For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கோடையில் உடம்பை ஜில்லாக்கும் ஊட்டச்சத்து பானங்கள்!

By Mayura Akilan
|

Summer Tips
கோடை வெப்பத்தில் பெண்களின் உடலில் எண்ணற்ற பாதிப்புகள் ஏற்படும். உஷ்ணத்தினால் பாதிப்புகள் ஏற்படுக்கின்றன. ஒற்றைத்தலைவலி, பித்தம், வெள்ளைப்படுதல் போன்ற பாதிப்புகள் ஏற்படும். எனவே கோடையில் ஊட்டச்சத்து மிக்க பழரசங்களை பலருகுவதன் மூலம் கோடையை ஜில்லென சமாளிக்கலாம்.

திராட்சை பழ ரசம்

பெண்களுக்கு ஏற்ற ஊட்டச்சத்து மிக்க பானம் திராட்சை ரசம் இது கோடைகாலத்தில் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய், கருப்பை கோளாறுகளை சரியாக்கும். இதில் உள்ள நல்ல கொழுப்பு பெண்களின் முகத்தில் கரும்புள்ளிகள் ஏற்படுவதை தடுக்கிறது. இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்ஸ் ரத்த அழுத்த நோயை குணப்படுத்துவதோடு இறந்த செல்களை நீக்கி புத்துணர்ச்சியோடு ஆரோக்கியமான செல்களை தோற்றுவிக்கிறது. அதோடு கோடையில் ஏற்படும் வெப்பத்தை தணித்து குளிர்ச்சியை தருகிறது.

கிரீன் டீ

பெண்களுக்கு ஏற்ற சத்தான பானம் கிரீன் டீ. இது ஜீரணசக்தியை அதிகரிக்கும். அதோடு வெயில் காலத்தில் சருமத்தையும், கூந்தலையும் பாதுகாக்கும். சில்லென்ற கிரீன் டீயுடன் தேன், எலுமிச்சை சாறு கலந்து சாப்பிடுவது கோடை கால உஷ்ணத்தைப் போக்கி உடலையும், மனதையும் குளிர்ச்சியாக்கும்.

எலுமிச்சை ஜூஸ்

வெப்பத்தினால் உடலில் நீர் வற்றுவதோடு, நாவறட்சியும் ஏற்படும். எனவே எலுமிச்சையை சாறு பிழிந்து அதோடு சிறிதளவு தேனை சேர்த்து சாப்பிடலாம். இது அதிக கொழுப்பை குறைக்கும். இதனால் உடல் எடை குறைவதோடு, நீர்ச்சத்தையும் தக்கவைக்கும், அதோடு உடலை குளிர்ச்சியாக்கும்.

வெட்டிவேர் தண்ணீர்

மண்பானையில் தண்ணீர் நிரப்பி அதில் வெட்டிவேர் போட்டு ஊறவைத்து அந்த தண்ணீரை பருகுவதன் மூலம் உடலின் உஷ்ணத்தை போக்கும். பெண்களின் உடலில் குளிர்ச்சியை ஏற்படுத்துவதோடு சருமத்தை பாதுகாக்கும்.

இது பெண்களின் ஆரோக்கியத்தை காக்கும் சத்தான பானம் மட்டுமல்ல கோடையில் பெண்களின் உடலை குளிர்ச்சியாக்கும் பானமும் கூட.

English summary

Healthy Women Drinks To Beat Summer Heat! | கோடையில் உடம்பை ஜில்லாக்கும் ஊட்டச்சத்து பானங்கள்!

Healthy drinks in the supermarkets ensure nutritional supplement for the body but women need something which keeps them fit and energetic. This is because the nutritional needs of a woman differs from a man so they need a balance of nutrients, vitamins and minerals to cater to special needs of the body. As summer has come, body needs fluids to stay hydrated and fight summer heat!
Story first published: Friday, March 9, 2012, 17:26 [IST]
Desktop Bottom Promotion