இரத்த வகைகளும்... சாப்பிட வேண்டிய உணவுகளும்...

By Maha

ஒவ்வொருவருக்கும் ஒரு குறிப்பிட்ட இரத்த வகை இருக்கும். இரத்த வகையைப் பொறுத்து அவர்களுக்கு எந்த மாதிரியான பிரச்சனைகள் வரும் என்பதை சொல்ல முடியும். ஏனெனில் இரத்த வகைகளுக்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் தொடர்புள்ளது. குறிப்பாக ஒருவர் தங்களது இரத்த வகைக்கு ஏற்ற சரியான உணவுகளை உட்கொள்ளாமல், தவறான உணவுகளை உட்கொண்டு வந்தால், அதனாலேயே பல பிரச்சனைகள சந்திக்க நேரிடும்.

சத்தா சாப்பிடுவதை விட ரத்தத்துக்கு ஏத்த மாதிரி சாப்பிடுவது ரொம்ப முக்கியம் ராசா!

அதுமட்டுமின்றி, ஆய்வு ஒன்றில் எந்த வகை இரத்த பிரிவினருக்கு, எந்த மாதிரியான ஆரோக்கிய பிரச்சனைகள் வரும் என கண்டறியப்பட்டுள்ளது. உதாரணமாக, ஓ இரத்த பிரிவினருக்கு வயிற்று அல்சர் வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. ஏ இரத்த பிரிவினருக்கு பாக்டீரியா, வைரஸ் அல்லது பூஞ்சை தாக்குதல் அதிகம் இருக்கும். அதிலும் ஏ இரத்த பிரிவு பெண்கள் கருவுறுதலில் பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

அதேப் போல் பி மற்றும் ஏபி இரத்த பிரிவினருக்கு கணைய புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகம் உள்ளது. இருப்பினும் சரியான உணவுகளை உட்கொண்டு வந்தால், இவற்றைத் தவிர்க்கலாம். சரி, இப்போது எந்த இரத்த பிரிவினர் எந்த மாதிரியான உணவுகளை உட்கொள்வது நல்லது என்பது குறித்து காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஏ இரத்த பிரிவு

ஏ இரத்த பிரிவு

ஏ இரத்த பிரிவைச் சேர்ந்தவர்களின் நோயெதிர்ப்பு மண்டலம் மிகவும் சென்சிடிவ்வானது. எனவே இத்தகையவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மேலும் இவர்களது செரிமான மண்டலமும் சற்று பலவீனமாக இருக்கும். எனவே இந்த வகை இரத்த பிரிவினர் சிக்கன், மீன் மற்றும் மட்டனை அளவாக உட்கொள்ள வேண்டும். அதுமட்டுமின்றி கேரட், பீச் பழம், பச்சை இலைக் காய்கறிகள், அத்திப்பழம், பேரிக்காய், பூண்டு, வெண்ணெய் பழம் அல்லது அவகேடோ மற்றும் ப்ராக்கோலி போன்றவற்றை அதிகம் உட்கொள்வது நல்லது.

பால், முட்டை கூடாது

பால், முட்டை கூடாது

ஏ இரத்த பிரிவைச் சேர்ந்தவர்கள் பால் பொருட்கள், சாதம் மற்றும் முட்டையை தவிர்க்க வேண்டும். இவற்றுக்கு மாற்றாக தயிர், ஆட்டு சீஸ் அல்லது சோயா பால் எடுத்துக் கொள்ளலாம்.

பி இரத்த பிரிவு

பி இரத்த பிரிவு

பி இரத்த பிரிவைச் சேர்ந்தவர்கள் அன்னாசிப்பழம், வாழைப்பழம், திராட்சை மற்றும் கீரைகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். மேலும் மட்டன் மற்றும் மீனை உட்கொள்வது நல்லது. அதே சமயம் இந்த வகையினர் சிக்கனுக்கு பதிலாக வான்கோழி சாப்பிடுவது நல்லது.

பால், முட்டை சிறந்தது

பால், முட்டை சிறந்தது

இந்த வகையினருக்கு பால் மற்றும் முட்டை சிறந்த உணவுகள். இந்த உணவுகள் இவர்களின் உடலில் எளிதில் செரிமானமாகி, கொழுப்புக்களின் தேக்கத்தைத் தடுக்கும்.

ஏபி இரத்த பிரிவு

ஏபி இரத்த பிரிவு

இந்த வகை இரத்த பிரிவு மிகவும் அரிதானது. 5 சதவீத மக்களுக்கு தான் இந்த வகை இரத்தம் இருக்கும். இந்த வகையினருக்கு ஏ மற்றும் பி இரத்த பிரிவின் குணாதியங்கள் கலந்திருக்கும். இந்த வகையினர் இறைச்சிகளை உட்கொண்டால், அதில் உள்ள கொழுப்புக்கள் எளிதில் தங்கிவிடும். மேலும் இந்த பிரிவைச் சேர்ந்தவர்கள் காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகம் சாப்பிடுவது நல்லது. இவர்கள் முட்டையை எவ்வித அச்சமுமின்றி சாப்பிடலாம்.

மாட்டிறைச்சி கூடாது, பால் பொருட்கள் சாப்பிடலாம்

மாட்டிறைச்சி கூடாது, பால் பொருட்கள் சாப்பிடலாம்

ஏபி இரத்த பிரிவினர் அனைத்து வகையான இறைச்சிகள், குறிப்பாக மாட்டிறைச்சிகளை அறவே சாப்பிடக்கூடாது. ஆனால் பால் பொருட்களான சீஸ், வெண்ணெய் மற்றும் இதர பொருட்களை சாப்பிடலாம்.

ஓ இரத்த பிரிவு

ஓ இரத்த பிரிவு

ஓ இரத்த பிரிவினர் புரோட்டின் அதிகம் நிறைந்த உணவுப் பொருட்களான பருப்பு வகைகள், இறைச்சி, சிக்கன் போன்றவற்றை உட்கொள்ளலாம். அதேப் போல் காய்கறிகள், பழங்கள் மற்றும் கடல் உணவுகளையும் எவ்வித அச்சமுமின்றி சாப்பிடலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Tuesday, January 12, 2016, 9:00 [IST]
Desktop Bottom Promotion