சர்க்கரை நோய் இருக்கா? நீங்க எந்த பழம் சாப்பிடலாம்-ன்னு சரியா தெரியலையா? இத படிங்க...

பழங்களை சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது. ஆனால் பல பழங்களில் கிளைசீமிக் இன்டெக்ஸ் அளவு அதிகம் உள்ளதால், சர்க்கரை நோயாளிகளுக்கு தாங்கள் எந்த வகையான பழங்களை சாப்பிடலாம் என்ற ஓர் கேள்வி மனதில் எழும்.

சர்க்கரை நோய் என்பது ஒரு நாள்பட்ட கோளாறு. இதில் இரத்த சர்க்கரை அளவானது அசாதாரணமாக உயர்ந்து, உடலின் வெவ்வேறு உறுப்புக்களை பாதிக்கிறது. சர்க்கரை நோய்க்கான முக்கியமான காரணம் இன்சுலின் போதுமான அளவு உற்பத்தி செய்யப்படாமல் இருப்பது. பல்வேறு வகையான சர்க்கரை நோய்கள் உடல் ஆரோக்கியத்தை பல்வேறு வகையில் தாக்குகின்றன. ஒருமுறை இரத்த சர்க்கரை அளவு உயர ஆரம்பித்துவிட்டால், அப்பிரச்சனையில் இருந்து முற்றிலும் குணமடைய முடியாது.

Which Fruit Is Good For Diabetes Patient

இந்தியாவில் மட்டும் 5 சதவீதத்திற்கும் அதிகமானோர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்பிரச்சனை உள்ளவர்கள் சரியான உணவுகளைத் தேர்ந்தெடுத்து, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வாழ்ந்து வந்தால், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம். சர்க்கரை நோய் இருந்தால், அனைத்து உணவுகளையும் சாப்பிட்டுவிட முடியாது. முக்கியமாக கிளைசீமிக் இன்டெக்ஸ் அதிகம் உள்ள உணவுகளைத் தவிர்த்தாக வேண்டும்.

பழங்களை சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது. ஆனால் பல பழங்களில் கிளைசீமிக் இன்டெக்ஸ் அளவு அதிகம் உள்ளதால், சர்க்கரை நோயாளிகளுக்கு தாங்கள் எந்த வகையான பழங்களை சாப்பிடலாம் என்ற ஓர் கேள்வி மனதில் எழும். ஆகவே தமிழ் போல்ட்ஸ்கை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடுவதற்கு ஏற்ற பழங்களின் பட்டியலைக் கொடுத்துள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆரஞ்சு

ஆரஞ்சு

ஆரஞ்சு பழங்களில் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக இருப்பதுடன், வைட்டமின் சி அதிகம் உள்ளது. அதோடு இதில் கொழுப்பும் மிகவும் குறைவு என்பதால், சர்க்கரை நோயால் அவஸ்தைப்படுபவர்கள் இந்த பழத்தை அச்சமின்றி சாப்பிடலாம்.

கிரான்பெர்ரி

கிரான்பெர்ரி

கிரான்பெர்ரி பழத்தில் ஆன்டி-ஆக்சிடன்ட், நார்ச்சத்து அதிகம் உள்ளது மற்றும் சர்க்கரை அளவு இதில் குறைவாக உள்ளது. எனவே இரத்த சர்க்கரை அளவை சீராக பராமரிக்க கிரான்பெர்ரி பழம் உதவி புரியும். அதோடு சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி சந்திக்கும் சிறுநீர் பாதை தொற்றை இந்த பழம் தடுக்க உதவும்.

பேஷன் பழம்/தாட்பூட் பழம்

பேஷன் பழம்/தாட்பூட் பழம்

பேஷன் பழத்தில் கரையக்கூடிய நார்ச்சத்தான பெக்டின் மற்றும் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. இது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. ஏனெனில் இந்த பழம் உடலில் உள்ள சர்க்கரையை உறிஞ்சி வெளியேற்றும்.

தர்பூசணி

தர்பூசணி

தர்பூசணிப் பழத்தில் 95 சதவீதம் நீர் உள்ளதால், இது உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்கிறது. இந்த பழத்தை சர்க்கரை நோயாளிகள் ஸ்நாக்ஸ் வேளையில் சாப்பிடலாம். இதனால் பசி வேதனையைக் குறைக்க உதவுவதோடு, உடலில் உள்ள குளுக்கோஸ் அளவை கண்காணிக்கும்.

ஆப்பிள்

ஆப்பிள்

தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடுவது நல்லது. ஏனெனில் ஆப்பிளில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு மிகவும் இன்றியமையாதது. ஆனால், ஆப்பிள் மிகவும் இனிப்பு சுவையுடையது என்பதால் சர்க்கரை நோயாளிகள் ஒரு நாளைக்கு பாதி ஆப்பிளுக்கு மேல் சாப்பிடக்கூடாது.

