For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டைப் 2 சர்க்கரை வியாதிக்கு பலன்களைத் தரும் மூலிகைகளை தெரிந்து கொள்ள இதைப் படியுங்கள்

By Hemalatha
|

சர்க்கரை வியாதியில் டைப் 1 மற்றும் டைப் 2 டயாபடிஸ் என்று வகைப்படுத்தலாம். ரத்தத்தில் குளுகோஸ் அளவை கட்டுப்படுத்துவது இன்சுலின் என்ற ஹார்மோன் தான். அந்த ஹார்மோன் சுரக்காமலிருந்தால், ரத்தத்தில் குளுகோஸின் அளவு அதிகமாகும். இந்த வகை சர்க்கரை வியாதிக்கு, டைப் 1 டயாபடிஸ் என்று பெயர்.

இதே இன்சுலின் உடலில் சுரந்தாலும் அது செயல்படாமல் இருந்தால் ரத்தத்தில் சர்க்கரையில் அளவை அதிகரிக்கச் செய்யும். இந்த மாதிரியான சர்க்கரை வியாதி டைப் 2 டயாபடிஸ் என்று பெயர். எந்த வயதிலும் வரலாம். இந்த வியாதி மரபு சார்ந்தும் வரலாம்.

Ayurvedic remedies for type 2 diabetes

டைப் 2 டயாபடிசின் அறிகுறிகள் :

உடல் எடை திடீரென இளைக்கும், எனர்ஜி குறைந்து காணப்படுவார்கள், அடிக்கடி சிறு நீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு இருக்கும், தாகம் எடுத்துக் கொண்டேயிருக்கும். கண்பார்வை குறைதல் என இவை எல்லாம் அறிகுறிகள் ஆகும்.

பாதிப்புகள் :

இந்த நோயினால் கால் வீக்கம் அடிக்கடி ஏற்படும். காயங்கள் எளிதில் குணமாகாது. மேலும் இந்த நீரழிவினால் வாழ்க்கை முறையையே மாற்றிக் கொள்ள வேண்டியதன் அவசியமும் அடங்கியுள்ளது. உணவுக் கட்டுப்பாடு, மாத்திரை மருந்துகள் என காலம் முழுவதும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும்.

மாத்திரை மருந்துகளை விட இயற்கை முறையிலும் நீரழவினை கட்டுபடுத்தலாம். ஆயுர்வேதத்தில் எண்ணற்ற தீர்வுகள் உள்ளன.

வேப்பிலை :

கசப்பாய் இருக்கிற உணவு வகைகள் அனைத்தும் இந்த இனிப்பான வியாதிகளுக்கு எதிர் குணம் கொண்டுள்ளவை. அவை குளுகோஸின் அளவை கட்டுக் கொண்டு வரும் அளவு சக்தியைக் கொண்டது. அதில் வேப்பிலையும் அடங்கும்.

நிம்பிடின் என்ற பொருள் வேப்பிலையில் உள்ளது. அது குளோஸின் அளவினை கட்டுப்படுத்துகிறது. வேப்பிலையை அரைத்து உருண்டைகளாக காய வைத்து தினமும் ஒரு வில்லையாக எடுத்துக் கொண்டால், சர்க்கரையின் அளவு எப்போது ரத்தத்தில் கட்டுப்பாடோடு இருக்கும். அல்லது வேப்பிலை ஜூஸாகவும் குடிக்கலாம்.

நெல்லிகாய் :

நெல்லிக்காய் விட்டமி சி அதிகம் கொண்டது. நிறைய மருத்துவ குணங்களைக் கொண்டதுதான் நெல்லிக்காய். ஆன்டி ஆக்ஸிடென்ட் நிறைந்த கனியாகும். இது இன்சுலின் செயலை தூண்டும் ஆற்றலைக் கொண்டது.

நெல்லிக்காயை ஜூஸாக குடித்தால் அற்புத பலன்களைத் தரும். தேவையெனில் நெல்லிக்காய் பொடியை தினமும் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்கலாம்.

சிறு குரிஞ்சான் இலை :

சிரு குரிஞ்சான் இலையை ஆயுர்வேதத மருத்துவத்தில் இந்த டைப் 2 நீரழிற்கு பயபடுத்துகிரார்கள் . ஃப்ரஷான இந்த இலையை நான்கு வெறும் வாயினில் மென்று சாப்பிடலாம். சிலருக்கு இதன் கசப்பு சுவை பிடிக்கவில்லையென்றால். சிறு குரிஞ்சான் பொடி நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்.

அந்த பொடியைக் கொண்டு தேநீர் தயாரித்து, சுவைக்காக பட்டை ஏலக்காய் கலந்து பருகலாம். மிக நல்ல பலன்களை இந்த இலை தரும் என்பதில் சந்தேகமில்லை.

பாவைக்காய் :

பாவைக்காயில் பைடோ நியூட்ரியன்ட் உள்ளது. இது ரத்தத்தில் அதிகரிக்கும் குளுகோஸினை கல்லீரலுக்கும், தசைகளுக்கும் அனுப்புகிறது. அங்கே அவைகள் எனர்ஜியாக மாற்றப்பட்டு உபயோகப்படுத்தப்படுகின்றன. இதனால் ரத்தத்தில் குளுகோஸின் அளவு குறைகிறது.

பாவைக்காயை உணவில் தினமும் எடுத்துக் கொள்ளலாம். கசப்பாய் இருந்தாலும் பாவைக்காய் ஜூஸ் குடித்தால், இந்த நோய் தன் வாலை சுருட்டிக் கொண்டு அடங்கி இருக்கும்.

வெந்தயம் :

தினமும் 20 கிராம் வெந்தயத்தை உணவில் சேர்த்துக் கொண்டால், சர்க்கரை வியாதியை கட்டுப்படுத்தலாம். இரவில் சிறிது வெந்தயத்தை ஊற வைத்து மறு நாள் நீருடன் வெந்தயத்தை மென்று வெறும் வயிற்றில் சாப்பிட்டால் இந்த நோய் உங்களுக்கு இருக்கிறதா என்றே உங்களால் நினைக்க முடியாது. அவ்வளவு பலனைத் தரும்.

சர்க்கரை வியாதி வந்தவுடன் குணப்படுத்த முடியாது. ஆனால் கட்டுக்குள் கொண்டு வரலாம். வந்துவிட்டதே என நொந்து கொள்ளாமல், பழங்கள், காய்கறி, கீரை வகைகளை அன்றாடம் உணவில் சேர்த்து சாப்பிட்டு ,வந்தால்,இந்த நோய் இருப்பதையே மறந்து , ஆரோக்கியமாய் வாழ்வீர்கள்.

English summary

Ayurvedic remedies for type 2 diabetes

Ayurvedic remedies for type 2 diabetes
Desktop Bottom Promotion