கோடையில் டயட்டில் இருக்கும் போது கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள்!!!

Posted By:
Subscribe to Boldsky

டயட்டில் இருப்பவர்கள் ஒவ்வொரு பருவ காலத்திலும் சிறு மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும். உதாரணமாக, கோடையில் உடலில் நீர்ச்சத்து அதிகம் குறைவதால், அளவாக உணவை உட்கொண்டு, நீர்ச்சத்துள்ள உணவுப் பொருட்களை அதிகம் எடுத்து வர வேண்டும்.

இப்படி செய்வதால், கோடைக்காலத்தில் உடலில் ஆற்றலை நீண்ட நேரம் தக்க வைக்க முடியும். இங்கு டயட்டில் இருப்போர் கோடைக்காலத்தில் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுப் பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து தவறாமல் சேர்த்து, கோடையில் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் இருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சோளம்

சோளம்

கோடைக்காலத்தில் சோளத்தை கட்டாயம் சாப்பிட வேண்டும். ஏனெனில் சோளத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் இருப்பதால், இவை கடுமையான சூரியக்கதிர்களின் தாக்கத்தில் இருந்து நல்ல பாதுகாப்பு தரும். இதனால் சரும செல்கள் அதிகம் பாதிக்கப்பட்டு, விரைவில் முதுமை தோற்றத்தைப் பெறுவது தடுக்கப்படும்.

கோல்டு காபி

கோல்டு காபி

காலையில் சூடாக காபி குடிப்பதற்கு பதிலாக, கோல்டு காபி குடித்து வாருங்கள். இதனால் கோடையில் சூரியக்கதிர்களால் சரும செல்கள் அதிகம் பாதிப்படைந்து, அதனால் சரும புற்றுநோய் வரும் வாய்பு குறையும்.

தக்காளி

தக்காளி

கோடைக்காலத்தில் சாலட் சாப்பிடும் போது, அத்துடன் தக்காளியை சேர்த்துக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால், தினமும் ஒரு டம்ளர் தக்காளி ஜூஸ் குடித்து வாருங்கள். இதனால் தக்காளியானது சிறந்த சன்ஸ்க்ரீன் போன்று செயல்பட்டு, சூரியக்கதிர்களில் இருந்து நல்ல பாதுகாப்பு வழங்கும்.

தர்பூசணி

தர்பூசணி

தர்பூசணி கோடைக்கால பழமாகும். எனவே இதனை கோடையில் தவறாமல் சாப்பிட்டு வந்தால், உடலுக்கு வேண்டிய நீர்ச்சத்து கிடைக்கும். ஏனெனில் தர்பூசணியில் 92% நீர்க்கத்து நிறைந்துள்ளது. இதனால் இவற்றை உட்கொள்வதால், உடலில் வறட்சி ஏற்படுவது தடுக்கப்படும்.

செர்ரி

செர்ரி

கோடையில் அதிகப்படியான வெப்பத்தால் பலருக்கு தூக்கமின்மை பிரச்சனை ஏற்படும். எனவே இத்தகைய தூக்கமின்மை பிரச்சனையை சரிசெய்ய செர்ரிப் பழங்களை உணவில் சேர்த்து வர வேண்டும். இதனால் தூக்கம் நன்கு தூண்டப்படும். மேலும் செர்ரிப் பழங்கள் உடலில் கொழுப்புக்கள் சேர்வதைத் தடுக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Healthy foods you MUST add to your summer diet

Here are some foods that one must add to the summer diet for a healthy body.
Story first published: Saturday, April 25, 2015, 9:22 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter