Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
கொரோனா லாக்டவுன் காலத்தில் இரத்த சர்க்கரை அளவு எகிறாமல் இருக்க சாப்பிட வேண்டிய உணவுகள்!
சர்க்கரை நோயாளிகள் சாப்பிடுவதில் தாமதமானால், அது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு ஆபத்தை உண்டாக்கிவிடும். ஆகவே இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் பராமரிக்க ஒருசில உணவுகளை எப்போதும் வைத்திருப்பது நல்லது.
தற்போது கொரோனா வைரஸ் பரவலால் ஒட்டுமொத்த இந்தியாவும் லாக்டவுனில் உள்ளது. இதுவரை 21 நாட்கள் தான் ஊரடங்கு இருந்தது. ஆனால் தற்போது இந்த மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. நீங்கள் சர்க்கரை நோயாளியாக இருந்தால், ஊரடங்கால் எங்கு நற்பதமான உணவுப் பொருட்கள் கிடைக்காமல் போகுமோ என்ற அச்சம் நிச்சயம் மனதில் எழலாம். ஆனால் அதிர்ஷ்டவசமாக நற்பதமான பழங்கள் மற்றும் காய்கறிகள் தொடர்ச்சியாக கிடைக்கிறது.

சர்க்கரை நோய் பராமரிப்பில் டயட் முக்கிய பங்கை வகிக்கிறது. இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டுமானால், ஆரோக்கியமான உணவுகளை உண்ண வேண்டும். ஆனால் லாக்டவுன் காலத்தில், வெளியே எங்கும் செல்ல வேண்டிய அவசியம் இல்லாததால் சோம்பேறித்தனம் அதிகரித்து, சமைத்து சாப்பிட சற்று தாமதமாகலாம்.
சர்க்கரை நோயாளிகள் சாப்பிடுவதில் தாமதமானால், அது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு ஆபத்தை உண்டாக்கிவிடும். ஆகவே இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் பராமரிக்க ஒருசில உணவுகளை எப்போதும் வைத்திருப்பது நல்லது. இப்போது அந்த உணவுப் பொருட்கள் எவையென்று காண்போம்.

ஓட்ஸ்
ஒரு பௌல் ஓட்ஸை காலை உணவாக உட்கொள்வதால் உணவுக்கு பிறகு க்ளுக்கோஸ் மற்றும் இன்சுலின் ரெஸ்பான்ஸ் குறையும். இது இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துவதோடு, க்ளைசீமிக் கட்டுப்பாட்டை பராமரிக்கவும் உதவும்.

தர்பூசணி, முலாம் பழம்
அதிர்ஷ்டவசமாக, தர்பூசணி, முலாம் பழம் போன்றவை இப்போது கிடைக்கின்றன. இந்த பழங்களை நீங்கள் கடைக்கு செல்லும் போது கண்டால் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். இது மிகவும் ஊட்டச்சத்து நிறைந்த மற்றும் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தக்கூடிய பழங்களாகும்.

முட்டை
முட்டை ஊட்டச்சத்து நிறைந்தது மற்றும் நீண்ட நேரம் பசி எடுக்காமல் வயிற்றை நிரப்பி வைத்திருக்க உதவும். முட்டையின் மூலம் ஒரு நாளைக்கு தேவையான புரோட்டீன் சத்து உடலுக்கு கிடைக்கும். ஒரு சிறப்பான விஷயம் என்னவெனில், இது நீண்ட நாட்கள் சேகரித்து வைத்திருக்கக்கூடிய ஒரு உணவுப் பொருள்.

பருப்பு வகைகள்
பருப்பு வகைகளில் நார்ச்சத்து, காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் மற்றும் புரோட்டீன் போன்றவை உள்ளது. இந்த மூன்றும் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் இன்றியமையாத ஊட்டச்சத்துக்களாகும். ஆகவே பருப்பு வகைகளான பீன்ஸ், பட்டாணி, சுண்டல், கொண்டைக்கடலை போன்றவற்றை வாங்கி வைத்து, அன்றாடம் உட்கொள்ளுங்கள்.

பூண்டு
பூண்டை பச்சையாகவோ, சமையலில் சேர்த்தோ அல்லது சாலட்டிலோ சேர்த்து உட்கொள்ளலாம். பூண்டில் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும் உட்பொருட்கள் அடங்கியுள்ளன. மேலும் இது எளிதில் கிடைக்கக்கூடிய மற்றும் சமையலறையில் கட்டாயம் இருக்கும் முக்கியமான உணவுப் பொருளும் கூட.



Click it and Unblock the Notifications