For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மூளை ஆரோக்கியமா இருக்கணுமா? இதெல்லாம் சாப்பிடுங்க!

By Mayura Akilan
|

Power foods for brain
மனிதனின் தலைமைச் செயலகம் மூளைதான். அது ஆரோக்கியமாக இருக்கும் வரைதான் உயிரோட்டமான வாழ்க்கையை வாழ முடியும். மூளை செயலிழந்து விட்டால் மொத்த செயல்பாடும் குழப்பமடைந்துவிடும்.

ஒரு குறிப்பிட்ட வயதிற்குப்பின்னர் மூளையின் செயல்திறன் படிப்படியாக குறைகிறது. நினைவுச்செல்களின் செயல்பாடுகளில் ஏற்படும் மந்த நிலையிலானாலே மறதி, அல்சீமார் போன்றவை ஏற்படக்காரணமாகின்றன. எனவே சிறுவயதிலேயே சத்தான உணவுகளை உட்கொள்வதன் நமது மூளையை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முடியும் என்கின்றனர் நிபுணர்கள்.

மீன் சாப்பிடுங்க

அசைவ உணவுகளில் அதிக சத்து நிறைந்தது மீன் என்று உணவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். இதில் உள்ள ஒமேகா கொழுப்பு அமிலங்கள் மூளையின் வளர்ச்சிக்கு ஏற்றது. சல்மான், டுனா வகை மீன்களில் அதிக அளவில் ஒமேகா கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன.

மீனைப் போல முட்டையிலும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை மூளையின் செல்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும். இதில் உள்ள உயர்தர புரதம், வைட்டமின் இ போன்றவை மூளைக்கு தேவையான அளவு ஊட்டச்சத்தினை தருகின்றன.

சத்தான சாலட்

பச்சைநிற இலைகளைக் கொண்ட சாலட், காய்கறி சாலட் மூளைக்கு ஏற்ற உணவாகும். லெட்டூஸ், கீரைகள் மூளையின் ஆரோக்கியத்திற்கு ஏற்றது. அதேபோல் கேரட்,ப்ருக்கோலி, முட்டைக்கோஸ் போன்றவைகளை சாலட்களாக சாப்பிடுவதன் மூலம் மூளையை ஆரோக்கியமானதாக பலம் நிறைந்ததாக மாற்ற முடியும். இவை உயர்தர நார்ச்சத்து நிறைந்தவை. இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட்கள், வைட்டமின் சி, இ போன்றவை மூளையின் ஆரோக்கியத்தை பாதுகாக்கின்றன. இவைகளை சாலட்களாக சாப்பிடப் பிடிக்காதவர்கள் சூப் ஆக சாப்பிடலாம்.

பாதாம் பருப்பு

பாதம் பருப்பில் உயர்தர ஆன்டி ஆக்ஸிடென்ட்கள், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அடங்கியுள்ளன. தினசரி நான்கு பாதாம் பருப்பு சாப்பிடுவதன் மூலம் உடலுக்குத் தேவையான கலோரிகள் கிடைப்பதோடு மூளையும் ஆரோக்கியமானதாக இருக்கும்.

நினைவாற்றலுக்கு யோகர்ட்

யோகர்ட் சாப்பிடுவதன் மூலம் தேவையான அளவு அமினோ அமிலங்கள் கிடைக்கின்றன. இது நினைவாற்றலை அதிகரிக்கிறது. யோகர்ட் உடன் உலர் பருப்புகள், பழங்கள் கலந்து சுவையான உணவுகளைச் சாப்பிடுவதன் மூலம் மூளைக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும்.

சத்தான புளூபெரீஸ்

புளூபெரீசில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மூளையின் நினைவாற்றல் திறனை ஊக்குவிக்கிறது. மறதி நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் தங்களின் நினைவாற்றல் திறனை திரும்ப பெற புளூபெரிஸ் பழங்களை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

இந்த உணவுகளை அன்றாடம் சேர்த்துக்கொள்வதன் மூலம் மூளையின் ஆரோக்கியத்தை பாதுகாத்து அல்சீமர் போன்ற நோய் ஏற்படாமல் தடுக்கலாம்.

English summary

Power foods for brain | மூளை ஆரோக்கியமா இருக்கணுமா? இதெல்லாம் சாப்பிடுங்க!

A healthy mind is the key to a happier life. Keeping your mind happy with the right kind of food that can make it sharper, stronger and more efficient is a necessity. Eating power foods for the brain can help you keep diseases at bay.
 
Story first published: Thursday, September 13, 2012, 10:23 [IST]
Desktop Bottom Promotion