சர்க்கரை நோயை குணப்படுத்த அதிசயிக்கத்தக்க இயற்கை உணவுகள் !

By: Srinivasan P M
Subscribe to Boldsky

மனித உடல் தன்னகத்தே உள்ள கணையத்திலிருந்து இன்சுலின் எனப்படும் ஹார்மோனை சுரந்து சர்க்கரையை சக்தியாக மாற்றுகிறது. வளர்ச்சிதை மாற்றங்களால் இந்த கணையத்தில் ஏற்படும் கோளாறுகளால் இன்சுலின் சுரப்பு பாதிக்கப்படும்போது டயாபிடிஸ் மெலிடஸ் எனப்படும் சர்க்கரை நோய் உருவாகிறது.

உடம்பில் நீரிழப்பு, அடிக்கடி சிறுநீர் கழித்தல் மற்றும் சோர்வு ஆகியவை இந்த சர்க்கரை நோய்க்கான பொதுவான அறிகுறிகளாகும். உங்களுக்கு மருந்து தேவையா அல்லது இயற்கையாகவே இதனை சரி செய்ய இயலுமா என்பதெல்லாம் உங்களுக்கு வந்திருக்கக் கூடிய சர்க்கரை நோயின் வகையைப் பொறுத்து அமையும்.

டைப் 2 டையபிடிஸ் எனப்படும் இரண்டாம் வகை சர்க்கரை நோய் இருந்தால் இன்சுலின் சுரப்பு குறைந்து விடலாம் அல்லது சுரக்கின்ற இன்சுலின் பிரச்னையை சரிசெய்ய போதாமல் இருக்கலாம். எல்லா சர்க்கரை நோய் பாதிப்பிற்குள்ளானவர்களுக்கும் கூடுதல் இன்சுலின் தேவைப்படாது. சிலர் சரியான உணவுமுறை மற்றும் உடற்பயிற்சி மூலம் சர்க்கரையின் அளவை சரியாகப் பராமரிக்க முடியும். மூலிகைகள், கனிமச் சத்துக்கள் மற்றும் உயிர்ச் சத்துக்கள் (வைட்டமின்கள்) ஆகியவை சர்க்கரையின் அளவை சரியாக பராமரிக்க உதவுகின்றன.

சரியாக கவனிக்கப்படாத போது சர்க்கரை நோய் கண்கள், நரம்பு மண்டலம், ரத்த நாளங்கள், இதயம் மற்றும் பிற உடல் உறுப்புக்களை பாதிப்படையச் செய்யும். துரதிருஷ்டவசமாக இந்த கொடிய குறைபாட்டை பெரும்பாலானவர்கள் அறிகுறிகளை தாமதமாகவே உணருகின்றனர். எனினும் இந்தனை குணப்படுத்த இயலாது என்பதோடு உணவுக்கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி மூலம் மட்டுமே கட்டுக்குள் வைக்கமுடியும்.

இந்த சர்க்கரை நோய்க்கு மருந்து எடுத்துக்கொள்பவர்களில் பெரும்பாலானோர் தலைச் சுற்றல் மற்றும் தோல் தொடர்பான ஒவ்வாத பக்கவிளைவுகளை எதிர்கொள்கின்றனர்.

இதன் விளைவாக அனைவரும் சர்க்கரை நோயை குணப்படுத்த பல்வேறு முறைகளை தேர்வு செய்கின்றனர். இதனால் பாதிக்கப்பட்ட பலர் இயற்கையான முறையில் இதனை சரிசெய்ய விரும்புகின்றனர். இவர்களுக்கு பல இயற்கை மூலிகைகளும் ஹோமியோபதி மருந்துகளும் கைகொடுக்கின்றன.

எனவே இதுபோன்ற சில இயற்கை வழிமுறைகளைக் கொண்டு சர்க்கரை நோயை எதிர்கொள்ள மேலும் படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வெந்தயம்

வெந்தயம்

பல்வேறு மூலிகைகளைக் கொண்டு சர்க்காரி நோய் அறிகுறிகளை சரிசெய்ய முடிகிறது. அதில் மிகவும் முக்கியமான ஒன்று வெந்தயம். இது ரத்தத்தில் சர்க்கரை அளவை சரியாக வைப்பதுடன், சர்க்கரை ஏற்பையும் அதிகரித்து அதிகபட்ச சர்க்கரையை வெளியேற்ற உதவுகிறது.

