7 நாட்களில் உங்கள் எடையை குறைக்க உதவும் சிறந்த உணவுகள்!!

Written By: Hemalatha V
Subscribe to Boldsky

உடல் பருமனால் இதய நோய் தொடங்கி புற்று நோய் வரை புதுப்புது வியாதிகள் வருகின்றன என நிறைய ஆராய்ச்சிகள் சொல்லிக் கொண்டேயிருக்கின்றன.

டயட் இருக்க நினைத்தாலும், மனம் அடங்க மறுத்து எண்ணெய், இனிப்பு பதார்த்தங்களைஒருபிடி பிடிக்க நினைக்கும். புத்திக்கும், மனதிற்கு நடக்கும் போராட்டத்தில் ஜெயிப்பது என்னமோ மனம்தான். இங்கேதான் புத்தி அதிகமாய் யோசிக்க வேண்டும். மனதிற்கு கடிவாளம் போடும் உணவுகளை தேடிக் கண்டுபிடித்து சாப்பிட வேண்டும். சில உனவுவகைகள் மூளையை அதிகம் சாப்பிடத் தூண்டாமல் தடுக்கிறது. இதனால் நிச்சயம் நாக்கு அடங்கி உங்கள் டயட் ஒரு கட்டுக்குள் வரும். அப்படிப்பட்ட சிறந்த உணவுகள் எவையென பார்க்கலாமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பட்டை :

பட்டை :

பட்டை உங்கள் வயிற்றிலுள்ள கொழுப்புகளை குறைக்க உதவும் சிறந்த உணவுகளில் ஒன்று. தினமும் ஒரு ஸ்பூன் பட்டைப் பொடியை உணவிலோ அல்லது நீரில் கலந்து சாப்பிட்டாலோ அதன் பலன் எளிதில் கிடைக்கும்.

ராகி :

ராகி :

ராகியில் அதிக இரும்பு, நார்சத்து ஆகியவை உள்ளன. இது கொலஸ்ட்ராலை துரிதமாக எரிக்கிறது. தினமும் ராகி தோசை, ராகி களி சாப்பிட்டு வந்தால் ஒரே வாரத்தில் உடல் எடை குறைவது நிச்சயம்.

 கடுகு எண்ணெய் :

கடுகு எண்ணெய் :

கடுகு எண்ணெய் அதிக ஆன்டி ஆக்ஸிடென்ட் கொண்டவை. கொழுப்பை குறைக்க உதவும். இதனை தினமும் சமையலுக்கு பயன்படுத்துங்கள்.

கொள்ளு :

கொள்ளு :

உடல் எடை குறைய கொள்ளு மிகச் சிறந்த உணவு. இது அடிவயிறு, இடுப்புப் பகுதியிலுள்ள விடாப்படியான கொழுப்பையும் கரைக்கும் ஆற்றல் கொண்டவை. தினமும் கொள்லு சட்னி, கொள்ளு ரசம் என சாப்பிட்டால் கைமேல் பலந்தரும்.

பூண்டு :

பூண்டு :

பூண்டு சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் கொண்டவை. உடலிலுள்ள கொழுப்புகளை அறவே நீக்கிவிடும். தினமும் பூண்டை எடுத்துக் கொண்டால் நலல் பலன் தரும்.

 பாசிப் பருப்பு :

பாசிப் பருப்பு :

அதிக புரோட்டின் கொண்ட பாசிப்பருப்பு கொலஸ்ட்ராலை கரைக்க உதவுகிறது. குறிப்பாக தொப்பையை குறைக்கும். பசியை ஏற்படுத்தாது. சிறிது சாப்பிட்டாலும் நிறைவை தரும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

உங்களுக்கான சிறந்த ஹெல்த் இன்சூரன்ஸ் எது, ஒப்பிட்டு பார்த்து தேர்வு செய்யுங்கள்!

English summary

Foods To reduce Obesity in a week

the Foods to be Consumed to reduce body weight in a Week
Story first published: Wednesday, August 31, 2016, 15:45 [IST]
Subscribe Newsletter