Latest Updates
-
நாக பஞ்சமி 2026: இந்த வருட நாக பஞ்சமி எந்த நாளில் வருகிறது? இந்த நாளில் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? -
வெஜ் கோலாப்பூரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு சூப்பரா இருக்கும் -
சனி-குரு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சுதந்திர தின ஸ்பெஷல் மூவர்ண பூரியும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 15 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டத்தின் சாவி கைக்கு வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 25-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்கு வருமானம் அதிகரிக்கப்போகுது! -
புதன் ஆயில்ய நட்சத்திரத்திற்கு செல்வதால் புது சொத்துக்களை வாங்கும் யோகமுள்ள 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்தன்று இந்த ஸ்டைலில் வாழ்த்துக்களை சொல்லுங்க.. -
தேசியக்கொடியின் நடுவில் அசோக சக்கரம் ஏன் நீல நிறத்தில் உள்ளது? அதில் ஏன் 24 ஆரங்கள் உள்ளது தெரியுமா? -
ரோட்டுக்கடை இட்லி தக்காளி சாம்பார் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. அள்ளும்..
எச்சரிக்கை! சர்க்கரை நோய்க்கு எடுக்கும் இந்த மாத்திரைகள் மாரடைப்பின் அபாயத்தை அதிகரிக்குமாம்...
சர்க்கரை நோயாளிகள் மத்தியில் மாரடைப்பு அதிகம் ஏற்படுகிறது. இதற்கு சர்க்கரை நோய்க்கு எடுக்கும் மருந்துகள் ஓர் காரணமாக கூறப்படுகிறது.
உலகிலேயே சர்க்கரை நோயின் தலைநகராக இந்தியா கருதப்படுகிறது. புள்ளி விவரங்களின் படி, இந்தியாவில் 2025 ஆம் ஆண்டிற்குள் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை 69.9 மில்லியனாகவும், 2030-க்குள் 80 மில்லியனாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எண்ணிக்கைகள் மிகவும் அச்சுறுத்தலாக இருக்கிறது தானே?

சர்க்கரை நோய் என்பது நாள்பட்ட வாழ்க்கைமுறை நிலையாகும். இது அனைத்து வயதினருக்கும் வரக்கூடியது. தற்போது குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை எல்லா வயதினரிடமும் சர்க்கரை நோய் காணப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் தற்போதைய தலைமுறையினரின் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் மோசமான உணவுப் பழக்கவழக்கங்கள் தான். மேலும் சர்க்கரை நோயாளிகள் மத்தியில் மாரடைப்பு அதிகம் ஏற்படுகிறது. இதற்கு சர்க்கரை நோய்க்கு எடுக்கும் மருந்துகள் ஓர் காரணமாக கூறப்படுகிறது. இப்போது இதுக்குறித்து விரிவாக காண்போம்.

சர்க்கரை நோய்க்கான மருந்துகள் இதயத்திற்கு ஆபத்தானதா?
டைப்-2 சர்க்கரை நோயாளிகளுக்கு பொதுவாக இரண்டு மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. இவை இரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இருப்பினும், அதே மருந்துகள் மாரடைப்பு, இதய செயலிழப்பு மற்றும் பக்கவாதம் போன்ற இதய பிரச்சனைகளின் அபாயத்தை அதிகரிக்கும் திறன் கொண்டவை என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.

எந்த சர்க்கரை நோய்க்கான மருந்துகள் இதயத்திற்கு ஆபத்தானது?
டைப்-2 சர்க்கரை நோய்க்கான மருந்துகளான சல்போனிலூரியாஸ் மற்றும் பாசல் இன்சுலின் போன்றவை திடீர் இதய செயலிழப்பு மற்றும் மாரடைப்புக்கு வழிவகுக்கும் அளவுக்கு இதயத்தை சேதப்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது. ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, சல்போனிலூரியாஸ் என்ற மருந்து உடலில் அதிக இன்சுலின் வெளியிட காரணமாகிறது. இந்த மருந்துகள் மெட்ஃபோர்மினுக்குப் பிறகு இரண்டாவது வரிசை மருந்துகள் ஆகும். இது டைப் -2 நீரிழிவு நோய்க்கு சிகிச்சையளிக்க உலகம் முழுவதும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

