி இல்லாத உணவு கட்டுப்பாடு ஒரு சிறந்த அனுகூலத்தை தர முடியாது. ஆரோக்கிய வாழ்வுக்கு உடற்பயிற்சி மிகவும் முக்கியம்.

எந்த டயட்டை பின்பற்றுவதாக இருந்தாலும், மருத்துவரிடம் ஆலோசனை பெற்று , உங்கள் உடல் தகுதிக்கு ஏற்ற டயட்டை பின்பற்றுங்கள். எந்த டயட்டை பின்பற்றினாலும், அதனுடன் சிறிதளவு உடற்பயிற்சியும் சேர்ந்தால் தான் பலன்கள் நல்லதாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Advantage and disadvantage of 3 hours Diet

Advantage and disadvantage of 3 hours Diet