Just In
- 30 min ago
இன்றைய ராசிப்பலன் (23.01.2021): இன்று இந்த ராசிக்காரர்கள் தங்களது காதலை வெளிப்படுத்த உதந்த நாளாம்…
- 11 hrs ago
சுவையான... பன்னீர் போண்டா
- 12 hrs ago
உங்களின் அதீத உடலுறவு வேட்கை உங்கள் திருமண வாழ்வை எப்படி அழிக்கும் தெரியுமா?
- 12 hrs ago
இதுல ஒன்ன தேர்வு செய்யுங்க... உங்களோட ஸ்ட்ராங் சைடு என்னன்னு நாங்க சொல்றோம்...
Don't Miss
- Automobiles
வாங்க ஆள் இல்லை... இந்திய சந்தையில் 'டல்' அடிக்கும் மஹிந்திரா மராஸ்ஸோ எம்பிவி காரின் விற்பனை...
- News
இளைஞர்களின் எதிர்காலம் என்னாவது...? அனைத்து வழக்குகளையும் திரும்பப்பெறுக -ஸ்டாலின்
- Finance
முதல் பாலிலேயே சிக்சர் அடித்த பைடன்.. அமெரிக்க நிறுவனங்கள் வரவேற்பு..!
- Movies
நாக்கை வெளியில் நீட்டி க்யூட்டான போஸ்.. மனதை பறி கொடுத்த ரசிகர்கள்!
- Sports
நம்பர் 1 டீமை சந்திக்கும் ஈஸ்ட் பெங்கால்.. ஜெயிக்க முடியுமா? சவாலான போட்டி!
- Education
பட்டதாரி இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு! ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் அரசாங்க வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அட வெங்காயத்த தினமும் இப்படி செஞ்சா சாப்பிட்டா சர்க்கரை நோய் வராதாமே? சூப்பர்ப்பா...
ஒவ்வொரு ஆண்டும் இறப்பவர்களின் பெரும்பான்மையினர் நீரிழிவு பாதிப்பைக் கொண்டுள்ளனர். அதாவது நீரிழிவு பாதிப்பு ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் உயிரைப் பறித்துக் கொண்டிருக்கிறது. நீரிழிவு நோயால் பாதிக்கப்படும் நோயாளிகள் தங்கள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
நீரிழிவின் காரணமாக, உடல் பருமன், சிறுநீரக செயலிழப்பு, இதய நோய் போன்ற பாதிப்புகள் உண்டாகலாம். உங்கள் உடல் ஆரோக்கியத்தில் உணவு ஒரு முக்கியமான இடத்தைப் பிடிக்கிறது. குறிப்பாக நீரிழிவு நோயால் பாதிக்கப்படுவோர் கடுமையாக உணவு அட்டவனையை பின்பற்றுவதன் மூலம் ஆரோக்கியமாக வாழ முடியும்.
உங்களுக்கு ஒன்று தெரியுமா உங்களுடைய தினசரி உணவிலும் டயட்டிலும் அதிக அளவில் வெங்காயம் சேர்த்துக் கொண்டீர்கள் என்றால் ரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்குமாம். குறிப்பாக டைப் 2 நீரிழிவு ஏற்படாமல் தடுக்கும் ஆற்றல் இந்த வெங்காயத்திற்கு இருக்கிறதாம். அது எப்படி என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

குறைந்த கார்போஹைட்ரெட்
வெங்காயத்தில் கார்போ சத்து குறைவாக உள்ளது. அரை கப் நறுக்கிய வெங்காயத்தில் 26 கலோரிகள் மற்றும் 5.9 கிராம் கார்போ சத்து உள்ளது. அதிக கர்போஹைட்ரெட் எடுத்துக் கொள்வதன் பக்க விளைவு டைப் 2 நீரிழிவு. வெங்காயத்தில் கார்போ சத்து குறைவாக இருப்பதால், நீரிழிவு பாதிப்பிற்கு இது ஒரு சிறந்த தீர்வாக உள்ளது. குறைந்த கார்போ டயட் , உங்கள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதில் உதவுகிறது. வெங்காயத்தில் கார்போ சத்து குறைவாக இருப்பதால் இதனை தைரியமாக உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

நார்ச்சத்து
வெங்காயத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. அதனால் நீரிழிவு பாதிப்பிற்கு மிகவும் ஏற்றது. நார்சத்து உணவுகள் மிகவும் தாமதமாக உடைக்கப்பட்டு, செரிமானம் ஆவதால், இரத்த ஓட்டத்தில் சர்க்கரை வெளியீடும் தாமதமாகிறது. நார்ச்சத்து மிக்க உணவுகள் உங்கள் குடல் பகுதியை சுறுசுறுப்பாக இயங்க வைக்கிறது . நீரிழிவில் ஒரு பொதுவான பிரச்சனையாகக் கருதப்படும் மலச்சிக்கலைக் கட்டுப்படுத்துகிறது. உயர் நார்ச்சத்து உணவுகள் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது, இதனால் இதய நோய்க்கான அபாயம் குறைக்கப்படுகிறது.