இந்த ஆய்வு எங்கு வெளியிடப்பட்டது?
இதுக்குறித்த ஆய்வு JAMA நெட்வொர்க் ஓபன் இதழில் வெளியிடப்பட்டது. இதில் டைப்-2 சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் மேலே குறிப்பிடப்பட்டுள்ள 2 மருந்துகளில் ஒன்றை எடுத்ததில், இந்த மருந்துகளை எடுக்காதவர்களை விட 36% அதிக இதய நோய்களை உருவாக்கும் அபாயம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஆய்வில் டைப்-2 சர்க்கரை நோய் உள்ள 45 முதல் 64 வயதுடையவர்கள் கலந்து கொண்டனர். இதில் சர்க்கரை நோய்க்கான மருந்தான் சல்போனிலூரியாஸ் எடுப்பவர்களுக்கு கிட்டத்தட்ட 36% அபாயம் இருப்பது கண்டறியப்பட்டது. அதே வேளையில் மற்ற சர்க்கரை நோய் மருந்தான பாசல் இன்சுலின் எடுப்பவர்களுக்கு இதய நோய் மற்றும் பக்கவாதத்திற்கான அபாயம் இரண்டு மடங்கு அதிகம் இருப்பது கண்டறியப்பட்டது என்று ஆய்வாளர்கள் மேற்கோள் காட்டியுள்ளனர்.

தவறவிடக்கூடாத இதய நோயின் எச்சரிக்கை அறிகுறிகள்
இதய நோய்களுக்கு சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், அது அபாயகரமானதாக மாறும். எனவே இதய நோயின் ஆரம்ப அறிகுறிகளை ஒவ்வொருவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம். கீழே ஒருவரும் தவறவிடக்கூடாத சில இதய நோயின் எச்சரிக்கை அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவை:
* படபடப்பு
* அதிகப்படியான வியர்வை
* நாள்பட்ட நெஞ்சு வலி
* தலைவலி
* சீரற்ற இதயத்துடிப்பு
* மூச்சுவிடுவதில் சிரமம்

சர்க்கரை நோய் மற்றும் இதய நோய்களின் அபாயம்
சர்க்கரை நோயாளிகள் எப்போதுமே அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். அதுவும் இரத்த அழுத்த பிரச்சனை கொண்ட சர்க்கரை நோயாளிகள் இன்னும் கவனமுடன் இருக்க வேண்டும். இவர்கள் தான் அதிக இதய நோயால் பாதிக்கப்படுகின்றனர். ஏனென்றால், இரத்த அழுத்தத்துடன் உயர் இரத்த ரத்த சர்க்கரை இருக்கும் போது, அது தமனிகளின் சுவர்களின் அதிக அழுத்தத்தைக் கொடுத்து தமனி சுவர்களை சேதப்படுத்துகிறது. இதன் விளைவாக இதய நோயின் அபாயம் அதிகரிக்கிறது.

சர்க்கரை நோயாளிகள் தங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பது எப்படி?
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் போது இதயத்தை ஆரோக்கியமாகவும், மனதை மகிழ்ச்சியாகவும் வைத்திருப்பது மிகவும் முக்கியம். அதற்கு சில வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் உணவு மாற்றங்கள் நம்பமுடியாத அளவில் உதவி புரியும். சர்க்கரை நோயாளிகள் தங்களின் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க பின்வரும் உணவு வழிகாட்டுதல்களை தவறாமல் பின்பற்றி வந்தால் மாயங்கள் நிகழும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். அது தினமும் 5 அல்லது அதற்கு மேற்பட்ட பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிட வேண்டும். மேலும் முழு தானியங்களால் ஆன பிரட், செரில்கள் போன்றவற்றுடன் அதிக பருப்பு வகைகள் மற்றும் பீன்ஸ் சேர்க்க வேண்டும்.



Click it and Unblock the Notifications