கிவி

கிவி

சர்க்கரை நோய் இருந்தால் முற்றிலும் சர்க்கரையைத் தவிர்க்கக்கூடாது. உடலின் செயல்பாடுகள் சிறப்பாக செயல்படுவதற்கு குறைந்த அளவிலாவது சர்க்கரை தேவைப்படுகிறது. கிவி பழத்தில் உடலுக்குத் தேவையான அளவில் சர்க்கரை உள்ளது. அதோடு இதில் வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்தும் அதிகம் உள்ளது. எனவே இந்த பழத்தை சாப்பிடுவது சர்க்கரை நோயின் தீவிரத்தையும், அபாயத்தையும் குறைக்கும்.

மாதுளை

மாதுளை

மாதுளையில் ஆன்டி-ஆக்சிடன்ட் மற்றும் இரும்புச்சத்து வளமான அளவில் உள்ளது. எனவே இதை சாப்பிடுவது, இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவி புரிந்து, நாள்பட்ட நோயான சர்க்கரை நோயை எதிர்த்துப் போராட உதவுகிறது.

கொய்யா

கொய்யா

கொய்யாப் பழத்தில் க்ளைசீமிக் இன்டெக்ஸ் மிகவும் குறைவு மற்றும் இதில் வைட்டமின் சி, நார்ச்சத்து போன்றவை அதிகமாக உள்ளது. எனவே இது சர்க்கரை நோயாளிகளுக்கான சிறந்த பழம். இந்த பழத்தை சாப்பிட்டால் பசியுணர்வு கட்டுப்படுத்தப்பட்டு, நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கும்.

ப்ளம்ஸ்

ப்ளம்ஸ்

30 கிராம் அல்லது ஒரு ப்ளம்ஸ் பழத்தில் 31 கலோரிகள் மற்றும் குறைவான க்ளைசீமிக் இன்டெக்ஸ் உள்ளதால், இது சர்க்கரை நோயாளிகள் சாப்பிட ஏற்ற அற்புதமான பழமாகும்.

ப்ளூபெர்ரி

ப்ளூபெர்ரி

ப்ளூபெர்ரியில் அந்தோசையனின் என்னும் ஒரு வகையான ஆன்டி-ஆக்சிடன்ட் மற்றும் ஃப்ளேவோனாய்டு வளமான அளவில் உள்ளது. இது தான் இப்பழத்தின் நிறத்திற்கு காரணம். மேலும் இப்பழத்தில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள், சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

ஸ்ட்ராபெர்ரி

ஸ்ட்ராபெர்ரி

ஸ்ட்ராபெர்ரியில் எலாஜிக் அமிலம் வளமான அளவில் உள்ளது. இது தான் சர்க்கரை நோயின் முக்கியமான அறிகுறியான இரத்தத்தில் உள்ள அதிகப்படியான சர்க்கரையைப் பராமரிக்கிறது. அதோடு, ஸ்ட்ராபெர்ரி பழத்தில் ஆன்டி-ஆக்சிடன்ட்டுகள் மற்றும் வைட்டமின்கள் அதிகமாக நிறைந்துள்ளன.

பப்பாளி

பப்பாளி

பப்பாளியில் ஆன்டி-ஆக்சிடன்ட்டுகள் அதிகம் உள்ளதால், இது சர்க்கரை நோயால் செல் சிதைவடைவதைத் தடுக்கிறது மற்றும் இதயம் மற்றும் நரம்பு பிரச்சனைகளின் அபாயத்தைக் குறைக்கிறது. ஆகவே இதுவும் சர்க்கரை நோயாளிகள் சாப்பிட ஏற்ற பழங்களுள் ஒன்றாகும்.

எலுமிச்சை

எலுமிச்சை

எலுமிச்சையில் வைட்டமின் சி அளவுக்கு அதிகமாக உள்ளது. இதில் கரையக்கூடிய நார்ச்சத்தும் உள்ளது. எனவே இந்த பழத்தை சர்க்கரை நோயாளிகள் உணவில் சேர்த்து வந்தால், அது உடலில் உள்ள க்ளுக்கோஸ் அளவை சீராக பராமரிக்க உதவும்.

பீச்

பீச்

வைட்டமின் சி அதிகம் நிறைந்த மற்றொரு பழம் தான் பீச். இதில் வைட்டமின் ஏ மற்றும் கரோட்டினாய்டு வளமான அளவில் நிறைந்துள்ளது. மேலும் இதில் உள்ள கரோட்டினாய்டு தான், டைப்-2 சர்க்கரை நோயின் அபாயத்தைக் குறைக்கிறது.

ராஸ்ப்பெர்ரி

ராஸ்ப்பெர்ரி

ராஸ்ப்பெர்ரி பழத்தில் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவும் நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்சிடன்ட் ஆகிய முக்கியமான இரண்டு சத்துக்களும் அதிகமாக உள்ளது. எனவே இந்த பழம் சர்க்கரை நோயாளிகளுக்கான பழங்களுள் ஒன்றாக கூறப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion