சனி, ஞாயிறு படுக்கையே கதின்னு இருப்பவரா நீங்க? ரொம்ப நல்லது இதப்படிங்க!!!

Posted By:
Subscribe to Boldsky

இது முக்கியமாக ஐ.டி-யில் வேலை செய்யும் நபர்கள் படிக்கச் வேண்டியது. ஆம், அவர்கள் தான் வாரத்தில் ஐந்து நாட்கள் தங்கள் உறக்கத்தை தொலைத்து, வார இறுதியில் இரண்டு நாட்கள் கும்பகர்ணன் போல, "போதும்-டா சாமி.." என கும்பிடு போட்டு உறங்குபவர்கள்.

இந்தியர்களுக்கு ஏன் அதிகமாய் சர்க்கரை நோய் அபாயம் ஏற்படுகிறது என்று தெரியுமா???

சமீபக் காலமாக ஆரோக்கியமான நபர்களுக்கு கூட நீரிழிவு பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஸ்லிம்மாக தான் இருப்பார், டயட் மேற்கொள்வார்கள் ஆனால் நீரிழவு நோய் பாதிப்பு இருக்கும். பொதுவாகவே, டயட்டும், உடல் எடை அதிகமாக இருப்பது தான் நீரிழிவு ஏற்பட முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

ஓயாமல் வேலை செய்யும் ஐ.டி.வாசியா நீங்க...?

ஆனால், இந்த திடீர் உடல்நல மாற்றம் ஏற்படுவது ஏன்? வார இறுதியில் அதிகமாக உறங்குவதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன? என்று தெரிந்துக் கொள்ளுங்கள்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வார இறுதியில் நல்ல தூக்கம்

வார இறுதியில் நல்ல தூக்கம்

ஸ்லிம்மாக இருப்பார்கள், உடல்திறனும் நன்கு தான் இருக்கும், டயட் எல்லாம் சரியாக பின்பற்றுவார்கள். ஆனாலும், அவர்களுக்கு நீரிழிவு பாதிப்பு ஏற்பட்டிருக்கும், இதற்கு காரணம் வார இறுதியில் அதிகமாக உறங்குவது தான் என கூறுகிறார்கள்.

சிகாகோ பல்கலைக்கழகம்

சிகாகோ பல்கலைக்கழகம்

அதிக நேரம் வேலை செய்யும் பழக்கம் உடையவர்கள், திடீரென அதிக நேரம் உறங்குவதை பற்றி சிகாகோ பல்கலைகழகத்தினர் ஓர் ஆய்வை நடத்தினர்.

நேரம் மாறுதல்

நேரம் மாறுதல்

தொடர்ச்சியாக ஒரே மாதிரி வேலை செய்து வருபவர்கள். திடீரென இரண்டு, மூன்று நாட்கள் நன்கு தூங்குவது உடல்நிலையில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.

நீரிழிவு

நீரிழிவு

சாதாரணமாக நீங்கள் இரவு உறங்கும் நேரத்தில் இருந்து ஓரிரு நாட்கள் மட்டும் நான்கைந்து மணிநேர மாற்றம் எற்பதுவது, நீரிழிவு சதவீதத்தை 16% வரை உயர்த்துகிறதாம்.

வளர்ச்சிதை மாற்றங்கள்

வளர்ச்சிதை மாற்றங்கள்

இரண்டு நாட்கள் நன்கு உறங்கிவிட்டு, மற்றநாள் தூக்கத்தை தொலைப்பது உடலில் வளர்ச்சிதை மாற்றத்தை சீர்குலைக்கிறது என ஆய்வாளர் ஜோஷியேன் (Josiane Broussard ) கூறியுள்ளார். அதாவது வாரத்தில் ஐந்து நாட்கள் உறக்கமே இன்றி இருந்துவிட்டு, வார இறுதியில் இரண்டு நாட்கள் அதிகமாக உறங்கும் நபர்களுக்கு இந்த தாக்கம் ஏற்படுகிறது.

அதிர்ச்சி

அதிர்ச்சி

இது குறித்து ஆய்வாளர் எஸ்ரா (Esra Tasali),"வேலை நாட்களில் குறைவாக உறங்கும் நபர்கள், வார இறுதியிலும் அதையே கடைப்பிடியுங்கள், இல்லையேல் நீங்கள் ஆரோக்கியமாக இருப்பினும் கூட நீரிழிவு அபாயம் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது" என கூறியுள்ளார்.

மற்ற பிரச்சனைகள்

மற்ற பிரச்சனைகள்

நாள்பட போதிய தூக்கமின்மை காரணத்தால் நீரிழிவு மட்டுமின்றி உயர் இரத்த அழுத்தமும் வர வாய்ப்புகள் இருக்கிறதாம். அறிவாற்றல் சார்ந்த பிரச்சனைகளும் வரலாம் என்று கூறப்படுகிறது.

அக்கறை அவசியம்

அக்கறை அவசியம்

எனவே, உறக்கத்தை சாதாரணமாக கருத வேண்டாம். வேலை நாட்கள் மற்றும் வார இறுதி என 24x7-ம் சரியான அளவு உறங்கி, எழும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Extended weekend sleep can counteract increased diabetes risk

Extended weekend sleep can counteract increased diabetes risk, read here in tamil.