Latest Updates
-
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்!
உங்களுக்கு சர்க்கரை நோய் வரக்கூடாதா? அப்ப 'இத' அடிக்கடி குடிங்க போதும்....
ஒருவரது ஆரோக்கியமான வாழ்வில் உணவும், வாழ்க்கை முறையும் முக்கிய பங்காற்றுகிறது. எனவே சரியான உணவுகளைத் தேர்ந்தெடுத்து சாப்பிடுவதைத் தவிர, இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவும் பானங்களைக் குடித்து வர வேண்டும்.
சர்க்கரை நோய் அல்லது நீரிழிவு நோய் என்பது இந்தியாவில் பொதுவாக காணப்படும் ஆரோக்கிய பிரச்சனைகளில் ஒன்றாகும். இந்த நாள்பட்ட நோயானது கணையம் இன்சுலினை குறைவாகவோ அல்லது சுரக்காமலோ இருக்கும் போது ஏற்படுகிறது. இந்நிலையில் இரத்த சர்க்கரை சேமிப்பிற்காக செல்களுக்குள் நுழைய முடியாமல் போகிறது. இதன் விளைவாக சிக்கல்களை சந்திக்க நேரிடுகிறது.

இந்தியாவில் சுமார் 31,705,000 சர்க்கரை நோயாளிகள் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு மதிப்பிட்டுள்ளது. மேலும் 2030 ஆம் ஆண்டில் 100 சதவிகிதத்திற்கும் மேலாக 79,441,000 ஆக வளரக்கூடும் என்றும் கூறுகிறது. சர்க்கரை நோய் வருவதற்கு நமது மாறிவரும் வாழ்க்கை முறையே மிகப்பெரிய காரணங்களில் ஒன்றாகும். அதுவும் உடலுழைப்பு இல்லாத வாழ்க்கை முறையுடன், உயர் கலோரி உணவுகளையும் உண்ணும் போது, சர்க்கரை நோயின் அபாயம் அதிகரிக்கிறது.
ஒருவரது ஆரோக்கியமான வாழ்வில் உணவும், வாழ்க்கை முறையும் முக்கிய பங்காற்றுகிறது. எனவே சரியான உணவுகளைத் தேர்ந்தெடுத்து சாப்பிடுவதைத் தவிர, இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவும் பானங்களைக் குடித்து வர வேண்டும். இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க தண்ணீர் மிகச்சிறந்த தீர்வாக இருந்தாலும், சர்க்கரை நோய் வராமல் இருக்க வேண்டுமானால் ஒருசில மருத்துவ குணம் நிறைந்த பானங்களைக் குடிக்க வேண்டும். கீழே சர்க்கரை நோய் வராமல் இருக்க குடிக்க வேண்டிய பானங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

பாகற்காய் ஜூஸ்
பாகற்காய் ஜூஸ் சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்தது என்று கூறப்படுகிறது. இது உடலில் இரத்த சர்க்கரை அளவை சீராக்க உதவுகிறது. ஊட்டச்சத்து நிபுணரின் கூற்றுப்படி, பாகற்காய் ஜூஸ் இன்சுலினை செயல்படச் செய்கிறது. சர்க்கரை போதுமான அளவு பயன்படுத்தப்படும் போது, அது கொழுப்பாக மாற்றப்படாது மற்றும் இது உடல் எடையையும் குறைக்க உதவும். மேலும் பாகற்காய் ஜூஸில் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும் சாரன்டின் என்னும் செயலில் உள்ள பொருள் உள்ளது. அதிலும் ஒருவர் தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் பாகற்காய் ஜூஸ் குடிப்பது இரத்த சர்க்கரை அளவை சீராக்க மற்றும் நிர்வகிக்க பெரிதும் உதவும்.

வெந்தய நீர்
சர்க்கரை நோய்க்கான மிகவும் பயனுள்ள ஓர் இயற்கை வைத்தியப் பொருள் தான் வெந்தயம். ஆய்வு ஒன்றில், தினமும் பத்து கிராம் வெந்தய விதையை சுடுநீரில் ஊற வைத்து, நீருடன் வெந்தயத்தை உட்கொண்டு வந்தால், டைப்-2 சர்க்கரை நோய் கட்டுப்படுத்தப்படும் என்று கண்டறியப்பட்டுள்ளது. வெந்தய நீருக்கு சர்க்கரை நோயாளியின் உயர் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும் திறன் உள்ளது. மேலும் இதில் நார்ச்சத்து உள்ளதால், இது செரிமான செயல்முறையை மெதுவாக்குகிறது. மொத்தத்தில் வெந்தய நீர் உடல் சர்க்கரையைப் பயன்படுத்தும் முறையை மேம்படுத்த உதவுகிறது.

பார்லி நீர்
பார்லி நீரில் கரையாத நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. இது சர்க்கரை நோயாளிகளுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. ஏனெனில் இது சர்க்கரை குளுக்கோஸ் அளவை உறுதிப்படுத்த உதவுகிறது. இன்னும் சிறப்பான பலனைப் பெற பார்லி நீரில் இனிப்பு எதுவும் சேர்க்காமல் குடியுங்கள். மேலும் பார்லி நீரில் ஆன்டி-ஆக்சிடன்ட் பண்புகள் அதிகம் உள்ளதால், இது பல நோய்களைத் தடுக்க உதவுகிறது.

க்ரீன் டீ
பிஎம்சி மருந்தியல் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின் படி, ஆய்வில் பங்கேற்ற ஆரோக்கியமான பங்கேற்பாளர்களில் க்ரீன் டீ க்ளுக்கோஸ் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துவது தெரிய வந்தது. சர்க்கரை நோய் உள்ள எலிகளில் இரத்த சர்க்கரை அளவையும் இந்த பானம் குறைத்தது. சர்க்கரை நோயை நிர்வகிப்பதில் க்ரீன் டீ பயனுள்ளதாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறினாலும், இன்னும் கூடுதலான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறுகின்றனர்.

வெண்டைக்காய் நீர்
வெண்டைக்காயில் ஆன்டி-ஆக்சிடன்ட்டுகள் அதிகம் நிறைந்திருப்பதை தவிர, கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள் இரண்டும் வளமான அளவில் உள்ளன. ஆகவே இது உடைந்து செரிமானமாவதற்கு சற்று அதிகம் நேரம் எடுக்கும் என்பதால், இது சர்க்கரை நோயாளிகளுக்கான ஒரு சிறந்த காய்கறியாகும். அதுவும் வெண்டைக்காய் நீர் குடிப்பது மிகவும் நல்லது. அதற்கு 5 வெண்டைக்காயை நன்கு கழுவி, அதன் முனைகளை நீக்கிவிட்டு, இரண்டாக வெட்டி, ஒரு நீளமான டம்ளரில் போட்டு, அதில் நீரை நிரப்பி இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் எழுந்ததும் அந்நீரைக் குடிக்க வேண்டும்.

முடிவு
சர்க்கரை நோய் வராமல் இருக்க வேண்டுமானால், இந்த பானங்களை அடிக்கடி குடிப்பதோடு, ஆரோக்கியமான உணவுகளை உண்ணவும், சுறுசுறுப்பான வாழ்க்கையை வாழவும் மறக்காதீர்கள். முக்கியமாக சர்க்கரை நோய் உள்ளவர்கள் புதிதாக தங்களது உணவு முறையில் மாற்றம் செய்வதற்கு முன்பு மருத்துவரை அணுக வேண்டும்.



Click it and Unblock the Notifications