சிகப்பு மிளகாய் (காய்ந்த மிளகாய்)

சிகப்பு மிளகாய் (காய்ந்த மிளகாய்)

மிளகாய் வற்றல் அல்லது காய்ந்த மிளகாய் ரத்த ஓட்டத்தை சீராக்க உதவும் ஒரு நல்ல மருந்து என்பதோடு ஒரு நல்ல ஊட்ட மருந்தாகவும் செயல்படுகிறது. இது ரத்த அழுத்தத்தை குறைத்து உடல் நலனையும் இதைய நலனையும் முன்னேற்றும்.

டண்டேலியன் அல்லது சீமைக் காட்டுமுள்ளங்கி

டண்டேலியன் அல்லது சீமைக் காட்டுமுள்ளங்கி

டண்டேலியன் எனப்படும் இந்த மூலிகை ஈரல் செயல்பாட்டை ஊக்குவித்து சர்க்கரையின் அளவை குறைக்க உதவும். இதன் சுவை சற்று புளிப்பாக இருந்தாலும் புத்துனர்ச்சியூட்டுவதாக இருக்கும். இதனை சூப் மற்றும் பல்வேறு உணவுகளை சமைக்கும்போது பயன்படுத்தினால் நல்ல பலன்களைப் பெற முடியும்.

பாகற்காய்

பாகற்காய்

பாகற்காயை பிழிந்து அதன் சாற்றை தினமும் ஒரு மேசைக்கரண்டி அளவிற்கு எடுத்துக்கொண்டால் ரத்தம் மற்றும் சிறுநீரில் சர்க்கரை அளவானது கட்டுக்குள் இருக்கும். இது பெரும்பாலான கடைகளில் கிடைப்பதுடன் மருந்துக்கடைகளில் டீ வடிவத்திலோ அல்லது மூலப் பொருளாகவோ கிடைக்கும்.

இலவங்கப் பட்டை

இலவங்கப் பட்டை

இந்த அருமையான வாசனைத் திரவியம் சர்க்கரையை குறைப்பதாக பல்வேறு ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஜர்னல் ஆப் டையபிடிஸ் கேர் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கை ஒன்றின்படி, தினமும் ஒரு சில கிராம்கள் இளவஞ்கப்பட்டையை எடுத்துக்கொள்வதன் மூலம் எவ்வாறு அவர்களின் ரத்தத்தில் சர்க்கரையின் அளவானது 30 சதவிகிதம் வரை குறைந்தது என இலவங்கப்பட்டையை எடுத்துகொள்ளாதவர்களின் சர்க்கரை அளவை ஒப்பிட்டு காட்டி நிரூபிக்கப்பட்டுள்ளது. அவர்களின் டிரிக்ளிசரைடு அளவுகள் எல்டிஎல் கொழுப்பு மற்றும் ஒட்டுமொத்த கொழுப்பு அளவுகள் 25 சதவிகிதத்திற்கும் அதிகமாக குறைந்திருந்தது. எப்படித் தெரியுமா? இதில் காணப்படும் குரோமியம் எனப்படும் கனிமம் இன்சுலின் செயல்பாட்டை அதிகரிக்கிறது. இதில் காணப்படும் பாலிபினால்கள் எனப்படும் ஆண்டிஆக்சிடெண்டுகள் ரத்தத்தில் உள்ள கட்டுப்பாடற்ற செல்களை சேர்த்து உங்களை கான்சர் மற்றும் பிற ரணங்களிளிருந்தும் காத்து சர்க்கரை நோய் மற்றும் இதய நோய்களிலிருந்தும் காக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Miraculous Foods To Cure Diabetes Naturally

Miraculous Foods To Cure Diabetes Naturally
Please Wait while comments are loading...
Subscribe Newsletter