For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பீட்சா சாப்பிட்டால் விந்துப்பை புற்றுநோய் வராது : ஆய்வில் தகவல்

By Mayura Akilan
|

Eating pizza really could be good for you
இன்றைக்கு ஆங்காங்கே பீட்ஸா கடைகள் முளைத்துள்ளன. இதை போகிற போக்கில் சாப்பிட்டு விட்டு போகின்றனர் இளைய தலைமுறையினர். இந்த பீட்ஸா சாப்பிட்டால் விந்து நீர்ப்பை சுரப்பி புற்று நோய் ஏற்படும் வாய்ப்பு குறையும் என்று அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் 36 பேரில் ஒருவர் விந்துப்பை புற்று நோயால் இறக்கிறார்கள். இந்த புற்று நோய்க்கு அறுவைசிகிச்சை , ரேடியேஷன் தெரப்பி, ஹார்மோன் தெரப்பி உள்ளிட்ட சிகிச்சைகள் இருந்தாலும், அவைகளினால் மோசமான பக்க விளைவுகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது.

ஆண்கள் வயது முதிரும் நிலையில் விந்து நீர் சுரப்பி பெரிதடைகிறது. இதனால் சிறுநீர் கழித்தலில் தடைகள் ஏற்படுகின்றன. அதுமட்டுமல்லாமல் இதன்காரணமாக புற்றுநோய் உருவாகிறது. இந்நிலையில் விந்துப்பை புற்று நோய் உருவாக்கும் செல்களை கொல்லும் தன்மை ஓமத்தில் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இது தொடர்பாக நியூயார்க்கின் லாங்க் ஐலேண்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களான சுப்ரியா பவதேகர் என்ற இந்தியர் மற்றும் அவரின் சக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். அதில், ஓமம் (Oregano) சேர்க்கப்பட்டு தயாரிக்கப்பட்ட பிஸா சாப்பிடுவதால் ஆண்களுக்கு ஏற்படும் ப்ரோஸ்டேட் கேன்சர் எனப்படும் விந்துப்பை புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு குறையும் என்று கண்டறியப்பட்டது.

தற்போது, இதுக்குறித்த ஆய்வு தொடக்க நிலையில் உள்ளது. மேலும், அடுத்தடுத்த சோதனைகள் வெற்றிகரமாக அமைந்தால் விந்துப்பை புற்றுநோய்க்கான சிகிச்சைக்கு ஓமம் சிறந்த மருந்தாகும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இந்த ஓமம் கலந்து செய்யப்படும் பிஸா சாப்பிடுவதனால் விந்துப்பை புற்றுநோயை கட்டுபடுத்தலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். ஓமத்தில் உள்ள கேர்வக்ரோல் (Carvacrol) என்ற வேதிப்பொருள் உள்ளது. இதுதான், புற்றுநோய் செல்களை கொல்கின்றன.

அதற்காக பிஸா மட்டுமே சாப்பிட்டால் புற்றுநோயை கட்டுப்படுத்தலாம் என்பது அர்த்தமாகி விடாது. குறிப்பாக இயற்கை தாவரங்கள், பழங்கள், காய்கறிகளில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன. இவற்றை கலந்து செய்யப்படும் உணவுகளால் நமக்கு நன்மை ஏற்படுகிறது என்பதை கருத்தில் கொள்ளவேண்டும். என்கின்றனர் ஆய்வாளர்கள்.

English summary

Eating pizza really could be good for you | பீட்சா சாப்பிட்டால் விந்துப்பை புற்றுநோய் வராது!

Eating pizza really could be good for you: Oregano seasoning could be a powerful weapon against prostate cancer
Story first published: Wednesday, May 2, 2012, 12:38 [IST]
Desktop Bottom Promotion