சர்க்கரை நோயை கவனிக்காமல் விட்டால் உண்டாகும் ஆபத்துகள் !

Written By:
Subscribe to Boldsky

சர்க்கரை நோய் உலகளவில் வேகமாய அதிகமாய் பரவிக் கொண்டிருக்கிற நோய். தொற்று நோய் கூட இவ்வளவு எளிதில் பரவுவதில்லை.

நமது ஒட்டுமோத்த வாழ்க்கை முறை மாறியதாலும், உணவுக் கலப்படம், செயற்கை இனிப்பு ஆகியவற்றாலும் மரபணுவில் உண்டான கோளாறினால் உண்டான நோய்களில் சர்க்கரை வியாதியும் ஒன்று.

ரத்தத்தில் குளுகோஸை கட்டுப்படுத்தும் இன்சுலின் சுரக்காமலேயே போனால் அது டைப் 1 சர்க்கரை வியாதி.

இன்சுலின் சுரந்தும் அது உபயோகிக்க முடியாமல் இருந்தால் அது டைப் 2 சர்க்கரை வியாதி.

இந்த சர்க்கரை வியாதிக்கு தினமும் மாத்திரை மருந்து என சாப்பிடுவதை விட சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்து தகுந்த உணவை சாப்பிட்டால் போதும்.

உங்கள் சர்க்கரை வியாதியை தகுந்த சிகிச்சை கொடுக்காவிட்டால் என்னாகும் தெரியுமா? தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கொலஸ்ட்ரால் மற்றும் ரத்தக் கொதிப்பு :

கொலஸ்ட்ரால் மற்றும் ரத்தக் கொதிப்பு :

ரத்தத்தில் குளுகோஸ் அளவு அதிகரிக்கும்போது, நல்ல கொழுப்பான HDL குறைந்துவிடும். இதனால் LDL அதிகரித்து, கொலஸ்ட்ராலை அதிகரிக்கச் செய்து விடும்.

ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும்போது ரத்த அழுத்தம் உயரும். இஅதனால் அதிக ரத்த அழுத்தம் உண்டாகி பக்க வாதம் வர வாய்ப்புகள் உண்டாகும்.

கண் பார்வை மங்கும் :

கண் பார்வை மங்கும் :

4 கோடிக்கும் அதிகமான மக்கள் சர்க்கரை வியாதியால் உண்டாகும் ரெட்டினோபதி என்னும் பார்வை திறன் குறையும் நோய்க்கு ஆளாகிறார்கள்.

அதிகரிக்கும் குளுகோஸ் அளவால் கண் நரம்புகள் பாதிக்கப்பட்டு அங்கே சிதைவை உண்டாக்கின்றன. அந்த பாதிப்பை சரிப்படுத்தும் விதமாக அங்கு புரோட்டின் ஒன்று சதைப் போல் உருவாகிறது. இதுவே கண் பார்வைத் திறன் குறைய காரணம்.

சிறு நீரகம் பழுதாகும் :

சிறு நீரகம் பழுதாகும் :

ரத்தத்தில் அதிகரிக்கும் குளுகோஸால் ரத்தம் அடர்த்தியாகும். இதனால் சிறு நீரகத்திலுள்ள நெஃப்ரானால் ரத்தத்தை வடிகட்ட முடியாமல் திணறும்.

அதோடு சிறு நீரகத்தில் அதிக அளவு புரோட்டின் வெளியேறிவிடும். இதனை கவனிக்காமல் அப்படியே விட்டால் 10 வருடங்களில் சிறு நீரகம் பாதித்து, இறுதியில் சிறு நீரகம் பழுதடையும் அபாயம் ஏற்படும்.

நரம்புகள் பாதிக்கும் :

நரம்புகள் பாதிக்கும் :

கை கால்களில் நடுக்கம் உண்டாகும். எல்லா இணைப்புகளில் வீக்கம், வலி உண்டாகும். நரம்புகளில் தேக்கம் உண்டாகி ரத்த ஓட்டம் பாதிக்கும். வலைப் பின்னல் போல் ஆங்காகே உருவாகிவிடும்.

பாதத்தை இழக்க நேரிடலாம் :

பாதத்தை இழக்க நேரிடலாம் :

தலையிலிருந்து பாதம் செல்லும் நரம்பு பாதிக்கப்படும்போது, பாதங்களுக்கு சரியாக ஊட்டம் மற்றும் ரத்தம் போகாததால் மரத்து போய், பாதங்களின் வடிவம் மாறும்.

ஷூ, அல்லது பாதத்தை மூடும் வகையில் போடும் செருப்புகளால் சிறிய காயம் அல்லது கொப்புளம் போல் உருவாகி, குணப்படுத்த முடியாத நிலையில் இறுதியில் பாதம் ஏன் கால்களைக் கூட இழக்க நேரிடும்.

 இதய நோய்கள் :

இதய நோய்கள் :

அதிக குளுகோஸ், ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் ஆகியவை இதயத்தில் ரத்த ஓட்டத்தை குறைக்கச் செய்யும். இதனால் பக்க வாதம், ஹார்ட் அட்டாக், மற்றும் இதர இதய நோய்களை உண்டாக்கும்.

வாழ் நாள் குறையும் :

வாழ் நாள் குறையும் :

சாதரணமாக சர்க்கரை வியாதி இல்லாதவர்கள் வாழும் வாழ் நாளைவிட 13 வருடங்கள் குறைவாகவே சர்க்கரை நோயாளிகளால் வாழ முடியும்.

நோயில் இறக்கும் மக்கள் தொகையில், சர்க்கரை வியாதியால் உண்டாகும் இறப்பு 7 வது இடம் பிடித்துள்ளது என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

What happens if you dont pay attention to Diabetes

Do you know the Impacts if you dont pay attention to Diabetes?
Story first published: Tuesday, October 4, 2016, 8:00 [IST]
Subscribe Newsletter