குறைவான க்ளைகமிக் குறியீடு
ஒரு குறிப்பிட்ட உணவை எடுத்துக் கொண்டவுடன், இரத்த ஓட்டத்தில் அதன் தாக்கத்தை கணக்கிடுவது க்ளைகமிக் குறியீடாகும். வெங்காயத்தின் க்ளைகமிக் குறியீடு 10 என்பதால், இது நீரிழிவு நோய்க்கு மிகச் சரியான உணவாக கருதப்படுகிறது. 55ஐ விட குறைவான க்ளைகமிக் குறியீடு கொண்ட உணவுகள் இரத்த ஓட்டத்தில் மெதுவாக சர்க்கரையை வெளியிடுகிறது.
MOST READ: காதுக்குள் இருக்கும் அழுக்கை பட்ஸ் இல்லாமலே எப்படி வெளியே எடுக்கலாம்?

வைட்டமின் மற்றும் கனிமங்கள்
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், அதிகமான வைட்டமின் மற்றும் கனிமங்கள் எடுத்துக் கொள்வதால் நன்மை அடையலாம் என்று பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன. வெங்காயத்தில் போதுமான அளவு வைட்டமின் சி சத்து உள்ளது. மேலும் வைட்டமின் ஏ, கே, போலேட், நியாசின் போன்ற ஊட்டச்சத்துகளும் வெங்காயத்தில் அதிகம் உள்ளது. மெக்னீசியம், ஜின்க், பொட்டாசியம், இரும்பு, பாஸ்பரஸ் போன்ற கனிமங்கள் வெங்காயத்தில் அதிகமாக உள்ளன.

நீரிழிவு பாதிப்பிற்கான வேறு சில குறிப்புகள்:
நீரிழிவு நோயால் உண்டாகும் சிக்கலைத் தடுக்க, இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாடுடன் வைத்து அடிக்கடி சோதித்துக் கொண்டே இருக்க வேண்டும். இரத்த சர்க்கரை அளவு குறைவாக இருப்பதால் நீரிழிவு தொடர்பான சிக்கல்கள் குறையும்.

உயர் புரத உணவுகள்
உயர் புரத உணவுகளை நீரிழிவு நோயாளிகள் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த புரதச் சத்து ஆற்றல் அளவை நிர்வகிக்க உதவும், இதுமட்டுமல்லாமல் உயர் வளர்சித மாற்ற விகிதத்தை நிர்வகிப்பதால் உடலின் தேய்மானம் சமநிலையில் வைக்கப்படும்

ரத்த அழுத்தம்
நீரிழிவு நோயாளிகள் இரத்த அழுத்த அளவை சோதித்துக் கொண்டு இருக்க வேண்டும். உயர் இரத்த அழுத்தம் மாரடைப்பு, சிறுநீரக செயலிழப்பு, கண் நோய்கள் போன்ற பல நோய்களுக்கு காரணமாக இருக்கலாம்.
MOST READ: கலவியில திருப்தி இல்லைனு கவலைப்படறீங்களா? இந்த டிப்ஸ ட்ரை பண்ணுங்க ஜோரா இருப்பீங்க

கண் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள்
நீரிழிவு பாதிப்பு, பாதங்களில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கலாம், இதனால் பாதத்தில் அல்சர் பாதிப்பு உண்டாகும் வாய்ப்புகள் ஏற்படலாம். நீரிழிவு நோயாளிகள் தங்கள் பாதத்தில் காயம் உள்ளதா என்பதைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
நீரிழிவு நோயாளிகள் கண் நோய் உள்ளதா என்பதை சோதிக்க வேண்டும். இந்த நோய், விழித்திரையில் உள்ள சிறிய இரத்த குழாய்களில் நீண்ட நாள் திரட்டப்பட்ட சேதங்களை உண்டாக்கலாம். வீண் சிக்கலைத் தவிர்க்க அடிக்கடி கண் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.