72 மணிநேரத்தில் கல்லீரலை சுத்தம் செய்து உடல் எடையைக் குறைக்க இத ஒரு டம்ளர் குடிங்க...

Posted By:
Subscribe to Boldsky

உடல் ஆரோக்கியமாக இருந்தால் தான், எந்த ஒரு செயலையும் சோர்வின்றி செய்ய முடியும். அதிலும் உடலில் கல்லீரல் மிகவும் பெரிய மற்றும் முக்கியமான உறுப்பு. இந்த கல்லீரலில் டாக்ஸின்கள் அதிகமாக சேர்ந்தால், கல்லீரலின் செயல்பாடு பாதிக்கப்பட்டு, அதனால் பல்வேறு தீவிர பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

Drink This To Clean Your Liver And Lose Weight In 72 Hours

மேலும் உடல் எடையைக் குறைக்க வேண்டுமானாலும் கல்லீரலின் செயல்பாடு அவசியம். கல்லீரலில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால், அது உடல் எடை குறைவதில் தாமதமாக்கும். ஆகவே ஒவ்வொருவரும் தங்களது கல்லீரலை அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டியது அவசியம்.

இங்கு 72 மணிநேரத்தில் கல்லீரலை சுத்தம் செய்து, உடல் எடை குறைய உதவிப் புரியும் ஓர் அற்புத பானம் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பானத்தில் உள்ள உட்பொருட்கள்

பானத்தில் உள்ள உட்பொருட்கள்

கல்லீரலை சுத்தம் செய்ய உதவும் கீழே கொடுக்கப்பட்டுள்ள பானத்தில், உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் எலுமிச்சையும், செரிமானத்தை சீராக்க வைட்டமின்கள் நிறைந்த பார்ஸ்லியும், செலரி கீரையும் உள்ளது.

தேவையான பொருட்கள்:

தேவையான பொருட்கள்:

செலரி கொத்து - 5

தண்ணீர் - 6 கப்

எலுமிச்சை - 3

நறுக்கிய பார்ஸ்லி - 1 கப்

தயாரிக்கும் முறை:

தயாரிக்கும் முறை:

முதலில் மிக்ஸியில் எலுமிச்சை சாறு, பார்ஸ்லி, செலரி ஆகியவற்றைப் போட்டு, தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். இப்போது கல்லீரலை சுத்தம் செய்யும் பானம் தயார்!

பருகும் முறை:

பருகும் முறை:

இந்த பானத்தை தினமும் மூன்று வேளை உணவு உட்கொள்ளும் முன் ஒரு சிறிய டம்ளர் பருக வேண்டும். இப்படி மூன்று நாட்கள் இந்த சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். பின் வேண்டுமானால், மீண்டும் இந்த சிகிச்சையை 7-10 நாட்கள் கழித்து பின்பற்றலாம்.

குறிப்பு

குறிப்பு

இந்த சிகிச்சையைப் பின்பற்றும் போது, வயிறு நிறைய உணவு உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். மேலும் இது சுத்தம் செய்யும் சிகிச்சை என்பதால், குடிக்கும் நீரின் அளவையும் அதிகரிக்க வேண்டியது அவசியம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Drink This To Clean Your Liver And Lose Weight In 72 Hours

Detoxifying your liver can restore its function so you can start losing weight again. Luckily for you, we have an incredible drink that will clean your liver in just 3 days!
Story first published: Tuesday, November 8, 2016, 15:37 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter